Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி மலையில் ரூ.4 கோடியில் ... குடந்தை மகாமகத்தை தென்பாரத கும்பமேளாவாக கொண்டாட அகில பாரத துறவியர் சங்கம் வேண்டுகோள்! குடந்தை மகாமகத்தை தென்பாரத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பணிகள் எப்போது முடியும் : இந்து அறநிலையத்துறை சிவ சிவ!
எழுத்தின் அளவு:
திருப்பணிகள் எப்போது முடியும் : இந்து அறநிலையத்துறை சிவ சிவ!

பதிவு செய்த நாள்

29 மே
2015
11:05

புதுச்சேரி: வரதராஜப்பெருமாள், வேதபுரீஸ்வரர் கோவில்களின் திருப்பணி தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பணிகள் நிறைவு பெறாததால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.

புதுச்சேரி, காந்தி வீதியில் அமைந்துள்ள, பிரசித்திப் பெற்ற வரதராஜப் பெருமாள் கோவில் 1998 ஜூலை 6ம் தேதியும், வேதபுரீஸ்வரர் கோவில் 1999 ஜூன் 23ம் தேதியும் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகள் கடந்து விட்டதால் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருப்பணிக்காக வேதபுரீஸ்வரர் கோவிலில், 2012 அக்டோபர் 29ம் தேதியன்றும், வரதராஜப் பெருமாள் கோவிலில், நவம்பர் 30ம் தேதியும் பாலாயணம் செய்யப்பட்டது.

குழு அமைப்பு: பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி தலைமையில் தொழில் நுட்பக் குழுவினர், இரு கோவில்களிலும், 14.5 கோடி ரூபாய் செலவில், திருப்பணிகள் மேற்கொள்ள மதிப்பீடு தயார் செய்தனர். இந்து அறநிலையத்துறையின் ஒப்புதல் ஓராண்டுக்கு பின்பு, 2013ம் ஆண்டில் கிடைத்தது. அதன்பின்பு திருப்பணிகள் துவங்கியது.

வேதபுரீஸ்வரர் கோவில்: கோவில் உட்புறத்தில் 32 சன்னதிகளை கொண்ட பிரம்மாண்ட கோவிலில் பக்தர்கள் கொடுத்த பொருளுதவி மூலம் இதுவரை, கோவில் ராஜகோபுரம் புனரமைத்து வண்ணம் பூசப்பட்டுள்ளது. நடராஜர் சன்னதி புதுப்பித்தல், பைரவர், சூரியன், சந்திரன் சன்னதிகளில் அபிஷேகம் செய்யும் வகையில் பெரியதாக கட்டுதல் உள்ளிட்ட பணிகள் துவங்கப்படவில்லை.

வரதராஜபெருமாள் கோவில்: ஆஞ்ஜநேயர் சன்னதி, ஊஞ்சல் அலங்கார மண்டபம் புதுப்பித்தல், ராமர் சன்னதி மேல்தளம் புதிதாக அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. ராஜகோபுரத்திற்கு வண்ணம் பூசுதல் பணிகள் முடிந்துள்ளது. இடதுபுற மேல்தளம் அமைக்கும் பணி முடிந்த பின்பு, மூலவர் சன்னதி புதுப்பிக்கும் பணி துவங்கப்பட உள்ளது.

அறங்காவலர் குழு இல்லை: மணக்குள விநாயகர் கோவிலில் நிர்வாக அதிகாரி இருந்தாலும் அறங்காவலர் குழு நியமித்து திருப்பணி செய்யப்பட்டது. அது போல் வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு ௩௦ பேர் கொண்ட திருப்பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வரதராஜபெருமாள் மற்றும் வேதபுரீஸ்வரர் கோவில்களுக்கு அறங்காவலர் குழுவோ, திருப்பணிக்குழுவே நியமிக்கவில்லை. அப்படி நியமித்திருந்தால் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்களை சந்தித்து, கோவில் திருப்பணிக்கான நிதியை திரட்டி இருப்பர். அதை இந்து அறநிலையத்துறை செய்யத்தவறிவிட்டது.

குறைந்த வாடகை: வேதபுரீஸ்வரர், வரதராஜபெருமாள் கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக நகரப்பகுதியில் 17க்கும் மேற்பட்ட மாடி வீடுகளும், ஏராளமான கடைகளும் உள்ளன. 10 ஆயிரம் ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை வாடகை விடக்கூடிய வீடுகளில், சில அரசியல் பிரமுகர்கள், அரசு உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் மாதம் 500 ரூபாய், 600 ரூபாய் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப, கோவிலுக்கு சொந்தமான வீடுகளின் வாடகையை உயர்த்தவும், இந்து அறநிலையத்துறை முன்வரவில்லை.

பொதுமக்கள் திருப்பணிக்காக தங்களால் முடிந்த காணிக்கையை கோவிலில் செலுத்தலாம் அல்லது தனி அதிகாரி, வேதபுரீஸ்வரர் வரதராஜர்பெருமாள் கோவில் தேவஸ்தானம், புதுச்சேரி என்ற முகவரிக்கு டி.டி., அல்லது காசோலைகளை அனுப்பலாம்.

திருக்காமீஸ்வரர் கோவில்: தருமபால சோழனால் கட்டப்பட்ட, பழமைவாய்ந்த கோவிலான திருக்காமீஸ்வரர் கோவில் 11 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணி மேற்கொள்ள கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி பாலாயணம் நடந்தது. அரசு வழங்கிய 3.5 கோடி ரூபாய் செலவில், கோவிலின் உட்புற வேலைகள், முருகன் சன்னதி புனரமைக்கப்பட்டுள்ளது. மூலவர் சன்னதியைச் சுற்றி கருங்கல் துாண்கள் அமைத்து, காற்றோட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேற்கு, கிழக்கு, தெற்கு கோபுரங்கள் புனரமைத்து வண்ணம் பூச வேண்டும், கோவில் குளம், மண்டபம் புனரமைக்கும் பணிகள் துவக்கப்படவில்லை.

அரசு நிதி வழங்க அவசியமில்லை

இந்து அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல் கூறியதாதவது:

வரதராஜபெருமாள், வேதபுரீஸ்வரர், கோவில்களுக்கு அரசின் நிதி வழங்குவதற்கான அவசியம் ஏற்படவில்லை. அனைத்து பணிகளும் பக்தர்கள் நன்கொடை வழங்கியதில் இருந்தே மேற்கொள்ளப்படுகிறது. நன்கொடை கிடைக்கவில்லை; கோவில் பணி செய்ய நிதி வேண்டும் என கோவில் நிர்வாக அதிகாரி கோரிக்கை விடுத்தால், இந்து அறநிலையத்துறை மூலம் கோவில் பெயரில் உள்ள டெபாசிட் பணத்தின் வட்டி தொகை வழங்கப்படும்.

திருப்பணிகளுக்கு எப்போதும் கால நிர்ணயம் செய்து முடிக்க முடியாது. ஆகம விதிப்படி, ஒவ்வொரு சிலையும் பழமை மாறாமல் புனரமைக்க வேண்டும். வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணிகள் முடித்து, வரும் நவம்பர் மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வேதபுரீஸ்வரர் கோவில் திருப்பணிகள் முடிக்கப்படும். வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் திருப்பணிகளுக்கு, அரசு 55 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளது. இதுதவிர திருப்பணி குழுவினர் ஏராளமான நன்கொடை பெற்று கோவில் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இக்கோவில் திருப்பணி முடிந்து, வரும் 2016 ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
பாலக்காடு : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், 30 யானைகள் அணிவகுத்து நின்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar