Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எண்ணெய்க் கிண்ணம் நீரின் மேல் படகு நீரின் மேல் படகு
முதல் பக்கம் » ராமகிருஷ்ண உபநிஷதம்
தேவீ கவசம்
எழுத்தின் அளவு:
தேவீ கவசம்

பதிவு செய்த நாள்

11 ஆக
2015
05:08

மரத்தில் வேரிலிருந்து நுனிக்கிளை வரையில் பரவி இயங்கும் மரச் சாறானது. இலையும் கிளையும், பூவும் காயுமாகத் தோற்றம் கொள்ளுகிறது.  அதைப் போல ஒரே பரம்பொருள் பிரபஞ்சத்திலுள்ள எல்லாத் தோற்றங்களுமாகிறது. இந்தச் சிருஷ்டி லய நிலையிலிருக்கும் பரம்பொருளுக்கு நம்  பெரியோர்கள். மகா சக்தி என்றும் மாயை என்றும் இன்னும் பல்வேறு பெயரிட்டும் சொல்வார்கள். நாம் காணும் எல்லாப் பொருள்களும் எல்லா ÷ வகங்களும் எங்கும் பரவி நிற்கும். பரம்பொருளின் உருவ விகாரங்களேயாகும். உயிர் பெற்று வளர்ந்து அழிந்து மறையும் ஜீவராசிகள் அனைத்தும்  மகாசக்தியின்  விசுவரூபம், ஏகமாய் நின்ற பரம் பொருள் தன் சங்கற்பத்தினால் பலவாகப் பிரிந்தது. அவ்வாறுண்டான தனிப் பொருள்கள் ஓயாமல்  முன் போல் மறுபடி ஒன்று சேரப் பார்க்கின்றன. அதுவே நாம் பார்க்கும் பலவித பவுதிக மானசிகக் கவர்ச்சி வேகங்களுக்கு மூல காரணம். பிரிபட்ட  தாதுக்கள் ஒன்று சேரத் துள்ளி விரும்புவதே பலவித கவர்ச்சி வேகங்களாகின்றன. பவுதிக விஞ்ஞானிகள்  அவற்றைச் சோதித்தும் வகுத்தும்  விளக்கியிருக்கிறார்கள். பூமியினின்று பிரிந்த பொருள்களைப் பூமி இழுப்பதும் எண்ணற்ற கோளங்கள் பிரம்மாண்டத்தில் விசுவ கவர்ச்சி ÷ வகத்துக்கு அடங்கி ஓயாமல் சுழல்கின்றதும். எல்லாமே பராசக்தியின் திருவிளையாடல்கள். விசுவ கவர்ச்சியை விஞ்ஞானிகள், அது எப்படி ÷ வலை செய்கிறது. அதன் விசை என்ன என்பதை யெல்லாம் ஆராய்ந்து விளக்கியும் வந்திருக்கிறார்கள். அது ஒரு பெரிய கணித சாஸ்திரப் பகுதி,  ஆனால் அந்தக் கவர்ச்சியும் அதன் நியதியும் அது எந்த மூலகாரணத்தின் தோற்றம் என்பதும் அவர்களுடைய ஆராய்ச்சிக்குள் அடங்காத விஷயம்.  மகா சக்தி, மாதவி, துர்க்கை; தேவி என்றெல்லாம்  ராமகிருஷ்ணர் உள்ளங் கரைந்து வழிபட்ட பரம் பொருளே அது; சங்கரர் ஆயிர நாமங்களிட்டு  அர்ச்சித்ததும் அந்த மகா சக்தியையே.

மகா சக்தியின் தோற்ற வேறுபாடுகளான பல கவர்ச்சி வேகங்களில் ஆண் பெண் கவர்ச்சியும் ஒன்று. அது மக்களை மிக வாட்டுகிறது என்பது  அனைவரும் அறிந்த விஷயம். பராசக்தியின் பிரசாதமான இந்த இயற்கை வேகம் மக்களுக்கு அடங்கா மகிழ்ச்சியும் தந்து வருகிறது. கூடவே  அவர்களை மிகவும் துன்புறுத்தியும் வருகிறது. இல்லற வாழ்க்கையும் அதில் தோன்றி வளரும் சந்தோஷமும் அன்பும் இந்தக் கவர்ச்சியினின்று  விளையும் பயன்கள். பல கஷ்டங்களுக்கும் துக்கத்துக்கும் பாவத்துக்கும் அதுவே தோற்றுவாயாகிறது. பெரும் சக்தி கொண்ட இந்த கவர்ச்சிக்குப்  பசுத்துவம்  அல்லது பசு தருமம்  என்பது ஒரு பழைய பெயர். அது எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவான ஒரு இயற்கை வேகம், அதை இகழ்தலில்  பயனில்லை. அதைத் தீய நெறியில் செல்லவிடாமல் தரும மார்க்கத்தில் அடக்கிச் செலுத்த வேண்டும். என்பது பெரியோர்கள் உபதேசம். கவர்ச்சி  வேகம் தூய நெறியில் செல்வதற்காக சாதாரண மக்களுக்குச் சமூகத்தில் அமைக்கப்பட்டிருக்கிற இல்லற வாழ்க்கையும், மனைவி மக்கள் அன்பு உய ர்ந்த சாதனங்களாகும். இந்த நெறியை விட்டு, துன்மார்க்கத்தில் மக்களுடைய பசு தருமம் சென்றால் கேடும் துக்கமும் நிச்சயம்.

சில மகான்கள் கவர்ச்சி வேகத்தை முற்றிலும் வென்று, அதை ஆன்ம வேகமாக மாற்றிக்கொண்டு பிரம்மசரிய நிலையில் இருந்து வருகிறார்கள்.  மகாசக்தியின் அருளால் அவர்களுடைய பசு தருமத்தின் வேக முழுமையும் உடல் உள்ளம் இரண்டுக்கும் உரம் தரும் சாதனமாகி அவர்களே உயர் நிலைக்குத் தூக்கி விடுகிறது. முற்றிலும் அடக்கமுடியாதாயினும் எவ்வளவில் பசு தருமத்தை மறந்து வெற்றி பெறுகிறோமோ அவ்வளவில் ஆன்ம  சக்தியும் மேதை மலர்ச்சியும் அடைகிறோம்.

பாரத மக்களாகிய நாம் நல்ல இயற்கைப் பண்பும் சமுதாயப் பண்பாடும் பிறப்புரிமையாகப் பெற்றிருக்கிறோம். பாரம்பரியமாகக்  கூரிய புத்தியும்  சிரிப்பும் சந்தோஷமும் கொண்ட சுபாவத்தைப் படைத்திருக்கிறோம். நம்முடைய உணர்ச்சியானது, வெறியாட்டம் கொள்ளாமல் எப்போதும்  அடக்கமும் சாந்தமும் கொண்டு மலரும். இவ்வளவு நல்ல குணங்களுக் கிடையில் பசு தருமக் கவர்ச்சி வேகம், எல்லாவற்றையும் பாழ்படுத்தும்  அபாயமாக இருக்கிறது. மிருகங்களுக்கும் மக்களுக்கும் பொதுவான அந்த வேகத்தை அடக்கி ஆளாவிட்டால் அது கொடும் பிசாசு ஆகிவிடுகிறது.  பொருள்களின் ஏற்றத்தாழ்வை அறிய முடியாதபடி விவேகத்தைக் கலைத்துக் கொன்று தனிமகனையும் சமூகப் பண்பாட்டையும் கெடுத்துவிடும்.  இதற்கு இடம் கொடுக்காமல் நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இல்லாவிடில் நம்முடைய சமூகத்தின் மிக நல்ல குணங்கள் எல்லாம் இந்தப் பி சாசுக்கு இரையாகி நாசமாய்ப் போகும். பெண்கள் துணையின்றித் தெருவிலும் கடையிலும் மற்ற இடங்களிலும் பயமில்லாமல் செல்லும் நிலைமை  ஏற்பட்டு வந்தால்தான் அந்தச் சமூகம் பண்பட்ட ஜாதியாக மதிக்கப்படும். உயர்நிலை நாகரிகத்துக்கு இதுவே அடையாளம். வாழ்க்கைச் சுகத்துக்கும்  இது இன்றிமையாத நிலை; நம்முடைய நகரத் தெருக்களில் சென்றால் எல்லாவித நாகரிகங்களும் காணப்படுகின்றன. முன் நாட்களைவிட மக்கள்,  ஆண்களும் பெண்களும் எல்லா ஜாதியாருமே, இப்போது சுத்தமாகவும் நல்ல உடை தரித்தும் வருகிறார்கள். ஆயினும் ஆண் மக்களுடைய நடை  பாவனைகளைப் பார்த்தால் பசு தருமம் சரியாக அடக்கப்பட்டு வருகிறதா என்பது கொஞ்சம் சந்தேகமாகத்தான் தோன்றுகிறது. ஆண் மக்களைக்  கண்டால் பெண்கள் இயற்கையாகக் கூச்சப்படலாம். ஆனால் கூச்சம் வேறு; அச்சம் வேறு, தாம் அறியாத அன்னிய ஆண் மக்களைப் பற்றி அதே ÷ தசத்தைச் சேர்ந்த பெண் மக்கள் ஏன் அச்சப்பட வேண்டும்? ஆண் மக்களின் உள்ளமும் உணர்ச்சியும் சுத்தமாக இருப்பின் பெண்கள் உள்ளத்தில்  பயம் உண்டாகாது. முகமும் கண்ணும் உள்ளத்திலே தோன்றும் உணர்ச்சியை உடனே காட்டும். ஆண்மக்கள் முகத்திலும் கண்ணிலும் தோன்றும்  குறிப்புகளைப் பார்த்துத்தான் சகோதரிகள் பயப்படுகிறார்கள். ஆண்மக்களைப் பார்த்து சகோதரிகள் அச்சமடைந்து வரும் சமூகத்தை என்னவென்று   மதிப்பது? பசு தருமவேகத்தை மக்கள் வேலி போட்டு நன்றாக ஆண்டாலொழிய நம்முடைய சமூகம் இன்னும் சரியான பண்பாடு அடையவில்லை.  என்றே முடித்துக் கொள்ளவேண்டும். இதையெல்லாம் நான் எழுதுகிறேனே. என்று கோபித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு ஸ்திரீயைக் கண்டால் இவள் தேவியின் அவதாரம் என்று ராமகிருஷ்ணர் எண்ணியபடியே நாம் ஒவ்வொருவரும் பாவித்து, பசு தருமப் பேயை  அடக்குவோமாக, அனைவரும் அறியும்படி வேசிகளாக வாழ்ந்த பெண்களையும் பகவான் ராமகிருஷ்ணர் துர்க்காதேவியின் அம்சமாகவே  கண்டார். ஒரு வேசியைக் கண்டாலும் தாயிடம் செலுத்தும் அன்பும் வணக்கமுமே அவர் உள்ளத்தில் தோன்றும். நம்முடைய உள்ளத்தில்  பசுத்துவத்துக்கு இடம் உண்டாகாமலிருக்க நாம் ராமகிருஷ்ணருடைய மந்திரத்தை நன்றாகக் கையாள வேண்டும். பழக்கத்தினால் ஆகாத காரியம்  எதுவுமில்லை. சீதை, பார்வதி, லக்ஷ்மி, கவுரி, ஈசுவரி, அம்மன் இவையனைத்தும் தேவியின் நாமங்கள் பெண்ணுருவம் ஒன்றைக் கண்டபோது  ராமகிருஷ்ணரைத் தியானித்து தேவியின் நாமங்களை நாவிலும் உள்ளத்திலும் தரித்து, இவள் தேவி, இவளும் பராசக்தியின் அவதாரம், இவளை  உள்ளத்தில் பணிவேனாக என்று நம்முடைய சமூகத்துக்கும் நம் சுய நன்மைக்காகவும் சேவை செய்வோமாக, சுத்த வாழ்க்கைக்கும் உயர்ந்த  பண்பாட்டுக்கும் சாதனமாகிய இந்த தேவி கவசத்தை ராமகிருஷ்ணா நமக்குக் கொடுத்திருக்கிறார். அதைப் பயன்படுத்திக் கொள்ளுவோமாக.

பள்ளிகளில் கூடிப் பயிலும் மாணவர்களே! மூளையைப் பெருக்கும் உங்கள் நன் முயற்சிகளில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள், மனத் துப்புரவு  உங்களுக்கு மிகவும் முக்கியம். துப்புரவு என்பது உடலும் உடுப்பும் சுத்தமாக வைத்துக் கொள்வது. மட்டுமல்ல, எல்லாப் படிப்பையும் விட முக்கி யமான படிப்பு மனதில் பசு தர்மக் கவர்ச்சிப் பேய் குடி கொள்ளாமல் உள்ளத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளப்பயில்வதாகும். பசு தருமம் வாய்ந்த  அழுக்குப் படங்களும் கதைகளும் புஸ்தகங்களும் நம்முடைய சமுகப்பண்பாட்டை நாசம் செய்யப் பார்க்கின்றன. பணம் சம்பாதிப்பதற்காகப் பசு  தரும வேகத்தையே மூலதனமாகக் கொண்டு, பொய்யை மெய்யாகக் காட்டும் மக்களுக்குச் சமூகத்தில் அதிக இடமும் சலுகையும் ஏற்பட்டு வந் துள்ளன. நம்முடைய சிறுவர்கள் எந்த விதத்திலும் மிக நல்லவர்கள். அவர்களுடைய பசு தருமத்தைத் தூண்டி அவர்களையும் பாவக் குழியில் தள்ளி  நம்முடைய சமூகமும் மதிப்பிழக்க நாம் விடுவதா? பராசக்தியை வழிபட்டு இல்லற வாழ்க்கையை மேம்படுத்தித் தமிழ்நாட்டில் எந்தச் சிறுமியும்  எந்த வேளையிலாயினும் எங்கேயாயினும் தைரியமாகப் போகலாம். இருக்கலாம், எந்தத் தமிழ் மகனும் அவளுக்கு ஆண் நல்ல படைகாப்புமாவான்  என்று உறுதிப்படுத்துவோம். ஓங்குக நல்லொழுக்கம்! வாழ்க.

 
மேலும் ராமகிருஷ்ண உபநிஷதம் »
temple news
ராமகிருஷ்ண பரமஹம்ஸருடைய உபதேசங்கள் உபநிஷத்துக்குச் சமானம் என்றால் மிகையாகாது. பழைய காலத்து ... மேலும்
 
temple news
பல்வேறு வழிகளில் நாம் கடவுளை உபாசித்துக்காட்சியும் அருளும் பெறலாம். ஆற்றங்கரையில் பல படித்துறைகள் ... மேலும்
 
temple news
பெரிய வியாபாரி ஒருவர் பரமஹம்ஸரிடம் வந்து சுவாமி! நான் என்னுடைய சொத்தெல்லாதவற்றையும் குடும்பத்துக்கு ... மேலும்
 
temple news
சித்த சுத்தி: அழகிய ஒரு ஸ்திரீயைப் பார்க்கும்போது உலக மாதாவான தேவியைத் தியானிக்க வேண்டும். முன் ... மேலும்
 
temple news
சாஸ்திரங்களும் புராணங்களும் படித்த ஒரு பிராமணர் அரசனிடம்போய் அரண்மனையில் புராணம் வாசித்துச் சொல்லத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar