Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீநிவாச வரதராஜப் பெருமாள் கோவில் ... சோழபுரம் அருள்மொழிநாதர் கோயிலில் ஆனி தேரோட்டம்! சோழபுரம் அருள்மொழிநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் மாங்கனி திருவிழா: மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
காரைக்கால் மாங்கனி திருவிழா: மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம்!

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2015
11:06

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவின் முன்னிட்டு நேற்று பரமதத்தர் செட்டியார் மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார். 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது. இத்திருவிழா நேற்று மாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. பரமதத்த செட்டியார் பட்டுவேட்டி, முத்துமாலைகளுடன் மாப்பிள்ளை அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு நேற்று மாலை அழைத்து வரப்பட்டார். முன்னதாக விநாயகர் கோவிலில் சிறப்பு தீபாரதனை நடத்தப்பட்டு பாரம்பரியப்படி மாப்பிள்ளையான பரமதத்தர் செட்டியாருக்கு திருஷ்டி கழிக்கப்பட்டது. உபயதாரர்களான மாப்பிள்ளை வீட்டார் முன்செல்ல பரமத்தர் செட்டியார் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாப்பிள்ளை கோலத்தில் முக்கிய வீதி வழியாக ஊர்வலம் நடந்தது.  இன்று காலை புனிதவதியார் தீர்த்த குளத்தில் புனிதநீராடும் நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு மணமகன் பரமதத்தர் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்படத்தில் எழுந்தருளம் நிகழ்ச்சி நடக்கிறது. 10.40 மணிக்கு காரைக்கால் அம்மையார் - பரமதத்தருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மாலை பிஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடும், இரவு திருமண முடிந்த காரைக்கால் அம்மையார் - பரமதத்தர்  முத்து பல்லக்கில் வீதி உலா நடைபெறுகிறது. நாளை(1ம் தேதி) அதிகாலை பிக்ஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திக்குக்கும் மகா அபிஷேகமும், காலை 9 மணிக்கு சிவபெருமான் அடியார் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் வீதி உலா நடக்கும். அச்சமயம் பக்தர்கள் வீடுகளில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் தனி  அதிகாரி ஆசைத்தம்பி சிறப்பாக செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் இன்று ஆனந்த விமானத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் சித்திரைத்தேர் உத்ஸவம் (விருப்பன் திருநாள்) இன்று ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருஆயர்பாடியில் உள்ள சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
புதுடில்லி ;சீனா உடனான சுமுக உறவு காரணமாக, கைலாஷ் - மானசரோவர் யாத்திரை, 5 ஆண்டுகளுக்கு பின் விரைவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar