கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) சிறப்பான மாதம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2015 12:07
சகோதர பாசத்துடன் நடக்கும் கன்னி ராசி அன்பர்களே!
முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால் சிறப்பான மாதமாக அமையும். 11ல் சூரியன், 3ல் சனி செல்வ வளத்தை கொடுப்பர். புதன் ஆக.1 வரை கடகத்தில் இருந்து நன்மை தருவார். செவ்வாய் ஜூலை 31ல் கடகத்திற்கு வந்து நற்பலன் அளிப்பார். கையில் எப்போதும் பணப்புழக்கம் இருக்கும். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். புதிய முயற்சி அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். சமூகத்தில் மதிப்பு உயரும். அரசு வகையில் எதிர்பார்ப்பு நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் குதுõகலம் உண்டாகும். வீட்டுக்கு தேவையான வசதி கிடைக்கும். பெண்களும் உதவிகரமாக இருப்பர்.
தொழில், வியாபாரத்தில் அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். வங்கி கடன் எளிதாக வந்து சேரும். புதிய தொழில் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
பணியாளர்கள் வேலையில் திருப்தி காண்பர். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கலாம். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை எளிதில் நிறைவேறும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் பெற விடாமுயற்சி வேண்டும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சிறப்பான நிலையில் இருப்பர். ஜூலை 31க்கு பிறகு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். படிப்போடு விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி காண்பர். ஆக.1 வரை புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் கூடுதல் நன்மையை எதிர்பார்க்கலாம்.
விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். கரும்பு, நெல், சோளம், காய்கறி, பழ வகைகளில் நல்ல வருமானம் கிடைக்கும். கால்நடையால் வருமானம் கூடும். புதிய சொத்து வாங்க ஜூலை 31க்கு பிறகு முயற்சிப்பது நல்லது.
பெண்கள் கணவனின் அன்பை பெறுவர். அக்கம்பக்கத்தினர் நட்புடன் பழகுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்படைவர். பதவி உயர்வும் கிடைக்கும்.
நல்ல நாள்: ஜூலை 17, 18, 21, 22, 23, 26, 27, 28 ஆக. 4, 5, 10, 11, 12, 13, 14