Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » ஸ்யமந்தக மணி
ஸ்யமந்தக மணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2015
02:08

1. ஸத்ராஜித: த்வம் அத லுப்தவத் அர்க்க லப்தம்
திவ்யம் ஸ்யமந்தகமணிம் பகவந் அயாசீ:
தத் காரணம் பஹுவிதம் மம பாதி நூநம்
தஸ்ய ஆத்மஜாம் த்வயி ரதாம் ச லத: விவோடும்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! பகவானே! ஸத்ராஜித் என்ற ஒரு யாதவனுக்கு. அவன் சூரியனைக் குறித்து இயற்றிய தவத்தின் மூலமாக, ஸ்யமந்தகம் என்ற தெய்வீக சக்தி உடைய ஓர் இரத்தினக் கல் கிடைத்தது. நீ அந்த கல்லை அவனிடம் பேராசை உள்ளதுபோல் யாசித்தாயாமே! நீ அப்படிக் கேட்டதற்குக் காரணம் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் அவனுடைய மகளும் உன்மீது காதல் கொண்டிருந்தவளுமான சத்யபாமா என்பவளை திருமணம் செய்து கொள்ளுவதற்கு அல்லவா?

2. அதத்தம் தம் துப்யம் மணி வரம் அநேந அல்ப மநஸா
ப்ரஸேந: தத் ப்ராதா கள புவி வஹந் ப்ராப ம்ருகாயம்
அஹந் ஏநம் ஸிம்ஹ: மணி மஹஸி மாம்ஸ ப்ரம வசாத்
கபி: இந்த்ர: தம ஹத்வா மணிம் அபி ச பாலாய ததிவாந்

பொருள்: குருவாயூரப்பா! ஆனால் குறுகிய மனம் உள்ள அந்த ஸத்ராஜித் அந்த மணியை உன்னிடம் தரவில்லை. ஒரு முறை அவன் தம்பியான ப்ரஸேனன் என்பவன் அந்த மணியைத் தனது கழுத்தில் அணிந்து கொண்டு வேட்டைக்குச் சென்றான். அங்கு ஒரு சிங்கம் அந்த மணியைக் கண்டது அது ஒரு மாமிசத்துண்டு என்று நினைத்து ப்ரஸேனனைக் கொன்றது. அதன் பின்னர் குரங்குகளின் தலைவனான ஜாம்பவான் அந்தச் சிங்கத்தைக் கொன்றான். அதனிடமிருந்த மணியைப் பறித்துத் தனது குழந்தையிடம் கொடுத்தானாமே!

3. சசம்ஸு: ஸத்ராஜித் கிரம் அநு ஜநா: த்வாம் மணி ஹரம்
ஜநாநாம் பீயூஷம் பவதி குணிநாம் தோஷ கணிகா
தத: ஸர்வஜ்ஞ: அபி ஸ்வ ஜந ஸஹித: மார்கண பர:
ப்ரஸேநம் தம் த்ருஷ்ட்வா ஹரிம் அபிகத அபூ: கபி குஹாம்

பொருள்: குருவாயூரப்பா! அதன் பின்னர் ஸத்ராஜித் சொற்களைக் கேட்ட யாவரும் நீதான். அந்த மணியைத் திருடிவிட்டாய் என்று பேசத் தொடங்கினார்கள். நல்லவர்களைப் பற்றிய சிறு தோஷம் அனைவருக்கும் அமிர்தம் உண்டது போல் ஆகிறது போலும். நீ அனைத்தையும் உணர்ந்திருந்தாய். இருந்தபோதிலும் உனது உறவினர்களுடன் அந்த மணியைத் தேடிச் சென்றாய். அப்போது வழியில் சிங்கத்தால் கொல்லப்பட்ட ப்ரஸேனன் உடலையும், ஜாம்பவானால் கொல்லப்பட்ட சிங்கத்தின் உடலையும் கண்டாய். அதன் பின்னர் ஜாம்பவானின் குகையை அடைந்தாயாமே!

4. பவந்தம் அவிதர்கயந் அதிவயா ஸ்வயம் ஜாம்வாந்
முகுந்த சரணம் ஹி மாம் க இஹ ரோத்தும் இதி ஆலபந்
விபோ ரகுபதே ஹரே ஜயஜய இதி அலம் முஷ்டிபி:
சிரம் ஸ்தவ ஸமர்ச்சனம் வ்யதித பக்த சூடாமணி:

பொருள்: குருவாயூரப்பா! வயதில் முதிர்ந்தவனும் சிறந்தவனும் ஆகிய அந்த ஜாம்பவான் உன்னை யார் என்று அறியவில்லை. அவன் உன்னிடம், முகுந்தனையே சரணம் என்று புகுந்து என்னை வெல்பவர்கள் யார்? ப்ரபோ! இரமா! இராம பத்ரா! ஹரி! ஜய ஜய! என்று கூறிக்கொண்டே உன்னைத் தனது முட்டிகளால் குத்தினானாமே! இப்படியாகவே உனக்கு அவன் அர்ச்சனை செய்தான் (அவனை பக்த சூடாமணி என்று பட்டத்ரி கூறுவதைக் காண்க.)

5. பத்வா அத தேந தத்தாம் நவ ரமணீம்
வர மணீம் ச பரிக்ருஹணந்
அநுக்ருஹ்ணந் அமும் ஆகா: ஸபதி ச
ஸத்ராஜிதே மணிம் ப்ராதா:

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அதன் பின்னர் உன்னை யார்? என்று ஜாம்பவான் உணர்ந்தான். தன்னுடைய பெண்ணான ஜாம்பவதியையும். ஸ்யமந்தகமணியையும் உன்னிடம் கொடுத்தான். நீ உடனே அவனுக்கு ஆசி வழங்கினாய். அதன் பின்னர் அந்த மணியை ஸத்ராஜித்திடம் கொடுத்தாய்.

6.ததநு ஸ கலு வ்ரீடா லோல: விலோல விலாசநாம்
துஹிதரம் அஹோ தீமாந் பாமாம் கிரா ஏவ பர அர்ப்பிதாம்
அதித மணிநா துப்யம் லப்யம் ஸமேத்ய பவாந் அபி
ப்ரமுதித மநா: தஸ்ய ஏவ அதாந் மணிம் கஹந ஆசய:

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இதனால் ஸத்ராஜித் மிகுந்த நாணம் கொண்டு அவமானப்பட்டு நின்றான். வேறு ஒருவருக்குத்தான் மணம் செய்து கொடுப்பேன் என்று எண்ணியிருந்த தனது மகள் சத்யபாமாவை ஸயமந்தக மணியுடன் சேர்த்து உனக்குக் கொடுத்தான். நீ அந்த இரத்தினத்துடன் வந்த பொன் போன்ற சத்யபாமாவை மட்டும் ஏற்றுக்கொண்டு, இரத்தினத்தை அவனிடம் திருப்பிக் கொடுத்தாய் அல்லவா?

7. வ்ரீடா ஆகுலாம் ரமயதி த்வயி ஸத்யபாமாம்
கௌந்தேய தாஹ கதயா அதகுரூந் ப்ரயாதே
ஹீ காந்திநேய க்ருத வாம கிரா நிபாத்ய
ஸத்ராஜிதம் சததநு: மணிம் ஆஜஹார

பொருள்: குருவாயூரப்பா! நீ நாணம் மிகுந்த ஸத்யபாமாவை மேலும் இன்புற்றிருக்கச் செய்து வந்தாய். அப்படிப்பட்ட ஒரு நாளில் உனது அத்தையின் (குந்தி) மகன்கள் (பாண்டவர்கள்) தீயில் வெந்து மாண்டனர் என்று செய்தி வந்தது. உடனே நீ ஹஸ்தினாபுரத்திற்கு விரைந்தாய். அப்போது அக்ரூரர், க்ருதவர்மன் முதலானோர் கூறியதைக் கேட்டு சததந்வா (இவன் ஸத்யபாமாவை மணக்கத் திட்டமிட்டவன்) என்ற யாதவன் ஸத்ராஜித்தைக் கொன்று விட்டு அந்தச் ஸ்யமந்தக மணியை அபகரித்துச் சென்றானாமே!

8 சோகாத் குரூந் உபகதாம் அவலோக்ய காந்தாம்
ஹத்வா த்ருதம் சததநும் ஸமஹர்ஷய: த்வம்
ரத்நே ஸசங்க இவ மைதில கேஹம் ஏத்ய
ராம: கதாம் ஸமசிசிக்ஷத தார்த்தராஷ்ட்ரம்

பொருள்: குருவாயூரப்பா! தனது தந்தை இறந்தவுடன் மிகவும் மனவருத்தப்பட்டு உன்னைத் தேடி உனது மனைவி ஸத்யபாமா குரு நாட்டிற்கு வந்தாளாமே! நீ விரைந்து சென்று சததந்வாவைக் கொன்று அவளை மகிழ வைத்தாய். ஸ்யமந்தக மணி யாரிடம் உள்ளது என்ற சந்தேகம் மிகவும் கொண்ட பலராமன், மிதிலை நகரத்திற்குச் சென்று அங்கு துரியோதனனுக்குக் கதாயுதப் பயிற்சி அளித்தான் அல்லவா?

9. அக்ரூர ஏஷ பகவந் பவத் இச்சயா ஏவ
ஸத்ராஜித: குசரிதஸ்ய யுயோஜ ஹிம்ஸாம்
அக்ரூரத: மணீம் அநாஹ்ருதவாந் புந: த்வம்
தஸ்ய ஏவ பூதிம் உபதாதும் அதி ப்ருவந்தி

பொருள்: பகவானே! குருவாயூரப்பா! அக்ரூரர் உனது எண்ணத்தின் விளைவாகவே துர்நடத்தை உள்ள ஸத்ராஜித்தை அழிக்க இப்படி செய்தார். அவருக்கு செல்வத்தை அளிக்க வேண்டும் என்ற நீ நினைத்த காரணத்தினால்தான் அவரிடம் இருந்த ஸ்யமந்தக மணியை நீ வாங்கிக் கொள்ளவில்லை - இப்படியாக அனைவரும் கூறுகிறார்கள்.

10. பக்த: த்வயி ஸ்திரதர: ஸ ஹி காந்திநேய:
தஸ்ய ஏவ காபத மதி: கதம் ஈச ஜாதா
விஜ்ஞாநவாந் ப்ரசமவாந் அஹம் இதி உதீர்ணம்
கர்வம் த்ருவம் சமயிதும் பவதா க்ருதா ஏவ

பொருள்: குருவாயூரப்பா! ஈசனே! அந்த அக்ரூரர் உன் மீது மிகவும் ஆழ்ந்த பக்தியையும் பணிவையும் உடையவர் அல்லவோ? அவருடைய மனதில் ஸத்ராஜித்தைக் கொல்லும் தீய எண்ணம் எப்படி உண்டானது? அவருக்கு மனதில் நான் அனைத்தும் அறிந்தவன்: அமைதியானவன் என்ற கர்வம் இருந்தது. அதனை அடக்கவே நீ இப்படி செய்திருக்க வேண்டும் என்பது உறுதி.

11. யாதம் பயேநே க்ருதவர்ம யுதம் புந: தம்
ஆஹும் தத் விநிஹிதம் ச மணிம் ப்ரகாச்ய
தத்ர ஏவ ஸுவ்ரத தரே விநிதாய துஷ்யந்
பாமா குச அந்தரசய: பவந ஈச பாயா:

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! க்ருதவர்மனுடன் பயந்து ஓடிய அக்ரூரரை நீ அழைத்தாய். அவரிடம் சததந்வா ஸ்யமந்தக மணியைக் கொடுத்து வைத்திருந்தான் என்று அனைவரிடமும் கூறினாய். சிறந்த விரதங்கள் உடையவரான அக்ரூரரிடம் அந்த மணியை அளித்தாய். பின்னர் ஸத்யபாமாவுடன் இன்பமாக இருந்தாய் அல்லவா? இப்படிப்பட்ட நீ என்னைக் காப்பாயாக!

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar