Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

வாழ்க்கைக் கல்வி (சீக்ஷா வல்லீ) வாழ்க்கைக் கல்வி (சீக்ஷா வல்லீ)
முதல் பக்கம் » தைத்திரீய உபநிஷதம்
தைத்திரீய உபநிஷதம் - ஒரு கண்ணோட்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2015
13:54

வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் திருநாடு ஆன்ம ஒளியில் விழித்தெழுந்தது, அதன் தவப் புதல்வர்களாகிய ரிஷிகள், இருளைக் கடந்து, பொன்னிறத்தில் ஒளிரும் மாபெரும் இறைவனை நான் அறிந்துகொண்டேன். அவரை அறிவதால் மட்டமே மரணத்தை வெல்ல முடியும். வேறு எந்த வழியும் இல்லை.

(வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்யவர்ணம் தமஸ: பரஸ்தாத் தமேவ விதித்வா ஸதிம்ருத்யுமேதி நான்ய: பந்தா வித்யதேஸயனாய- சுவேதாஸ்வதர உபநிஷதம், 3.8.)

அழியாத அமரத்துவத்தின் குழந்தைகளே, கேளுங்கள்

(ச்ருண்வந்து விச்வே அம்ருதஸ்ய புத்ரா:- சுவேதாஸ்வதர உபநிஷதம், 2.5)

என்று பூமியில் வாழ்பவர்களை மட்டுமல்ல, பிற உலகங்களில் வாழ்வோரையும் அறைகூவினர். குறித்து வைக்கப்பட்ட சரித்திரமோ, பாரம்பரியத்தின் மங்கிய வெளிச்சமோகூட ஊடுருவ முடியாத, காலத்தின் அந்த நீண்ட நெடுந்தொலைவில் இந்த உலகைப் புனிதமாக்கியபடி வாழ்ந்த அந்த ரிஷிகள் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.

உலகிலேயே மிகப்பழயை நூல் இந்த சிந்தனைக் கருவூலம்தான் இது எப்போது தோன்றியது என்பது ஒருவருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம்.... ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன், முன்னைவிட புதுப் பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம்.

வேதங்கள் யாராலும் எழுதப்பட்டவை அல்ல. என்றென்றும் நின்று நிலவுகின்ற உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும். முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்துவிட்டாலும் இருக்கும். அவ்வாறுதான் ஆன்மீக உலகின் விதிகளும்.... அவை கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்னரும் இருந்தன. நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும் என்று எழுதுகிறார் சுவாமி விவேகானந்தர் ரிஷிகள் அந்த விதிகளை வெளிப்படுத்தினார்கள், அவ்வளவுதான்.

அவ்வாறு ரிஷிகள் வெளிப்படுத்திய அந்த உண்மைகள் பின்னாளில் வியாச முனிவரால் நான்காகத் தொகுக்கப்பட்டன. அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள். ஒவ்வொரு வேதமும் மூன்று முக்கியப் பிரிவாக பிரிக்கப்படுகின்றன. அவை சம்ஹிதை (பல்வேறு தேவர்களிடம் பிரார்த்தனைகள்), பிராம்மணம் (யாக விவரங்கள்) ஆரண்யகம் (உபநிஷதங்கள்; அறுதி உண்மையைப்பற்றிய ஆராய்ச்சி).

உபநிஷதங்கள்:

உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், ஸ்ரீமத் பகவத்கீதை மூன்றும் ப்ரஸ்தான த்ரயம் என்று வழங்கப்படுகின்றன. அறுதிப் பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது இதன் பொருள்.

வேதகாலச் சிந்தனையில் மணிமகுடமாகத் திகழ்பவை உபநிஷதங்கள், உபநிஷதங்கள் பல அவற்றுள் 108 பொதுவாகக் கணக்கில் கொள்ளப்படுகின்றன. அவற்றில்  பதினான்கு உபநிஷதங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை ஈச, கேன, சுட, ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்திரீய; சாந்தோக்ய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர,  கவுசீதகி; மஹா நாராயண, மைத்ராயணி உபநிஷதங்கள் ஆகும். இவற்றுள் முதல் பத்து உபநிஷதங்களுக்கு ஸ்ரீசங்கரர் விளக்கவுரை எழுதியுள்ளார். 14 உபநிஷதங்களும் கீழ்கண்ட பட்டியலின் படி நான்கு வேதங்களில் அமைந்துள்ளன.

உபநிஷதம்         வேதம்

ஐதரேய, கவுசீதகி        ரிக்

ஈச, கட, தைத்திரீய,
பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர,
மைத்ராயணீ, மஹாநாராயண     யஜுர்

கேன, சாந்தோக்கிய    சாம

ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய    அதர்வண

தைத்திரீய உபநிஷதம்:

யஜுர் வேதத்தில் சுக்ல யஜுர் வேதம், கிருஷ்ண யஜுர், வேதம் என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. கிருஷ்ண யஜுர் வேதத்தில் உள்ள தைத்திரீய ஆரண்யகத்தின் 7,8,9 ஆம் பகுதிகளே தைத்திரீய உபநிஷதம், உரைநடை வடிவில் அமைந்துள்ளது இது.

வைசம்பாயன முனிவரின் மாணவர்கள் தித்திரிப்பறவைகளின்( சிட்டுக் குருவி) வடிவத்தில் இந்த உபநிஷத மந்திரங்களை ஏற்றுக்கொண்டதால் இது தைத்திரீய உபநிஷதம் என்று பெயர்பெற்றது.

மையக்கரு:

இந்த உபநிஷதத்தில் வாழ்க்கைக் கல்வி (சிக்ஷா வல்லீ), மனிதன் (ஆனந்த வல்லீ), கடவுள் (பிருகு வல்லீ) என்று மூன்று பகுதிகள் உள்ளன. முதற்பகுதி உலகத்தைப் பற்றி, அதாவது நாம் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை ஆராய்கிறது. மனிதன் என்பவன் யார் என்பதற்கான ஓர் அற்புதச் சித்திரத்தைத் தருகிறது இரண்டாம் பகுதி, கடவுளைப்பற்றி சிந்திக்கிறது மூன்றாம் பகுதி.

வாழ்க்கையின் அடிப்படை பற்றிய அற்புதமான ஒரு கல்வியாக அமைகின்றது. இந்த உபநிஷதம். மனிதன் என்பவன் யார் சமுதாயத்தில் நல்ல அங்கத்தினனாக விளங்குவதற்கான கடமைகள் எவை, தெய்வ சிந்தனையுடன் வாழ்வது எப்படி, அதிக இன்பத்தை அனுபவிப்பது எப்படி என்பவை போன்ற அன்றாட வாழ்க்கை விஷயங்கள் இங்கே ஆராயப்படுகின்றன. வாழ்க்கையை வெறுக்கவோ, வாழ்க்கையிலிருந்து விலகி ஓடவோ வேண்டாம் என்பதை வலியுறுத்துவதுடன், இன்பமான, வளமான வாழ்க்கை வாழ்வது இறைவனின் மகிமையை வெளிப்படுத்துவதாகும் என்ற கருத்தைச் சிறப்பாகச் சுட்டிக் காட்டுகிறது. இந்த உபநிஷதம்.

உபநிஷதக் களம்: தைத்திரீய உபநிஷதத்தின் களமும் பொருள் பொதிந்ததாகும். ஒரு குருகுலத்தில், அதாவது அன்றைய பள்ளியில், ஆசிரியர் மாணவர்களுக்குக் கற்பிப்பதுபோல் இந்த உபநிஷதம் அமைந்துள்ளது.

மனித வாழ்வில் நான்கு படிகளை வைத்துள்ளது இந்து மதம். அவை மாணவப் பருவம் (பிரம்மச்சரியம்) இல்லறம் (கார்ஹஸ்த்யம்), இல்லறத்திலிருந்து விலகி வாழ்தல்(வானபிரஸ்தம்), துறவு (சன்னியாசம்) அதே வேளையில், பக்குவம் வாய்ந்த சிலர் இரண்டு மற்றும் மூன்றாம் படிகளுக்குச் செல்லாமலே நான்காம் படியான துறவு வாழ்வை ஏற்றுக்கொள்வதையும் சாஸ்திரங்கள் அனுமதிக்கின்றன.

ஆனால் எந்த வாழ்வானாலும் அதற்கு அடிப்படையாக இருப்பது மாணவப் பருவம் சிந்திக்க வேண்டியவற்றைச் சிந்தித்து ஆராய வேண்டியவற்றை ஆராய்ந்து, வாழ்க்கைபற்றி தனக்கென ஒரு கோணத்தை (ணீடடிடூணிண்ணிணீடதூ ணிஞூ டூடிஞூஞு) அந்தப் பருவத்திலேயே ஒவ்வொருவரும் வகுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு இல்லறத்தை ஏற்றாலும் துறவை நாடினாலும் ஒருவனால் வெற்றிகரமாக வாழ முடியும். வாழ்க்கையைத் தன் போக்கில் போக விடாமல் வாழுங்கள் என்று கூறுகின்ற இந்த உபநிஷதம் அதனால்தான் மாணவர்களுக்கு உபதேசிப்பதாக அமைந்துள்ளது. வாழ்க்கை பற்றியும், தன்னைப்பற்றியும், கடவுளைப்பற்றியும் சிந்தித்து ஆனந்த வாழ்வு வாழுமாறு அனைவரையும் அழைக்கிறது.

வித்யைகள்:

மனிதன், உலகம், கடவுள் ஆகிய மூன்றும் அடிப்படை உண்மைகள். உபநிஷதங்கள் பொதுவாக இந்த மூன்றையும், இவற்றிற்கு இடையே நிலவுகின்ற தொடர்பையும் ஆராய்கின்றன. ஒவ்வொரு மனிதனும், ஒவ்வோர் உயிரும் அறுதி உண்மையாகிய கடவுளைச் சென்று அடைவதே வாழ்க்கையின் லட்சியம். அதற்கான களமே உலகம். இதற்கு ஒவ்வோர் உபநிஷதமும் தங்களுக்கென்று சில குறிப்பிட்ட பாதைகளைக் காட்டுகின்றன. இவை வித்யை  எனப்படுகின்றன. வித்யைகள் எண்ணற்றவை. 14 முக்கிய உபநிஷதங்களில் தற்போது சுமார் 35 வித்யைகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. காலங்கள் பல கடந்து விட்டதாலும், வேறு பல காரணங்களாலும் இந்த வித்யைகளின் செயல்முறையோ சரியான பொருளோ நமக்குத் தெரியாமல் போய்விட்டது.

தைத்திரீய உபநிஷதத்தில் ஆனந்தமய வித்யை (2:9-2:12), பார்கவீ-வாருணீ வித்யை (3:1-3:6) என்று இரண்டு வித்யைகள் கூறப்பட்டுள்ளன.

மொழிபெயர்ப்பு:

ஸ்ரீசங்கரர், ஸ்ரீமத்வர், ஸ்ரீவித்யாரண்யர் போன்றோர் இந்த உபநிஷதத்திற்கு விளக்கவுரை எழுதியுள்ளனர்.

ஸ்ரீசுரேசுவரர் தமது குருவான ஸ்ரீசங்கரரின் விளக்கவுரைக்கு விளக்கமும் எழுதியுள்ளார்.

1935-- இல் கடலங்குடி ஸ்ரீநடேச சாஸ்திரிகள் ஸ்ரீசங்கரரின் விளக்கவுரையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

தற்போது வெளிவருகின்ற இந்த மொழிபெயர்ப்பு, தைத்திரீய உபநிஷதத்தை முதன்முதலாகப் படிப்பவர்களை நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டு முக்கியமான விஷயங்கள் இந்த மொழி பெயர்ப்புக்கு அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளன.

1. தத்துவப் பின்னல்களைக் கருத்தில் கொள்ளவில்லை. கடவுள் என்ற மாபெரும் சக்தியுடன் நாம் தொடர்புகொள்கிறோம் என்ற உணர்வுக்கு முதலிடம் கொடுத்து மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

2. காலம், இடம் போன்ற இலக்கண நியதிகளுக்கும் மொழிபெயர்ப்பில் முக்கிய இடம் அளிக்கவில்லை.

கீழ்வரும் நூல்களும் கட்டுரைகளும் பொருள் விளக்கத்திற்கு மிகவும் துணை செய்தன:

அமைப்பு:

ஒவ்வோர் அத்தியாயத்திலும் முதலில் அந்த அத்தியாயத்தின் கரு கூறப்படுகிறது. பிறகு சமஸ்கிருத மூலம், தமிழ் வடிவம், பதவுரை, பொழிப்புரை, திரண்ட பொருள் விளக்கம் என்ற ரீதியில் நூல் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் அத்தியாயத்தின் கடைசியிலும் தரப்பட்டுள்ள சுருக்கம் என்ற பகுதி, விரிவாகப் படித்ததை எளிதாக மனதில் வைத்துக் கொள்ள உதவுகிறது. அதே வேளையில் பொருள்குறிப்பு அகராதியாகவும் அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

பாராயணம் செய்வதற்கு வசதியாக மந்திரங்களில் குறியீடுகளையும் குறித்துள்ளோம்.

ஒரு வார்த்தை:

உபநிஷதங்களை நமக்கு அளித்த முனிவர்கள்  தங்களை முன்னிலைப்படுத்தி எதையும் கூறாமல், எங்களுக்கு அதனை விளக்கிய மகான்கள் இவ்வாறு கூறினார்கள்.

(இதிசுச்ரும தீராணாம் யே நஸ்தத் விசசக்ஷிரே- ஈசாவாஸ்ய உபநிஷதம், 10,13.)

என்றே குறிப்பிடுகிறார்கள். அதாவது, இந்த உண்மைகள் ஏதோ தங்கள் திறமையால் பெறப்பட்டவை அல்ல, மகான்களின் அருளால் கிடைத்தவை என்று அவர்கள் கூறுவதுபோல் உள்ளது இது.

நாம் எத்தகைய மனப்பாங்குடன் உபநிஷதங்களை அணுக வேண்டும் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. வெறும் நூலறிவு கொண்டோ, சமஸ்கிருதப் புலமை கொண்டோ அவற்றின் உண்மையான பொருளை அறிந்து கொள்வது சாத்தியம் அல்ல, பிரார்த்தனைபூர்வமாக, உண்மையான சாதனை வாழ்வில் ஈடுபட்டு, மனம் தூய்மை பெற்று இறைவனை நோக்கி நாம் முன்னேறமுன்னேற இவற்றின் உட்பொருள் மேன்மேலும் ஆழமாக நமக்குப் புரியும். மீண்டும் மீண்டும் படித்து, மந்திரங்களின் பொருளை ஆழமாகச் சிந்தித்து, சாதனைகளிலும், ஈடுபட்டால்தான் உபநிஷதங்களை உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும்: அவற்றின் அற்புதத்தில் ஆழ்ந்து மனம் மகிழ முடியும்.

பாராயண வழிகாட்டி:

வேத மந்திரங்களின் நாதமே மனத்தை அகமுகமாக்க வல்லது. வேத மந்திரங்கள் ஒலிக்கின்ற இடத்தில் தீயசக்திகள் விலகுகின்றன; மங்கல தேவதையாகிய மகாலட்சுமி நித்திய வாசம் செய்வாள்.

வேதங்களில் மிகவும் அதிகமாக ஓதப்படுகின்ற பகுதிகளுள் தைத்திரீய உபநிஷதம் ஒன்றாகும். வேதங்களை ஓதுவதற்கென்று குறிப்பிட்ட மரபு முறை உள்ளது. வேத விற்பன்னர்களிடமிருந்து அதனை அறிந்து ஓதுவது நல்லது. தாமாகக் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றலாம்.

    1   2
க, க,  க என்று குறியீடுகள் பாராயணத்தில் கையாளப்படுகின்றன. இவை முறையே அனுதாத்தம், ஸ்வரிதம், தீர்க்க ஸ்வரிதம் எனப்படும். சாதாரண நிலை உதாத்தம் எனப்படுகிறது.

க     - உதாத்தம், சாதாரண ஸ்வரத்தில் உச்சரிக்க வேண்டும்.
க    - அனுதாத்தம்; சாதாரண ஸ்வரத்திலிருந்து ஒரு மாத்திரை இறக்கி உச்சரிக்க வேண்டும்.
க    - ஸ்வரிதம் ; சாதாரண ஸ்வரத்திலிருந்து ஒரு மாத்திரை ஏற்றி உச்சிரிக்க வேண்டும்.
க    - தீர்க்க ஸ்வரிதம்; சாதாரண ஸ்வரத்திலிருந்து இரண்டு மாத்திரைகள் ஏற்றி உச்சரிக்க வேண்டும்.

பாரம்பரிய இசை தெரிந்தவர்கள் இதைச் சுலபமாகப் புரிந்துகொள்ளலாம். சாதாரண ஸ்வரத்தை, அதாவது உதாத்த நிலையை ப என்று வைத்துக்கொண்டால் அனுதாத்தம் - சுத்த ம ஸ்வரிதம் - சுத்த த அல்லது கோமள த.

முறைப்படி ஓதப்படுகின்ற வேத த்வனிக்கென்று ஒரு மகிமை இருக்கிறது. ஆனால் அந்த ஏற்ற இறக்கங்களைக் கற்றுக்கொள்ள முடியாவிட்டால், அதற்காக வேதங்களையே படிக்காமல் இருக்கத் தேவையில்லை. நமக்குச் சுலபமான ஒரு முறையில் ஓதலாம். மனத்தின் ஈடுபாடும் உணர்ச்சியுமே முக்கியமானது.

 
மேலும் தைத்திரீய உபநிஷதம் »
temple
சீக்ஷா (அதாவது சிக்ஷா) என்றால் கல்வி; வல்லீ என்றால் பகுதி. கல்விபற்றி சிறப்பாகக் கூறுவதால் இந்தப் பகுதி ... மேலும்
 
temple
பிராணாயாமத்தால்தான். பிராணாயாமத்தால், உணரும் சக்தி மிக நுட்பமாகி, அதன்மூலம் கால் விரலிலோ அல்லது ... மேலும்
 
temple
பிரணவ தியானம்: ஓமிதி ப்ரஹ்ம ஓமிதீதக்ம் ஸர்வம் ஓமித்யேததனுக்ருதி
ஹஸ்ம வா அப்யோச்ராவயேத்யாச்ராவயந்தி ... மேலும்
 
temple

மனிதன் ஜூலை 20,2015

(ஆனந்த வல்லி)

வாழ்க்கையைத் தன் போக்கில் போக விடாமல், உணர்ந்து, அனுபவித்து வாழுமாறு இந்த உபநிஷதம் ... மேலும்
 
temple
மஹத் என்றால் என்ன?

நமது ஐந்து உடம்புகளைப்பற்றி இந்த மந்திரங்கள் கூறி வருகின்றன. ஒவ்வோர் உடம்பும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.