Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேளம் கொட்ட நேரம் வரும்! மனசை பாத்துக்க நல்லபடி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த இரண்டில் நீங்கள் யார்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2015
05:04

மன உறுதியோடுவாழ்வேன். கடவுள்என்னைக் காத்துக்கொண்டிருக்கிறார்.என்ன நடந்தாலும்நான் மனம் தளரப்போவதில்லை. கடவுளின்கரம் என்னைத் தாங்கிக்கொண்டிருக்கிறது என்றஉறுதியுடன் வாழுங்கள். உங்களை வழிநடத்தஇது ஒன்று மட்டுமேபோதும் அறுவடை சமயத்தில் விவசாயிகள் முறத்தில் தானியத்தைப் போட்டு உயரமான இடத்தில் நின்றபடி சலிப்பார்கள். அப்போது என்ன ஆகும் தெரியுமா? உமி காற்றில் அடித்துச் செல்லப்படும். தானியம் தரையில் விழும். அதே போல் வாழ்வில் எழும் சந்தர்ப்ப சூழ்நிலையைக் கண்டு பயந்தால் உமி போல காணாமல் போய் விடுவீர்கள். எந்த சூழலிலும் அமைதியை இழக்காமல் மன உறுதியுடன் செயல்பட்டால் மட்டுமே நம்மால் காலுõன்றி நிற்க முடியும். எல்லாம் நன்றாக நடக்கும் என்ற நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை. கடவுள் நம்மிடம் அசைக்க முடியாத நம்பிக்கையை மட்டுமே எதிர்பார்க்கிறார். கஷ்ட நேரத்தில் நம்பிக்கையற்றுப் போனால், உமியைப் போலாகி விடுவீர்கள். உங்களிடம் ஒரு கேள்வி, உமியா? தானியமா? நீங்கள் யார்? என்பதே. வாழ்வில் எத்தனையோ சம்பவங்கள் நிகழ்கின்றன. அப்போதெல்லாம் மனச் சமநிலையில் இருக்க முடிகிறதா? இன்பம், துன்பம் இரண்டும் கலந்ததே உலகம். நம்பிக்கையில் நிலைத்தால் மட்டுமே தானியம் போல பயன்பாட்டுக்கு உரியவராக இருப்பீர்கள். மன உறுதியோடு வாழ்வேன். கடவுள் என்னைக் காத்துக் கொண்டிருக்கிறார். என்ன நடந்தாலும் நான் மனம் தளரப் போவதில்லை. கடவுளின் கரம் என்னைத் தாங்கிக் கொண்டிருக்கிறது என்ற உறுதியுடன் வாழுங்கள். உங்களை வழிநடத்த இது ஒன்று மட்டுமே போதும். இந்த உலகம் அன்பால் நிரப்பப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அன்பு நிறைந்து உள்ளது. இந்த கண்ணோட்டத்துடன் உலகத்தை எதிர் கொள்ளுங்கள். கூட்டத்தில் இருக்கும் போது அக்கூட்டத்தை நோக்கி, எல்லாம் அன்பு மயமானது என்று எண்ணுங்கள். இதில் தொடர் முயற்சி இருந்தால் அன்பை உங்களால் உணர முடியும். இந்த உலகம் முழுவதிலும் கொண்டாட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. கிளிகளும், குயில்களும் இசைத்துக் கொண்டிருக்கின்றன. எங்கும் மகிழ்ச்சி நிறைந்திருக்கிறது. நகர்ந்து கொண்டிருக்கும் ஊர்வலத்தின் நடுவில், பதுமைகள் போல நாமும் சென்று கொண்டிருக்கிறோம். இப்போது எல்லோரும் அன்பு வடிவானவர்கள் என்பதை ஒருமுறை மனதில் நினைத்துப் பாருங்கள். உலகிலுள்ள எல்லாமே உயர்வு, தாழ்வுக்கு உட்பட்டவையே. இந்த இயற்கை விதியை யாரும் மாற்ற முடியாது. உடம்பு என்றால் ஜலதோஷம், இருமல், ஜுரம் எல்லாம் வரும்.. போகும். ஆனால், மகிழ்ச்சி என்பது மட்டும் மனதில் என்றும் நிலைக்க வேண்டும். அன்பும், பக்தியும், நம்பிக்கையும் ஆழமாக மனதில் வேரூன்றியிருக்க வேண்டும். பிறகு தானாக எல்லாம் நல்லதாக முடியும். (மகான் ஸ்ரீ.ஸ்ரீ. ரவிசங்கர்ஜி.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar