Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாரியம்மன் தெப்ப உற்சவம்! நித்ய கல்யாண பெருமாள் கோவில்பிரம்மோற்சவ விழாவில் தீர்த்தவாரி! நித்ய கல்யாண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்காரு அடிகள் பிறந்த நாள் விழா: 7 லட்சம் செவ்வாடை பக்தர்கள் குவிந்தனர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2015
12:03

மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகள் பிறந்த நாள் விழாவில், ஏழு லட்சம் செவ்வாடை பக்தர்கள் நேற்று கலந்து கொண்டனர். அதிகாலை 4 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

Default Image

Next News

காலை 8 மணிக்கு, பெற்றோரின் படங்களுக்கு தீபாராதனை காட்டி, பங்காரு அடிகள் வழிபட்டார். மலர் அலங்கார ரதத்தில், அவரை ஊர்வலமாக அழைத்து வந்தபோது செவ்வாடை பக்தர்கள், ஓம்சக்தி, பராசக்தி என்று கோஷங்கள் எழுப்பினர். கலை நிகழ்ச்சிகளோடு ஊர்வலமாக வந்தனர். காலை 8:30 மணிக்கு, சித்தர் பீடம் வந்த அடிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.கருவறைக்கு சென்று, ஆதிபராசக்தி அம்மனை அடிகள் வழிபட்டார். பின், பிறந்த நாள் கேக் வெட்டி, மனைவி லட்சுமி, மகன்கள் செந்தில்குமார், அன்பழகன் மற்றும் பேரக் குழந்தைகளுக்கு அவர் ஊட்டினார்.

சிறப்பு அலங்கார மேடையில் அடிகள் அமர்ந்து, பக்தர்களுக்கு ஆசிவழங்கினார். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தணிக்காசலம் உட்பட நீதிபதிகள், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னை ரேவதி கிருஷ்ணா வீணை இசையும், காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் ராமநாதன் குழுவினர் சாக்ஸபோன் இசை நிகழ்ச்சியும் நடந்தது. ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி வளாகத்திலிருந்து, 3 கி.மீ., தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று, அடிகளிடம் ஆசி பெற்றனர். 5,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பக்தர்களுக்கு அன்னதானம், பழ வகைகள், குழந்தைகளுக்கு பால், பிஸ்கட், குளிர்பானங்கள், தண்ணீர் வழங்கப்பட்டன.ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க இளைஞர் அணி சார்பில், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் சேலம், நாமக்கல் மாவட்டங்களின் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவத்தில் ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.பழநியில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar