Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நிருதி புராணம்! குபேர புராணம் குபேர புராணம்
முதல் பக்கம் » அட்டதிக்குப் பாலகர்கள் புராணம்
வருண புராணம்
எழுத்தின் அளவு:
வருண புராணம்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2015
05:06

மழையாய்ப் பெய்து மகிழ்விப்பது பெருவெள்ளமாய்த் தோன்றித் துன்புறுத்தவது நெடுநாளாய் வாராதிருந்து ஏங்க வயப்பது எதுவோ. அதுவே நீராகிய மழை. அம்மழைக்கு அதிபதியாய் இருப்பவன் வருணன். இவன் மேற்குத் திசைக்குக் காவலனாய் இருந்தும் உலகத்தைக் காத்தருள் செய்கின்றான். இவன் இருந்தருளும் நகர் - விபாவரி என்னும் சிரத்தாவதி. ஏறுவது முதலை, கையில் எடுப்பது பாசம். சேஷ்டை என்ற மனைவியையும், தருமன் என்ற புத்திரனையும், சுநந்தை வாருணி என்ற புத்திரிகளையும் உடையவன். தந்தை பெயர் கருத்தம பிரசாபதி. தாயார் தும்ரை என்பவள். இவனது ஆதிப்பெயர் சுசிட்டுமான் என்பது வருணன் என்பது அவன் தவத்தால் பெற்ற பதவிப் பெயர். சுசிட்டுமான் ஒரு நாள். தன் உடன் படித்த சிறுவர்களுடன் கங்கைக்குக் குளிக்கச் சென்றான். குளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு முதலை தோன்றி, இழுத்துச் சென்று விழுங்கிவிட்டது. அம்முதலை கடலைச் சென்று சேர்ந்தது.

கடலரசன். முதலை விழுங்கிய சிறுவன் கர்த்தமப்பிரசாபதியின் மகன் என்பதை ஒரு கணநாதன் கூறக் கேட்டான். தவறை உணர்ந்தான். உலக உற்பத்திக்காகத் தோன்றி ஒரு சிறுவனை மரணவாய்ப்படுத்தல் கூடாது என நினைந்து அச்சிறுவனை உயிர்பித்தான். எந்த முதலை அவனை விழுங்கிற்றோ அந்த முதலையையே அவனுக்கு வாகனமாக்கி அதன்மேல் ஏற்றுவித்து முத்துமாலை அணிவித்து, கங்கைக் கரையில் விட்டு வரச் செய்தான். சுசிட்டுமான் சென்று தந்தையை வணங்கி நின்றான். மகன் கூறக் கேட்டும் தவ பலத்தாலும் நடந்ததை உணர்ந்தார். இறைவன் கருணையை வியந்தார். மகனுக்கு உணர்த்தினார். சுசிட்டுமான் காடு நோக்கிச் சென்று சிவனை நோக்கித் தவம் புரிய விரும்பினான். தந்தையிடம் அனுமதி கேட்டான். அவரும் அவனது பக்குவ நிலையுணர்ந்து அனுமதி அளித்தார்.

காடு நோக்கிச் சென்ற கருத்தமன் மகன் நீண்ட காலம் தவம் செய்தான். நீலகண்டன் மலைமகளுடன் எழுந்தருளி தவத்தினை மெச்சி வேண்டும் வரம் அளித்ததோடு வருணபதவியும் அளித்து வருண உலகமும் கொடுத்து நீருக்கு அதிபதியாய் இருந்து பச்சிமத்துவாரக் காவலனாய்ப் பணியாற்றி வரப் பணித்தார். தங்களது ஊர்களில் தண்ணீர் பந்தல் கிணறு, குளம், கால்வாய், முதலியன அமைந்த புண்ணியர். வருண உலகம் சார்ந்து இன்புற்று வாழ்வர். இவனை, தனிப்பட்டோர் வழிபட்டால் தங்கள் இல்லம், நிலம், முதலியவைகளில் நிறைந்த நீர் வலம் பெறுவர். ஊரார் வழிபட்டால் குளம் கண்மாய் முதலிய தடாகங்களில் நீர் பெருகி விவசாயம் தழைத்து இன்புறுவர். நாட்டு மக்கள் வழிபட்டால் மழை வளம் பெற்று நாடு செழிக்கும் மக்கள் மகிழ்வர்.

*வருண பூஜா சங்கிரகம்

1. ஆசன மூர்த்தி மூலம்:

1. ஓம்-ஹாம்-வருண-ஆசனாய நம;
2. ஓம்-ஹாம்-வம்-வருண மூர்த்தயே நம;
3. ஓம்-ஹாம்-வம்-போகிநி சகிதாய வருணனே நம;

2. காயத்ரி:

ஓம்-பஸ்ச்மேசாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ வருண ப்ரசோதயாத்

3. தியான சுலோகம்:

நாகபாசதரம் ஹ்ருஷ்டம்
ரத்னௌக த்யுதிவிக்ரஹம்
சசாங்க தவளம் த்யாயேத்
வருணம் மகராசனம்

4. மூல மந்திரம்:

ஓம்-ஹாம்-வம்-போகிநி சகிதாய-பாச ஹஸ்தாய வருணனே நம;

5. துதி:

வெள்ளை நிறமும் மீன் வாகனமும்
பத்மம் பாசம் அபய வரதமும்
கொண்ட வருணதேவனை வாழ்த்துவோம்

6. பிரார்த்தனை:

மகர வாகன சுவேத தேக
பாச ஹஸ்த பச்சிமத் துவார பால
போகினி ஜேஸ்டா தேவி ஸகிதாய
வருண தேவ ஆன்மார்த்த, பரார்த்த,
கும்பாபிஷேக பூஜா க்ரியாயாம் சர்வ
மங்கள சித்திம் அநுக்ரஹாணாம்

வருண அஷ்ட சத அர்ச்சனா 108

குறிப்பு: இந்திர அஷ்ட சத அர்ச்சனாவில் கூறியுள்ள, முறையைப் பின்பற்றுக.

1. ஓம் வருணாய நம;
2. ஓம் பஸ்சிமா தீசாய நம;
3. ஓம் பராஜி தாய நம;
4. ஓம் பாச ஹஸ்தாய நம;
5. ஓம் சமுதம ராத்மனே நம;
6. ஓம் சூத்தா த்மனே நம;
7. ஓம் நக்ர வாஹா நாய நம;
8. ஓம் சக்ராபி முக சமஸ்தாய நம;
9. ஓம் சித்த புர்யா லயாஸ்ரயாய நம;
10. ஓம் தீர்த்தே சாய நம;
11. ஓம் பத்மிநீ காந்தாய நம;
12. ஓம் சூதாகும்ப கராப்சராகே நம;
13. ஓம் சாது சந்த்யா தர்சினே நம;
14. ஓம் அம்ப நாதிரி விகாரபுவே நம;
15. ஓம் அஸ்த சிமா நாயகாய நம;
16. ஓம் ஜல மூர்தயே நம;
17. ஓம் ஜலாஸ்ர மாய நம;
18. ஓம் ஜலஜார்ச சூப்ரிதாய நம;
19. ஓம் யாத பதயே நம;
20. ஓம் அமே யாத்மனே நம;
21. ஓம் ப்ரதே தசே நம;
22. ஓம் பரீதி வர்த்த நாய நம;
23. ஓம் ரசநேந்திரிய நாதாய நம;
24. ஓம் ரச புஷ்டி விதாயகாய நம;
25. ஓம் மேகா தீசாய நம;
26. ஓம் வ்ருஷ்டி கர்த்ரே நம;
27. ஓம் வாருணீ ஜனகாய நம;
28. ஓம் அநாய காய நம;
29. ஓம் பலராம ப்ரீயாய நம;
30. ஓம் ஜலஜாயத லோசநாய நம;
31. ஓம் தீ ராய நம;
32. ஓம் பலபத்ர சூகப்ரதாய நம;
33. ஓம் ஸ்வஸ்தி வாசக சம்பூஜ்யாய நம;
34. ஓம் சூப தாயகாய நம;
35. ஓம் விஷ்ணுசாப க்ருகீத்ரே நம;
36. ஓம் யாக சந்துஷ்ட மாநசாய நம;
37. ஓம் ஹரிஸ் சந்த்ர மகாயாக சூப்ரிதாய நம;
38. ஓம் வரதாய காய நம;
39. ஓம் வாயு நிர்ருதி மத்யஸ்தாய நம;
40. ஓம் அஞ்சநேபோ பரிஸ்தீதாய நம;
41. ஓம் ரத்ன மாலாந்வித களாய நம;
42. ஓம் முக்தா ஜாலாசூ தோரயாய நம;
43. ஓம் யதோகண மகாசைன்யாய நம;
44. ஓம் யதோவ்ருத்தி விதாகாய நம;
45. ஓம் நக்ர ஸ்தாய நம;
46. ஓம் நந்த கோபார்ண கிருஷ்ண தோசகாய நம;
47. ஓம் அஸ்வமேதீ யாஸ்வ நாதாய நம;
48. ஓம் காண்டீவத நுஸ்ஸம் க்ரகாய நம;
49. ஓம் சபடாம் கஸ்வர்ண வர்ண தாத்ரே நம;
50. ஓம் பூத தயாபராய நம;
51. ஓம் கல்யாண ரூபாய நம;
52. ஓம் காலஞ் ஞாய நம;
53. ஓம் கலா பிநே நம;
54. ஓம் கனகத்யுதயே நம;
55. ஓம் சாபாநுக்ரக தக்ஷாய நம;
56. ஓம் சப்த சாகர நாயகாய நம;
57. ஓம் வாயு ப்ரியாய நம;
58. ஓம் சதா நந்தாய நம;
59. ஓம் வைஸ்வதேவ சமர்சிதாய நம;
60. ஓம் தசாந நவதோத் யோக சகாயாய நம;
61. ஓம் சர்வ ரட்சகாய நம;
62. ஓம் ஸ்ரீராமபக்தி சம்யுக்தாய நம;
63. ஓம் ஸ்ரீ கிருஷ்ண ப்ரீதிகாராய நம;
64. ஓம் கருணாம்ருத சம்யுத்தாய நம;
65. ஓம் சரணாகத வத்சலாய நம;
66. ஓம் சர்வரத்த விபூசாட்யாய நம;
67. ஓம் சீத ளாய நம;
68. ஓம் தேவ தோத்தமாய நம;
69. ஓம் அருணேதய காஞ்ச்ணே நம;
70. ஓம் ப்ரதீசீஸ்தாந சம்ஸ்ரயாய நம;
71. ஓம் கம்பீர ரூபாய நம;
72. ஓம் காம்பீர்ய தாயிநே நம;
73. ஓம் சந்தான தாயகாய நம;
74. ஓம் சத்ய சந்தாய நம;
75. ஓம் சத்வ ஹிதாய நம;
76. ஓம் சாயம் சந்த்யாசூ தோசிதாய நம;
77. ஓம் நவமேகா பிமாநிநே நம;
78. ஓம் க்ரீஷ்மதாப நிவாரகாய நம;
79. ஓம் சாகராந்த ஸ்சராய நம;
80. ஓம் தீ மதே நம;
81. ஓம் சர்வ வ்வாபிநே நம;
82. ஓம் ஜிதேந்திரியாய நம;
83. ஓம் வார்த்தி பூர்ணகராய நம;
84. ஓம் மத்ய நிர்மாத்ரே நம;
85. ஓம் சர்வதோ முகாய நம;
86. ஓம் வால்மீகி தாதாய நம;
87. ஓம் வாசிஷ்ட த்விதீய ஜரி காரனாய நம;
88. ஓம் காம தாய நம;
89. ஓம் கல்மசா பஹாய நம;
90. ஓம் சார்வபௌம சமாராத்தியாய நம;
91. ஓம் புஷ்டி தாய நம;
92. ஓம் பத்ம வ்ருத்தி க்ருதே நம;
93. ஓம் விவாஹ கால சம்பூஜ்யாய நம;
94. ஓம் கர்ம சூத்திகராய நம;
95. ஓம் தஷாய நம;
96. ஓம் நித்யா நந்தாய நம;
97. ஓம் நிராம யாய நம;
98. ஓம் மகேந்த்ர சத்ருசாய நம;
99. ஓம் மாயி நே நம;
100. ஓம் லோக ப்ரீதி விதாயகாய நம;
101. ஓம் வால்மீக பேத்ரே நம;
102. ஓம் ப்ராஜ் ஞாய நம;
103. ஓம் சூதா ரூபாய நம;
104. ஓம் ருசி ப்ரதாய நம;
105. ஓம் தாந சௌம்டாய நம;
106. ஓம் தயா சீலாய நம;
107. ஓம் ரசாநந்த விதாயகா நம;
108. ஓம் வருண தேவ நம;

அஷ்ட சத ஸ்தோத்ரம் ஸமர்ப்பயாமி

வருண நாமம் சபித்து, பழ, தாம்பூல, நைவேத்யம் சமர்ப்பித்து, தூப, தீப, கர்ப்பூர, நீராஞ்சனம் செய்க. மலர் சாத்துக.

 
மேலும் அட்டதிக்குப் பாலகர்கள் புராணம் »
temple news
எல்லாம் வல்ல தடங்கருணைப் பெருங்கடலான ஈஸ்வரன்; இருந்து பஞ்ச கிருத்தியங்கள் புரிந்தருளும் இடம்; ... மேலும்
 
temple news
அமராவதி பட்டின அதிபதி இந்திரன். அப்பட்டினம் யாராலும் கட்டப்பட்டதன்று. விசுவகர்மா என்ற தேசதச்சனின் தபோ ... மேலும்
 
temple news
அக்நி தேவர் மூவகைப்படுவர். திசாக்னி தேவர் - யாகாக்னி தேவர் -சிவாக்னி தேவர் எனப் பெயர் பெறுவர். இவர்கள் ... மேலும்
 
temple news

எம புராணம் ஜூன் 10,2015

எல்லாம் வல்ல பரமசிவனின் பஞ்ச கிருத்தியங்களில் ஒன்றான சம்காரத்தைச் செய்பவன் ருத்ரன். ஆனாலும் அவனது ... மேலும்
 
temple news
இவன் தென்மேற்குத் திசைக் காவலன். இவன் இருந்தாளும் பட்டிணம் கிருஷ்ணாங்கனை என்பது இவனது தேவி தாகினி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar