Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2) தாராள வளர்ச்சி! கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) கல்வியில் வளர்ச்சி!
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) கல்வியில் வளர்ச்சி!

பதிவு செய்த நாள்

15 ஏப்
2015
02:04

தனித்தன்மை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

தற்போது ராசிக்கு 10ல் உள்ள சுக்கிரன் மே 3ல் இருந்து நன்மை தர உள்ளார். புதன் ஏப். 26 ல் இருந்து சாதகமான இடத்திற்கு மாறி நன்மை வழங்குவார். மற்ற கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும், துணிவுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பு மேலோங்கும். குடும்பத்துடன் விருந்து விழா என சென்று வருவீர்கள். உறவினர்கள் வருகையால் நன்மை உண்டாகும். மே 3க்கு பிறகு கையில் அதிக பணம் புழங்கும். தொழிலதிபர்கள், வியாபாரிகள் சிறப்படைவர். ஏப். 26க்கு பிறகு லாபம் உயரும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனங்கள் முன்னேற்றம் பெறும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். ஏப். 14 மே 10,11ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும்.

பணியாளர்கள் உழைப்புக்கேற்ற பலனைப் பெறுவர். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை எளிதில் நிறைவேறும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.

கலைஞர்களுக்கு, மாதத் தொடக்கத்தில் ஒப்பந்தம் பெற முயற்சி தேவை. தொழில் போட்டி மே 3க்கு பிறகு மறையும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

மாணவர்களுக்கு இந்த மாதம் நற்பலன் உண்டாகும். புதனால் ஏப். 26 க்கு பிறகு கல்வி வளர்ச்சி ஏற்படும். திட்டமிட்டுப் படித்து தேர்வை உற்சாகமுடன் எழுதுவர். விடுமுறை கால படிப்புக்கு இப்போதே திட்டமிட்டால், நல்ல நிறுவனங்களில் சேர வாய்ப்பு கிடைக்கும்.

விவசாயிகளுக்கு கரும்பு, எள், காய்கறி போன்றவை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு விடாமுயற்சி தேவைப்படும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். ஏப். 26க்கு பிறகு குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். மே 3,4ல் புத்தாடை, நகைகள் வாங்குவர். மே 2க்கு பிறகு அண்டை வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும்.

நல்ல நாள்: ஏப். 14, 15, 16, 21, 22, 23, 24, 28, 29  மே  3, 4, 10, 11, 12, 13.

கவன நாள்:  ஏப்.17, 18 மே 14 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்டம் எண்:  6,7                  நிறம்: வெள்ளை, பச்சை

பரிகாரம்: செவ்வாயன்று முருகனை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும். ஞாயிறன்று ராகு காலத்தில் பைரவரை வழிபடுங்கள். ப”வுக்கு ப”ந்தழை இடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar