Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எம புராணம் வருண புராணம் வருண புராணம்
முதல் பக்கம் » அட்டதிக்குப் பாலகர்கள் புராணம்
நிருதி புராணம்!
எழுத்தின் அளவு:
நிருதி புராணம்!

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2015
05:06

இவன் தென்மேற்குத் திசைக் காவலன். இவன் இருந்தாளும் பட்டிணம் கிருஷ்ணாங்கனை என்பது இவனது தேவி தாகினி எனப்படும் தீர்க்கா தேவி. செவ்வாம்பல் நிறத்தினன். கத்தியை ஆயுதமாக உடையவன். அசுரர்களின் தலைவன். மனித உடலும், சிம்ம முகமுடைய, பூத வாகனத்தை ஊர்தியாகக் கொண்டவன். நிலம் என்னும் பூமிக்கு அதிதேவதையாய் இருப்பவன். பஞ்ச பூதங்களில் ஒருவன். வாரணாசி வழித்தடத்தில், நர்மதா நதிக்கரையில் அமைந்த, அடர்ந்த ஆரண்யத்தில், பிங்கலாட்சன் என்னும் புலிந்தன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் வேடர் தலைவனானாலும். வல்லவனானாலும் நல்லவன். வழிப் போக்கர்களைத் துன்புறுத்தாதவன். புலி, சிங்கம், கரடி முதலிய துன்புறுத்தும் விலங்குகளைக் கொன்று வழிப்போக்கர்களுக்கு வசதி செய்து கொடுப்பவன். தன்னால் இயன்ற உணவு. இருக்கை முதலியவைகளைக் கொடுத்து உதவுவான்.

அவனுடைய சிற்றப்பன் ஒருவன் கொடிய குணத்தினன். வழிப்போக்கர்களைக் கொன்று அவர்கள் கொண்டு சென்ற பணம் முதலிய உடைமைகளைப் பறித்து வந்தான் அவனுடன் பிங்கலாட்சன் போரிட்டு அக்கொடுமையைத் தடுத்த போது உயிரிழந்தான். இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பெற்றான். திசைக்காவலன் பதவியும் பெற்றான். இவனைத் தொழுதால் இவன் பூமிக்கு அதிபதியாகையால் மக்கள், நிலம், தோப்பு, தோட்டம் முதலிய உடைமைகளைப் பெற்று இன்புறலாம்.

1. நிவ்ருதி பூஜா சங்கிரகம்

1. ஓம்-ஹாம்-நிருதி-ஆசனாய நம;
2. ஓம்-ஹாம்-நிம்-நிருதி-மூர்த்தியே நம;
3. ஓம்-ஹாம்-நிம்-தாகினி சகிதாய-நிவ்ருதியே நம;

2. காயத்திரி:

ஓம் நிசாச்ராய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ நிவ்ருதி ப்ரசோதயாத்

3. தியான சுலோகம்:

ரக்தநேத்ரச வாரூடம்
நீலோத்பல தளப்ரபம்
க்ருபாணம் பாணிமசௌகம்
பிபந்தம் ராக்ஷஸேச்வரம்

4. மூல மந்திரம்:

ஓம்-ஹாம்-நிம்-தாகினி சகிதாய-
கட்க ஹஸ்தாய-நிவ்ருதியே நம;

5. துதி:

பூத வாகனத்தில் பொருந்தி இருந்து
கட்கம் கேடயம் அபய வரதம்
கரத்தினில் கொண்ட அசுர உருவுடன்
இருந்தருள் புரியும் நிருதியை வணங்குவாம்

6. பிரார்த்தனை:

ரக்த நிலோற்பல வர்ண தேக பயங்கர
பூத வாகன ரூட கட்க கேடக கொடூர
ஹஸ்த தாகினி ஸகிதாய நிவ்ருத்தி தேவ
ஆன்மார்த்த, பரார்த்த, கும்பாபிஷேக
பூஜா க்ரியாயாம் சர்வ மங்கள சித்திம் அநுக்ரஹாணாம்

நிருதி அஷ்ட சத அர்ச்சனா 108

குறிப்பு: இந்திர அஷ்ட சத அர்ச்சனாவில் கூறியுள்ள. முறையைப் பின்பற்றுக.

1. ஓம் நிருத்தியை நம;
2. ஓம் நிர்ருதா தீசாய நம;
3. ஓம் ரக்ஷாய நம;
4. ஓம் ரக்ஷோ கனேஸ்வராய நம;
5. ஓம் கோண பாய நம;
6. ஓம் கோண வாசிநே நம;
7. ஓம் க்ருவ் யாய நம;
8. ஓம் க்ருவ்யாச நாதியாய நம;
9. ஓம் அசுராய நம;
10. ஓம் ஸ்ரவராய நம;
11. ஓம் யமவாதிகா ஸ்ரயாய நம;
12. ஓம் அஸ்ர யாய நம;
13. ஓம் ரக்த வஸ்த்ராட்யாய நம;
14. ஓம் ரக்தா க்ஷாய நம;
15. ஓம் ரதிலால சாய நம;
16. ஓம் பாசிதக்ஷிண பார்ஸ்வஸ்தாய நம;
17. ஓம் பலி மித்ராய நம;
18. ஓம் ந்ரு வாகநாய நம;
19. ஓம் ராத்ரீம் சராய நம;
20. ஓம் காள ராகு மித்ராய நம;
21. ஓம் ரசாதி தெய்வதாய நம;
22. ஓம் நிகும்பிலா ஹோமதுஷ்டாய நம;
23. ஓம் ரக்த மால்யா நுலேபநாய நம;
24. ஓம் சூக்ர சிஷ்யாய நம;
25. ஓம் பூர்வ தேவாய நம;
26. ஓம் தைத் யாய நம;
27. ஓம் ஸம்பன தோசணாய நம;
28. ஓம் அபிசார க்ரயா தீசாய நம;
29. ஓம் குமுதேஹோ பரிஸ்திதாய நம;
30. ஓம் காளீ பதயே நம;
31. ஓம் குந்த தராய நம;
32. ஓம் குருவிந்த மணிப்ரியாய நம;
33. ஓம் குலாபிமா நரகிதாய நம;
34. ஓம் குபேர பிரிய காரகாய நம;
35. ஓம் காளிகா பூசனா சக்தாய நம;
36. ஓம் கரவீர சுமப்ரியாய நம;
37. ஓம் புண்ய சீலாய நம;
38. ஓம் புண்ய கராய நம;
39. ஓம் புருசூத ப்ரியம் கராய நம;
40. ஓம் ஈசாந சம்முகா சீநாய நம;
41. ஓம் ஜயிநே நம;
42. ஓம் ரட்சோவதீ ப்ரபவே நம;
43. ஓம் கர் புராய நம;
44. ஓம் காளிகா பக்தாய நம;
45. ஓம் கல்யாண புணசம்யுதயா நம;
46. ஓம் கபர்தீ பூசநா சக்தாய நம;
47. ஓம் கூடயுக்த விசாரதாய நம;
48. ஓம் கலாபி ஜ்ஞாய நம;
49. ஓம் கால சாகாய நம;
50. ஓம் நீதிக் ஞாய நம;
51. ஓம் நியதேந் திரியாய நம;
52. ஓம் தச க்ரீவ சகாய நம;
53. ஓம் தாந்தாய நம;
54. ஓம் நீல வர்ணாய நம;
55. ஓம் அநுசூய காய நம;
56. ஓம் ஸ்வவ்யூக ரட்சகாயநம;
57. ஓம் வ்யூகர கௌஸலாய நம;
58. ஓம் குலோசித மகாவேசாய நம;
59. ஓம் குமுதாட்சாய நம;
60. ஓம் கடோர பாதாய நம;
61. ஓம் பிங்கள சமஸ்ருளாய நம;
62. ஓம் க்ரூர திருஷ்டயே நம;
63. ஓம் குடில மாநசாய நம;
64. ஓம் தேவ தைத்ய சமாய நம;
65. ஓம் தேவ கண பூஜ்யாய நம;
66. ஓம் நிரா க்ரகாய நம;
67. ஓம் நித்ய நந்தாய நம;
68. ஓம் நிரீ ஹாய நம;
69. ஓம் நிகசாத் மசாய நம;
70. ஓம் நிராம் சாய நம;
71. ஓம் நிரா தம்காய நம;
72. ஓம் நிர்பி காய நம;
73. ஓம் நிருபாதி காய நம;
74. ஓம் தாமசக்ரது சந்துஷ்டாய நம;
75. ஓம் தமோகுண பலப்ரதாய நம;
76. ஓம் பாதாள ஸ்வர்க நிலயாய நம;
77. ஓம் பலிகர்ம விதிப்ரீதாய நம;
78. ஓம் பலாட் யாய நம;
79. ஓம் பலவர்த நாய நம;
80. ஓம் புலோம பந்தவே நம;
81. ஓம் பூர்வஜ் ஞாய நம;
82. ஓம் யாது நே நம;
83. ஓம் புண்ய ஜநாய நம;
84. ஓம் வசிதே நம;
85. ஓம் சர்வ சாஸ்த்ரதி தேவாய நம;
86. ஓம் துஷ்ட சந்துஷ்டி காரகாய நம;
87. ஓம் சூர்ய சந்ர ஹிதாய நம;
88. ஓம் ப்ர பவே நம;
89. ஓம் அதர்ம பீரவே நம;
90. ஓம் தர்மாத் மனே நம;
91. ஓம் தேவகார்ய கிதோத்சூகாய நம;
92. ஓம் ஹிம்சா பிரஹிதாய நம;
93. ஓம் ப்ரஜா பாவநதத்ராய நம;
94. ஓம் திக்பால மத்ய சம்பூஜ்யாய நம;
95. ஓம் சத்ய சந்தாய நம;
96. ஓம் ஜிதேத்திரி யாய நம;
97. ஓம் இந்த்ராநு வர்சிதே நம;
98. ஓம் சத் வ்ருத்தாய நம;
99. ஓம் நிர் பயாய நம;
100. ஓம் சத்ய சம்கராய நம;
101. ஓம் ஆசூராஸ்த்ராதி தேவதாய நம;
102. ஓம் விசித்ரமணி பூஷ்ணாய நம;
103. ஓம் ஸ்திரா வாசாய நம;
104. ஓம் சர்வ தர்சிநே நம;
105. ஓம் சஸ்த்ர வித்யா விசாஷாய நம;
106. ஓம் ராகுகேது சிதா காஞ்சினே நம;
107. ஓம் ஸர்வராச கலாப்ரதாய நம;
108. ஓம் நிப்ருர்தி தேவ நம;

அஷ்ட சத ஸ்தோத்ரம் ஸமர்ப்பயாமி

நிருதி நாமம் சபித்து பழ, தாம்பூல, நைவேத்யம் சமர்பித்து, தூப, தீப, கர்ப்பூர, நீராஞ்சனம் செய்க. மலர் சாத்துக.

 
மேலும் அட்டதிக்குப் பாலகர்கள் புராணம் »
temple news
எல்லாம் வல்ல தடங்கருணைப் பெருங்கடலான ஈஸ்வரன்; இருந்து பஞ்ச கிருத்தியங்கள் புரிந்தருளும் இடம்; ... மேலும்
 
temple news
அமராவதி பட்டின அதிபதி இந்திரன். அப்பட்டினம் யாராலும் கட்டப்பட்டதன்று. விசுவகர்மா என்ற தேசதச்சனின் தபோ ... மேலும்
 
temple news
அக்நி தேவர் மூவகைப்படுவர். திசாக்னி தேவர் - யாகாக்னி தேவர் -சிவாக்னி தேவர் எனப் பெயர் பெறுவர். இவர்கள் ... மேலும்
 
temple news

எம புராணம் ஜூன் 10,2015

எல்லாம் வல்ல பரமசிவனின் பஞ்ச கிருத்தியங்களில் ஒன்றான சம்காரத்தைச் செய்பவன் ருத்ரன். ஆனாலும் அவனது ... மேலும்
 
temple news
மழையாய்ப் பெய்து மகிழ்விப்பது பெருவெள்ளமாய்த் தோன்றித் துன்புறுத்தவது நெடுநாளாய் வாராதிருந்து ஏங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar