Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருமாரியம்மன் புற்று கோயிலில் மாசி ... திருப்பரங்குன்றம் கோயிலில் பாரி வேட்டை திருவிழா! திருப்பரங்குன்றம் கோயிலில் பாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1936ம் ஆண்டுக்கு பின் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2015
10:02

திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடை அம்மன் உடனாய ஒற்றீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று, கோலாகலமாக நடைபெற்றது. திருவொற்றியூரில் இந்து சமய அறநிலைய துறை நிர்வாகத்தில், வடிவுடையம்மன் உடனாய ஒற்றீஸ்வரர் கோவில் உள்ளது.

Default Image

Next News

இது, தியாகராஜ சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. மிகவும் பழமையானதும், தேவார மூவரால் பாடல் பெற்றதுமான இந்த கோவிலில், 3 கோடி ரூபாய் செலவில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணி முடிந்த நிலையில், கடந்த 15ம் தேதி விநாயகர் பூஜையுடன், கும்பாபிஷேக நிகழ்ச்சி துவங்கியது. தனபூஜை, சாந்தி பூஜை, மூர்த்தி ஹோமம், சம்ஹிதா ஹோமம், கோபூஜை, கன்யா பூஜை, வாஸ்து தோஷம் நீக்கும் பூஜை மற்றும் திசா ஹோமங்கள் நடைபெற்றன. மகாசிவராத்திரியை ஒட்டி 108 சங்காபிஷேகம், ஒற்றீஸ்வரருக்கு நான்குகால சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. கடந்த, 20ம் தேதி அஷ்டபந்தனம், முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்கின. யாகசாலையில், 60 குண்டங்கள், 36 வேதிகைகள் அமைக்கப்பட்டன. நேற்று முன்தினம், 305 விக்கிரகங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. வடிவுடையம்மன் பீடத்தில், புதிதாக சுவர்ண பந்தனம் சாத்தப்பட்டது. நான்காம் கால யாகசாஜை பூஜை, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு துவங்கியது. சோமகும்ப பூஜை முடிந்து, 420 புனிதநீர் திருக்குடங்கள் யாகசாலைகளிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, அனைத்து சன்னிதிகளின் விமானங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு, காலை 7:33 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தங்க திருவடிகள்: அப்போது, 200 பேர் சங்கு வாத்தியத்தை முழங்கினர். சென்னை மற்றும் புறநகர் பகுதியிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வடிவுடையம் மமனுக்கு தங்கத்தாலான இரண்டு திருவடிகள், பக்தர் ஒருவரால், சமர்ப்பிக்கப்பட்டது. கோவிலின் மூத்த அர்ச்சகர் ஒருவர் கூறுகையில்,”இந்த கோவிலில், 1998ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தில் ஒற்றீஸ்வரர் சன்னிதி இடம்பெறவில்லை. 1936ம் ஆண்டுக்கு பின் தற்போதுதான் ஒற்றீஸ்வரர் சன்னிதிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar