Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவம் ... தமிழகத்தில் கோவில்கள் அதிகம் இருப்பது ஏன்? தமிழகத்தில் கோவில்கள் அதிகம் ...
முதல் பக்கம் » துளிகள்
அம்மனுக்கு பூப்புனித நீராட்டு நடக்கும் கோவில் தெரியுமா?
எழுத்தின் அளவு:
அம்மனுக்கு பூப்புனித நீராட்டு நடக்கும் கோவில் தெரியுமா?

பதிவு செய்த நாள்

12 ஆக
2015
04:08

அம்மனுக்கு பலவித திருவிழா நடக்கும் தலங்கள் எத்தனையோ இருக்கின்றன. ஆனால்,  அவளுக்கு சந்தடியே இல்லாமல் பூப்புனித நீராட்டு விழா நடக்கும் தலம் மதுரை மீனாட்சியம்மன் கோவில். அம்பிகை அருளாட்சி செய்யும் தலங்களில் மதுரைக்கு மிகுந்த சிறப்பு உண்டு. 64 சக்தி பீடங்களில் முதல் பீடமானதால், எல்லாப் பூஜைகளும் தேவிக்கு நடந்த பின்னரே சுவாமிக்கு நடக்கின்றன. ஆடிப்பூரம் நட்சத்திரத்தில் பார்வதி தேவி ருதுவானதாக (வயதுக்கு வருதல்) ஐதீகம். பூலோகத்தில் அம்பிகையே மலையத்துவஜ பாண்டிய மன்னரின் மகளாகப் அவதரித்தாள். கன்னிப்பருவம் அடைந்த அவளுக்கு, மானிடப் பெண் என்ற அடிப்படையில், ஆடிப்பூரத்தன்று சடங்கு நடத்துகின்றனர்.ஆடிப்பூரநாளில், கருவறையிலுள்ள அம்பாளுக்கும், உற்சவருக்கும் பூப்புனித நீராட்டு விழா நடக்கும். காலை 9.30 மணிக்கு மேல் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும். அப்போது திரைபோட்டு மறைத்து விடுவார்கள். மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடக்கும். பிறகு திரையை விலக்கி ஏற்றி இறக்கும் சடங்கு நடத்தப்படும். உற்சவர் மீனாட்சிக்கு நாழி ஒன்றில் நெல் நிரப்பி அதில் தீபம் ஏற்றி மூன்று முறை மேலும், கீழுமாக இறக்குவர். வயதுக்கு வந்த அம்பிகைக்கு திருஷ்டி கழிப்பதற்காக இந்தச் சடங்கு செய்யப்படும்.

உற்சவ அம்பாளுக்கு சம்பா சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், தயிர்சாதம், சர்க்கரைப் பொங்கல் இதில் ஏதாவது ஒன்றை பிரதானமாகப் படைப்பர். இவளது பாதத்தில் ஒருமுறத்தில் (சுளவு) சட்டைத்துணி, குங்குமச்சிமிழ், மஞ்சள் கிழங்கு, திருமாங்கல்யம் ஆகியவை வைத்து பூஜை செய்யப்படும். மூலஸ்தான அம்பாளுக்கு வழக்கமான நைவேத்யம் தான்!மதுரை பகுதி வீடுகளில் பூப்புனித நீராட்டு விழா நடத்தும் போது, பெண்ணை அமர வைத்து சாதம் ஒரு புறமும், கறி வகைகளை ஒரு புறமும் வைப்பர். தாய்மாமன் மனைவியும், தந்தையின் சகோதரியும் தங்கள் கைகளை குறுக்காக வைத்துக் கொண்டு, சாதத்தையும், கறியையும் மூன்று முறை எடுத்து, பெண்ணுக்கு கொடுப்பது போல மேலும் கீழுமாக இறக்கி பாவனை செய்வர். கைகள் மேலும் கீழும் செல்வதால் இதற்கு ஏற்றி இறக்கும் சடங்கு என பெயர். இதே போல, சிவாச்சாரியார்களால் ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி நடந்த பின், அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட கண்ணாடி வளையல்கள் பெண்களுக்கு பிரசாதமாக வழங்குவர். இந்த நிகழ்ச்சி எளிய முறையில் நடத்தப்படுவதால், வெளியே தெரியவில்லை. எல்லாக் கோவில்களிலும் இந்த நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்பட வேண்டும்.  சித்ரான்னம், களி முதலியன படைத்து மக்களுக்கு வினியோகிக்கப்பட வேண்டும். கன்னிப் பெண்களுக்கு தாவணி, புடவை தானமாக வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால், ஆடிப்பூர விழா மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறும்.

 
மேலும் துளிகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar