Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தி மார்க்கம் பெண்மையும் தாய்மையும்! பெண்மையும் தாய்மையும்!
முதல் பக்கம் » ராமகிருஷ்ண உபநிஷதம்
அரசனும் பாகவதரும்..
எழுத்தின் அளவு:
அரசனும் பாகவதரும்..

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2015
05:07

சாஸ்திரங்களும் புராணங்களும் படித்த ஒரு பிராமணர் அரசனிடம்போய் அரண்மனையில் புராணம் வாசித்துச் சொல்லத் தாம் விரும்புவதாகத் தெரிவித்தார். மகாராஜாவே! பாகவதம் மிகச் சிரேஷ்டமான தரும நூலாகும். அதை நீங்கள் நல்ல ஆசிரியரைக் கொண்டு படிக்கவேண்டியது அவசியம் எனக்கு உத்தரவு தந்தால் நான் சொல்லுவேன். நான் தரும் நூல்களை நன்றாகக் கற்ற பெரிய பண்டிதன் என்று சாஸ்திரம் படித்த வித்துவான்கள் அறிவார்கள். அரண்மனையில் பாகவதம் படித்துச் சொல்லவேண்டும். என்பது என்னுடைய ஆசை. வித்துவான்களை உபசரிப்பது அரசர்களுடைய கடமை  என்று பிராமணர் கூறினார். அரசன் இயற்கையறிவு படைத்தவன், இவர் பாகவத புராணத்தைப் படித்து அதன் உட்பொருளை உண்மையாக உணர்ந்தவராக இருந்தால், தியான ஜபமோ, தவமோ, செய்து கொண்டல்லவா இருந்திருப்பார்; பணமும் புகழும் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு அரசனுடைய தயவைத் தேடி இராஜமாளிகைக்கு வந்திருக்க மாட்டாரே என்று எண்ணி அவருக்குப் பின்வருமாறு பதில் சொன்னான்;-

பண்டிதரே! உங்களை ஆசிரியனாக அமைத்துக் கொண்டு பாகவதம் கேட்க நானும் விரும்புகிறேன். மறுபடியும் தாங்கள் பாகவதத்தை நன்றாக ஒன்றிரண்டு முறை படித்துவிட்டு வாருங்கள். அரசன் சொன்னதைக் கேட்டு வித்துவான் கொஞ்சம் கோபம் அடைந்தார். ஆனால் அரசனிடம் கோபித்து என்ன பயன்? ஒன்றும் பேசாமல் வீட்டுக்குத் திரும்பிப்போனார்.  இந்த அரசன் சுத்த மூடன், பண்டிதன் யார், படிக்காதவன் யார் என்று இவனுக்குத் தெரிந்து கொள்ள முடியவில்லை. என்னை பாகவதம் நன்றாகப் படித்துவிட்டு வாருங்கள். என்கிறான்! பன்னிரண்டு வருஷங்கள் நான் சாஸ்திரம் படிப்பதில் செலவழித்திருக்கிறேன். பாகவதம் மனப்பாடமாகவே இருக்கிறது. இந்த அரசன் என்னை மறுபடியும் படித்துவிட்டு வரச் சொல்லுகிறேன் என்றிவ்வாறு தமக்குள் நொந்து கொண்டு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார். மனைவியிடம் நடந்ததைச் சொன்னார். அவள் யோசித்துவிட்டு, என்னவானாலும் அரசன் அரசனல்லவோ? அவன் சொல்லியவாறு இன்னுமொரு முறை பாகவதத்தைப் படித்துவிட்டு மறுபடியும் போய் சன்னிதானத்தில் சொன்னபடியே செய்து விட்டு வந்திருக்கிறேன். என்று கேளுங்கள். எப்படியாவது அரசனைத்திருப்திசெய்து அரண்மனையில் பவுராணிகராக அமர்ந்துவிட்டால் நாம் பலவிதத்தில் லாபம் அடையலாம். என்றாள்.

மனைவி சொன்னபடியே பிராமணரும் தம்முடைய கோபத்தை அடக்கிக்கொண்டு பாகவதத்தை நிதானமாக மறுபடியும் படித்தார். எந்தக் கட்டத்தில் எந்தக் கேள்வி கேட்டாலும் உத்தரம் சொல்லத் தயாராக நூலை நன்றாகப் பாராயணம் செய்துவிட்டு, ஒரு நல்ல நாள் பார்த்து அரண்மனைக்கு மறுபடியும் போனார். அரசன் பிராமணரை மரியாதையாகவே வரவேற்றான். படித்தாகி விட்டதா? என்று அரசன் கேட்க, மகாராஜவே! சன்னிதானத்து உத்தரவுப்படி புராணத்தை நன்றாகப் பலமுறை ஓதிவிட்டு வந்திருக்கிறேன். பாகவதத்தைப் பலமுறை கிரமப்படி விஸ்தாரமாகச் சொல்லி உங்களுடைய கீர்த்தியையும் தருமத்தையும் வளரச் செய்யவேண்டும். என்பதே என் ஆசை  என்றார் வித்வான். அரசன்  பண்டிதரே! நான் உம்முடைய சீடனாக அமைந்து பாகவதம் கேட்கப் போகிறேன் என்பது நிச்சயம்.  ஆனால் இன்னும் ஒரு முறை நீங்கள் பாகவதத்தைப் படித்துவிட்டு வாருங்கள்! என்றான். மறுபடியும் இவ்வாறு ஏமாற்றம் அடைந்த பிராமணர் வீடு திரும்பி மனைவியிடம் நடந்த கதையைச் சொன்னார். அவள் இதில் ஏதோ ரகசியம் இருக்க வேண்டும். அரசன் சொற்படி மறுபடியும் படித்துத்தான் தீருங்கள், பார்ப்போம்  என்றாள்.

விடா முயற்சியுடன் பண்டிதர் மறுபடியும் படிக்க ஆரம்பித்தார். மறுபடியும் ஏமாற்றம் அடையக் கூடாதென்று தனியாக ஒரு விடுதி ஏற்படுத்திக் கொண்டு மிக்க கவனமும் ஆழ்ந்த சிந்தனையும் செலுத்திப் படித்தார். இந்த முறை பாகவதத்தைப் படிக்கும்போது அவர் அந்த நூலில் புதிய கருத்துக்களைக் கண்டார். அவரையும் அறியாமல் புருஷோத்தமன் அவதார மகிமை அவர் உள்ளத்தைக் கவர்ந்தது. சரியான வேளையில் சாப்பிடுவதையும் மறந்தார். பாகவதத்தில் முந்திக் காணாத உண்மைகளை யெல்லாம் கண்டார். வீட்டுக்கும் போகாமல் தாம் ஏற்படுத்திக்கொண்ட ஆசிரமத்திலேயே காலம் கழித்தார். புகழ், தனம், கவுரவம், இவையெல்லாம் அற்பப்பொருள்கள் என்று தோன்ற ஆரம்பித்தது. பிறகு பாகவதம் படிப்பதையும் விட்டு விட்டுத் தியானத்திலே ஆழ்ந்து விட்டார். அரசன் மாளிகைக்குப் போகும் எண்ணத்தையும் துறந்துவிட்டார். குடும்பத்தைக் கவனியாமல் இவ்வாறு தியானத்திலும் ஜபத்திலும் தன் புருஷன் காலம் கழிப்பதைப் பார்த்த மனைவி மிகவும் வருத்தமுற்றாள். எதையோ ஆரம்பித்து இப்படி விபரீதமாக முடிந்ததே என்று அவள் துக்கப்பட்டு, ஒன்றும் தோன்றாமல் அரசனிடம் சென்று தன் கஷ்டத்தைச் சொல்லிக்கொள்ள அனுமதி கோரினாள். அரசன் அவளிடம் நடந்ததைக் கேட்டறிந்தான். அரசனுக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாகி அந்த வித்துவானைப் பார்ப்பதற்குத் தானே புறப்பட்டுச் சென்றான்.

அரசன் ஆசிரமத்தை யடைந்தபோது, பிராமணருடைய முகத்தில் புது தேஜஸ் ஜொலிப்பதைக் கண்டான். சம்பூரண ஞானம் அடைந்த ஒளி பிரகாசித்தது. அரசன் விழுந்து கும்பிட்டு, கடவுளின் அருள் பெற்றுவிட்டீர். உங்களை நமஸ்கரிக்கிறேன். நான் செய்த அபசாரத்தை மன்னிக்கவேண்டும் என்று சொன்னான். படிப்பும் புலமையும் வேறு; படித்த படிப்புடன் பக்தியும் கலந்து மெய்யுணர்வாவது வேறு.

 
மேலும் ராமகிருஷ்ண உபநிஷதம் »
temple news
ராமகிருஷ்ண பரமஹம்ஸருடைய உபதேசங்கள் உபநிஷத்துக்குச் சமானம் என்றால் மிகையாகாது. பழைய காலத்து ... மேலும்
 
temple news
பல்வேறு வழிகளில் நாம் கடவுளை உபாசித்துக்காட்சியும் அருளும் பெறலாம். ஆற்றங்கரையில் பல படித்துறைகள் ... மேலும்
 
temple news
பெரிய வியாபாரி ஒருவர் பரமஹம்ஸரிடம் வந்து சுவாமி! நான் என்னுடைய சொத்தெல்லாதவற்றையும் குடும்பத்துக்கு ... மேலும்
 
temple news
சித்த சுத்தி: அழகிய ஒரு ஸ்திரீயைப் பார்க்கும்போது உலக மாதாவான தேவியைத் தியானிக்க வேண்டும். முன் ... மேலும்
 
temple news
பெண்ணாய்ப் பிறந்த எல்லோரும் தேவியினுடைய அம்சங்களே யன்றி வேறல்ல என்பது பகவான் ராம கிருஷ்ணர் அடிக்கடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar