Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராஸக்ரீடை -3
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » ராஸக்ரீடை
ராஸக்ரீடை
எழுத்தின் அளவு:
ராஸக்ரீடை

பதிவு செய்த நாள்

07 ஆக
2015
04:08

ராஸக்ரீடை- 1: பகவான் அருகில் செல்லுதல்

1. கோபீ ஜநாய ககிதம் நியம அவஸாநே
மார உத்ஸவம் த்வம் அத ஸாதயிதும் ப்ரவ்ருத்த:
ஸாந்த்ரேண சாந்த்ர மஹஸா சிசிரீக்ருத ஆசே
ப்ராபூரய: முரளிகாம் யமுநா வந அந்தே

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ முன்பு ஒரு சமயம் கோபிகைகள் பார்வதியைக் குறித்த விரதத்தின் முடிவில் மன்மத உத்ஸவமான ராஸக்ரீடை நடத்துவதாக கோபிகைகளுக்கு வாக்களித்தாய் (தசகம் 60: ஸ்லோகம் 9). அதனை நிறைவேற்றும் பொருட்டு நீ நிலவின் ஒளியால் குளிர்ந்து இருந்த யமுனை நதியின் கரையில் உனது புல்லாங்குழலை இனிமையாக ஊதினாய்.

2. ஸம்மூர்ச்சநாபி: உதித ஸ்வர மண்டலாபி:
ஸம்மூர்ச்சயந்தம் அகிலம் புவந அந்தாரளம்
த்வத் வேணு நாதம் உபகர்ண்ய விபோ தருண்ய:
தத் தாத்ருசம் கமபி சித்த விமோஹம் ஆபு:

பொருள்: எங்கும் நிறைந்தவனே! குருவாயூரப்பா! உனது குழலில் இருந்து மிகவும் இனிமையான இசை எழுந்தது. அது ஏழு ஸ்வரங்களை இனிதே உடையதாகவும், ஏற்றத்தாழ்வுகள் இன்றி நேர்த்தியானதாகவும், உலகங்கள் அனைத்தையும் மயக்குவதாகவும் இருந்தது. உனது அந்த நாதத்தைக் கேட்ட கோபிகைகள் உவமை எதுவும் கூற முடியாத அளவிற்கு மனம் மயங்கி இன்பம் அடைந்தனர்.

3. தா கோஹ க்ருத்ய நிரதா: தநய ப்ரஸக்தா:
காந்த உபஸேவந பரா: ச ஸரோருஹ அக்ஷ்ய:
ஸர்வம் விஸ்ருஜ்ய முரளீ ரவ மோஹிதா: தே
காந்தார தேசம் அயி காந்த தநோ ஸமேதா:

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அழகிய மனம் கவரும் திருமேனி உடையவனே! அந்த நேரத்தில் கோபிகைகளில் - சிலர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தனர்; சிலர் குழந்தைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர்; சிலர் கணவன்மார்களுக்கு சேவை செய்து கொண்டிருந்தனர். தாமரை போன்ற அழகான கண்கள் உடைய அந்தப் பெண்கள் உன்னுடைய இனிமையான குழல் ஓசை கேட்டவுடன், நீ உள்ள இடத்திற்கு வீட்டு வேலைகளை அப்படியே விட்டு விட்டு வந்தனர்.

4. கா; சித் நிஜ அங்க பரிபூஷணம் ஆத தாநா:
வேணு ப்ரணாதம் உபகர்ண்ய க்ருதார்த்த பூஷா:
த்வாம் ஆகதா: நநு ததா ஏவ விபூஷிதாப்ய:
தா ஏவ ஸம்ருருசிரே தவ லோசநாய

பொருள்: குருவாயூரப்பா! மேலும் சில கோபிகைகள் தங்கள் உடலில் நகைகளை அணிந்து கொண்டிருக்கும் போது உனது குழலோசை கேட்டது. அந்த மகிழ்வில் பாதி செய்த அலங்காரத்துடன் அப்படியே வந்தனர். முழுவதுமாக அலங்காரம் செய்து கொண்டிருந்தவர்களை விட இவர்கள் உன்னை அதிகம் கவர்ந்தனர் அல்லவா?

5. ஹாரம் நிதம்பே புவி காசந தாரயந்தீ
காஞ்சீம் ச கண்ட புவி தேவ ஸமாகதா த்வாம்
ஹாரி த்வம் ஆத்ம ஜகநஸ்ய முகுந்த துப்யம்
வ்யக்தம் பபாஷ இவ முக்த முகீ விசேஷாத்

பொருள்: தேவனே! முகுந்தா! குருவாயூரப்பா! இவர்களில் ஒரு பெண் தனது இடுப்பில் மாலையையும், கழுத்தில் ஒட்டியாணத்தையும் (மாற்றி) அணிந்தவளாக உன்னிடம் ஓடி வந்தாள். அதன் மூலம் தனது இடுப்பானது அழகானது என்று உன்னிடம் உணர்த்தினாள் போலும்.

6. காசித் குசே புந: அஸஜ்ஜித கஞ்சுலீகா
வ்யாமோஹித: பரவதூபி: அலக்ஷ்யமாணா
த்வாம் ஆயயௌ நிருபம ப்ரணய அதிபார
ராஜ்ய அபிஷேக விதயே கலசீ தரா இவ

பொருள்: குருவாயூரப்பா! அவர்களில் ஒரு பெண் அவசரத்தில் தனது மேல் ஆடையை அணிய மறந்து விட்டாள். மற்றவர்களுக்கு அவள் இப்படி வந்தது தெரியவில்லை. அன்பு என்னும் உனது அந்த அரசாங்கத்தில் பட்டாபிஷேகம் செய்ய புனித நீர் கொண்டு வருவது போல் அவள் இரண்டு கலசங்கள் ஏந்தியவளாக வந்தாள் அல்லவா?

7. கா: சித் க்ருஹாத் கில நிரேதும் அபாரயந்த்ய:
த்வாம் ஏவ தேவ ஹ்ருதயே ஸுத்ருடம் விபாவ்ய
தேஹம் விதூய பரசித் ஸுக்ரூபம் ஏகம்
த்வாம் ஆவிசந் பரம் இமா: நநு தந்ய தந்யா:

பொருள்: தேவனே! குருவாயூரப்பா! சிலர் தங்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியவில்லை. அவர்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே உன்னை ஆழமான அன்புடன் தங்கள் இதயத்தில் த்யானம் செய்தனர். இப்படியாக அவர்கள் தங்கள் உடலை விட்டவர்களாக, உனது உடலில் இரண்டறக்  கலந்தார்கள் அல்லவா? இவர்கள் மிகுந்த புண்ணியம் செய்தவர்கள் அன்றோ!

8. ஜார ஆத்மநா ந பரம ஆத்மதயா ஸ்மரந்த்ய:
நார்ய: கதா: பரமஹம்ஸ கதிம் க்ஷணே ந
தம் த்வாம் ப்ரகாச பரம் ஆத்ம தநும் கதஞ்சித்
சித்தே வஹந் அம்ருதம் அச்ரமம் அச்நுவீய

பொருள்: குருவாயூரப்பா! அந்த கோபாஸ்திரீகள் உன்னை பரம்பொருள் என்றே நினைக்கவில்லை. தங்கள் கள்ளக் காதலனாக மட்டுமே நினைத்தனர். இதனால் அவர்கள் ஒரு நொடியில் பரம ஹம்ஸர்களான சந்நியாசிகள் அடையும் மோட்ச வழி பெற்றனர். கண்கூடாகக் காட்சி அளிக்கும் உனது ஸ்வரூபத்தை நான் (அவர்கள் போல்) என் மனதில் த்யானித்து, நிலை நிறுத்தி, எந்தவித சிக்கலும் இன்றி மோட்சம் பெறுவேன்.

9. அப்யா கதாபி அபித: வ்ரஜ ஸுந்தரீபி:
முக்த ஸ்மித ஆர்த்ர வதந: கருணா அவலோகீ
நிஸ்ஸீம காந்தி ஜலதி: த்வம் அவேக்ஷ்ய மாண:
விச்வ ஏக ஹ்ருத்ய ஹரமே பரம ஈச ரோகாந்

பொருள்: உலகின் அனைவருடைய உள்ளத்தில் இருக்கும் பரம்பொருளே! குருவாயூரப்பா! உன்னை நாடி வந்த கோபிகைகள் உன்னைச் சுற்றி நிற்பதால் இனிமையான புன்னகை உடையவனாகவும், கருணை ததும்பும் முகம் உள்ளவனாகவும், ஒளிவீசும் முகம் கொண்டவனாகவும் உன்னை அவர்கள் கண்டனர். இப்படிப்பட்ட நீ எனது பிணிகளை நீக்க வேண்டும்.

ராஸக்ரீடை -2

1. உபயதாநாம் ஸுத்ருசாம் குஸும்
ஆயுத பாண பாத விவ சாநாம்
அபிவாஞ்சிதம் விதாதும் க்ருத மதி:
அபி தா: ஜகாத வாமம் இவ

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அழகான கண்களை உடைய அவர்கள். மன்மதனின் காம அம்புகளால் தாக்கப்பட்டு, அதனால் தங்கள் அறிவை இழந்து, உன்னருகில் வந்து நின்றனர். நீ அவர்கள் விருப்பங்களை நிறைவேற்ற எண்ணம் கொண்டிருந்தாய். இருந்தாலும் அதனை விரும்பாதவன் போல் அவர்களிடம் பேசினாய்.

2. ககந கம் முநி நிவஹம் ச்ராவயிதும்
ஜகித குல வதூ தர்மம்
தர்ம்யம் கலு தே வசநம் கர்ம து
நோ நிர்மலஸ்ய விச்வாஸ்யம்

பொருள்: குருவாயூரப்பா! ஆகாயத்தில் சஞ்ரிக்கும் முனிவர்களின் காதுகளில் விழும்படியாக, நீ கோபிகைகளிடம் உயர்ந்த குலப் பெண்களின் தர்மங்களைக் கூறினாய். இப்படி தர்மங்களை உரைத்த உனது சொற்களை எடுத்து நடக்க வேண்டுமே அல்லாது, குற்றமில்லாத உனது செயல்களை அல்ல.

3. ஆகர்ண்ய தே ப்ரதீபாம்
வாணீம் ஏணீ த்ருச: பரம் தீநா:
மா மா கருணா ஸிந்தோ பரித்யஜேத்
அதி சிரம் விலேபு: தா:

பொருள்: குருவாயூரப்பா! உன்னுடைய இந்த முரணான அறிவுரைகளை கேட்ட மானின் விழிகள் போன்று அழகிய கண்கள் உடைய  அந்த கோபிகைகள், கருணாமூர்த்தியே! எங்களை கைவிடாதே என்று கெஞ்சினர்.

4. தாஸாம் ருதிதை: லபிதை: கருணா
ஆகுலா மாநஸ: முராரே த்வம்
தாபி: ஸமம் ப்ரவ்ருத்த: யமுநா
புலிநேஷு காமம் அபிரந்தும்

பொருள்: குருவாயூரப்பா! முரன் என்னும் அசுரனை அழித்த முராரியே! இப்படியக அழுதும் புலம்பியும் நின்ற அவர்களைக் கண்டதும் உனது மனம் இரங்கியது. உடனே அவர்களுடன் யமுனையின் கரையில் உள்ள மணலில் விளையாடச் தொடங்கினாய். அல்லவா?

5. சந்த்ர கர ஸ்யந்த லஸத் ஸுந்தர
யமுநா தட அந்த வீதிஷு
கோபீ ஜந உத்தரீயை: ஆபாதித
ஸம்ஸ்தரே ந்யஷீத: த்வம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அப்போது நிலவின் குளிர்ந்த ஒளியால் யமுனை ஆற்றின் கரை மிகவும் அழகாக இருந்தது. கோபிகைகள் தங்கள் மேலாடைகளை கீழே மணலில் விரித்து உனக்கு ஆசனம் போன்று அமைத்தனர். நீயும் அதில் அமர்ந்தாய் அல்லவா?

6. ஸுமதுர நர்ம ஆலபநை: கர
ஸங்க்ரஹணை: ச சும்பந உல்லாஸை:
காட ஆலிங்கந ஸங்கை: த்வம்
அங்கநா லோகம் ஆகுலீசக்ருஷே

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ அவர்களிடம் மிகவும் நளினமாகவும், நகைச்சுவையுடனும் பேசி மகிழ்ந்தாய். அவர்கள் கைகளைப் பிடித்துக் கொண்டும், முத்தங்கள் இட்டுக் கொண்டும் கட்டித் தழுவிக் கொண்டும் இருந்தாய். இதன் மூலம் அவர்கள் மனதை உருக்கினாய்.

7. வாஸ: ஹரண திநே யத் வாஸ:
ஹரணம் ப்ரதிச்ருதம் தாஸாம்
தத் அபி விபோ ரஸ விவச: ஸ்வ
அந்தாநாம் காந்த ஸுப்ருவாம் அததா:

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே! அழகிய புருவங்களை உடைய அந்தக் கோபிகைகளிடம் முன்பு ஒரு சமயம் அவர்கள் நீராடியபோது அவர்கள் ஆடையைக் கவர்ந்தபோது அவர்களுக்கு வாக்களித்தாய். அதனை நிறைவேற்றும் வண்ணமாக இப்போது அவர்கள் ஆடைகளை நீ களைந்தாய்.

8. கந்தலித கர்ம லேசம் குந்த ம்ருது
ஸ்மேர வக்த்ர பாதோஜம்
நந்த ஸுத த்வாம் த்ரி ஜகத் ஸுந்தரம்
உபகூஹ்ய நந்திதா பாலா:

பொருள்: நந்தகோபரின் மகனே! குருவாயூரப்பா! உனது உடலிலும் முகத்திலும் வேர்வைத் துளிகள் மொட்டுகளாக இருந்தன. முகமானது தாமரை போன்று அழகாக மலர்ந்து இருந்தது. நீ மூன்று உலகங்களிலும் உள்ளவர்களில் மிகவும் அழகனாகத் தோன்றினாய். இப்படிப்பட்ட உன்னை கோபிகைகள் இறுக்கமாகத் தழுவிக் கொண்டு பரமானந்தம் அடைந்தனர்.

9. விரஹேஷு அங்காரமய:
ச்ருங்காரமயி ச ஸங்கமே ஹி த்வம்
நிதராம் அங்காரமய: தத்ர புந:
ஸங்கமே அபி சித்ரம் இதம்

பொருள்: குருவாயூரப்பா! நீ பிரிந்து உள்ள காலங்களில் மிகுந்த துன்பம் அளிக்கும் விரகத்தீ போன்றும், அருகில் உள்ளபோது ஆனந்தம் அளிப்பவனாகவும் உள்ளாய். இப்போது நீ கூடி இருந்தபோதும் காதல் தீயாக இருந்தாய் என்பது வியப்பே!

10. ராதா துங்க பயோதர ஸாது பரீரம்ப லோலுப ஆத்மாநம்
ஆராதயே பவந்தம் பவந புர அதீச சமய ஸகல கதாந்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ராதையின் பெரிய ஸ்தனங்களை தழுவிக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் உடைய உன்னை நான் துதிக்கிறேன், என்னுடைய பிணிளை நீ தீர்க்க வேண்டும்.

 
மேலும் ஸ்ரீமந் நாராயணீயம் ராஸக்ரீடை »

ராஸக்ரீடை -3 ஆகஸ்ட் 07,2015

ராஸக்ரீடை -31. ஸ்புரத் பர ஆநந்த ரஸ ஆதமகேநத்வயா ஸமாஸாதித போக லீலா:அஸீமம் ஆனந்த பரம் ப்ரபந்நாமஹாந்தம் ஆபு: ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar