மகத்தான காலத்தை எதிர்நோக்கி இருக்கும் மகர ராசி அன்பர்களே!
உங்கள் எண்ணம் ஈடேற இம்மாதம் உறுதுணையாக அமையும். 11-ம் இடத்தில் சனி, 9-ம் இடத்தில் ராகு, 7-ம் இடத்தில் குரு ஆகியோரின் பக்க பலத்தோடு பல்வேறு நன்மைகளை தற்போது கண்டு கொண்டிருக்கிறீர்கள். மேலும் புதன் ஏப். 26 வரையும், சுக்கிரன் மே 3 வரையும் சாதகமான பலனைக் கொடுப்பார்கள். எடுத்த செயலில் முன்னேற்றம் ஏற்படும். துரிதமாக எதையும் செய்து முடித்து பலன் பெறலாம். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். மதிப்பு, மரியாதை சிறப்படையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும்.
பணியாளர்கள் அதிக சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவர். மே 3,4 சிறப்பான நாட்களாக அமையும். ஏப்.26க்கு பிறகு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். சிரத்தை எடுத்தால்தான் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் கூடும். ஆனால், அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பயணம் ஏற்படலாம். சிலர் வணிகத்தை வெளிநாடு வரை விரிவுபடுத்தலாம். ஏப். 25,26,27ல் எதிர்பாராத பணவரவு இருக்கும்.
கலைஞர்கள் உற்சாகமான பலனை காண்பர். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மே 3க்கு பிறகு முயற்சிகளில் தடை வரலாம்.
அரசியல்வாதிகள் சீரான நிலையில் இருப்பர்.
மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காணலாம். ஏப். 26க்கு பிறகு சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.
விவசாயிகளுக்கு கால்நடை செல்வம் பெருகும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப்போகும்.
பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பர். அண்டை வீட்டார் அனுசரணை உதவியாக இருக்கும். ஏப்ரல் 17,18ல் பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பயணத்தின் போது கவனம் தேவை. மே 2க்கு பிறகு பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.
நல்ல நாள்: ஏப். 14, 17, 18, 23, 24, 25, 26, 27, மே 3, 4, 5, 6, 7, 10, 11, 14.