கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) பதவி உயர்வு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2015 12:07
உழைப்பால் உயரும் கும்ப ராசி அன்பர்களே!
சூரியன், குரு இருவரும் மாதம் முழுவதும் நன்மையளிப்பர். புதன் ஆக. 1 வரையும், அதன் பிறகு செவ்வாயும் நற்பலனை வழங்குவர். சூரியனால் பகைவரை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் கூடும். பணியிடத்தில் மதிப்பு உயரும். எடுத்த முயற்சி வெற்றி பெறும். செவ்வாயால் அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்கலாம். சுப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். ஆனால், குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். குடும்பத்தில் வாய்ப்பு, வசதி பெருகும். விருந்து விழா எனசென்று வர வாய்ப்புண்டு.
தொழில், வியாபாரத்தில் ஆதாயம் கிடைக்கும். புதிய தொழில் முயற்சியில் நற்பலன் உண்டாகும். சிலர் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்குவர்.
பணியாளர்கள் நல்ல வளர்ச்சி காணலாம். பதவி, சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. சிலருக்கு விரும்பிய இட மாற்றம் கிடைக்கலாம்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க நேரிடும். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஆகலாம்.
பெண்கள் வகையில் தொல்லை உருவாகும்.
அரசியல்வாதிகள்தொடர்ந்து நற்பலன் காண்பர். ஜூலை31க்கு பிறகு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்கள் குரு பலத்தால் சிறப்பாகப் படிப்பர். ஆக. 1க்கு பிறகு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் போட்டியில் வெற்றி பெற விடாமுயற்சி தேவை.
விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறை இருக்காது. பயறு வகைகள் நெல், கேழ்வரகு, கரும்பு, பனைத்தொழில். பழவகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும்.
பெண்களுக்கு சுபவிஷயத்தில் ஆர்வமுடன் ஈடுபடுவர். உறவினர் மத்தியில் கவுரவத்துடன் இருப்பர்.
நல்ல நாள்: ஜூலை 19, 20, 26, 27, 28, 29, 30 ஆக., 2, 3, 6, 7, 15, 16, 17