Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » ஞான, கர்ம, பக்தி யோகம்
ஞான, கர்ம, பக்தி யோகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2015
05:08

1. த்வம் ஹி ப்ரஹ்ம ஏவ ஸாக்ஷாத் பரம் உரு
மஹிமந் அக்ஷராணாம் அகார:
தார: மந்த்ரேஷு ராஜ்ஞாம் மநு: அஸி
முநிஷு த்வம் ப்ருகு: நாரத: அபி
ப்ரஹ்லாத: தாநவாநாம் பசுஷு ச ஸுரபி:
பக்ஷிணாம் வைநதேய:
நாகாநாம் அஸி அநந்த: ஸுர ஸரித் அபி ச
ஸ்ரோதஸாம் விச்வமூர்த்தே

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! விச்வ மூர்த்தியே! நீயே பரப்ரஹ்மம்! எழுத்துக்களில் நீ அகரம் என்னும் முதல் எழுத்து; மந்திரங்களுள் நீ ஓம்காரம் அரசர்களில் நீ மனு: முனிவர்ளில் நீ ப்ருகு மற்றும் நாரதன்: அசுரர்களில் நீ ப்ரஹ்லாதன்; பசுக்களில் நீ காமதேனு; பறவைகளில் நீ கருடன்; பாம்புகளில் நீ ஆதிசேஷன்; நதிகளில் நீ கங்கை - இப்படியாக அல்லவா உள்ளாய்.

2. ப்ரஹ்மண்யாநாம் பலி: த்வம் க்ரதுஷுச
ஜப யஜ்ஞ: அஸி வீரேஷு பார்த்த:
பக்தாநாம் உத்தவ: த்வம் பலம் அஸி
பலிநாம் தாம தேஜஸ்விநாம் த்வம்
ந அஸ்தி அந்த: த்வத் விபூதே: விகஸத்
அதிசயம் வஸ்து ஸர்வம் த்வம் ஏவ
த்வம் ஜீவ: த்வம் ப்ரதாநம் யத் இஹ பவத்
ருதே தத் ந கிஞ்சித் ப்ரபஞ்சே

பொருள்: குருவாயூரப்பா! அந்தணர்களை வணங்குபவர்களில் நீ மகாபலி; யாகங்களில் நீ ஜபவேள்வி; வீரர்களில் நீ அர்ஜுனன்; பக்தர்களில் நீ உத்தவர் என்ற உள்ளாய். நீயே பலம் உடையவர்களுக்கு அவர்கள் பலமாகவும் தேஜஸ் உடையவர்களுக்கு அவர்கள் தேஜஸாக உள்ளாய். இப்படியான உனது பெருமைக்கு ஓர் எல்லை என்பதே கிடையாது. இந்த உலகில் விலை மதிப்புள்ள சிறந்த பொருள்கள் அனைத்தும் நீயே ஆவாய். ஜீவனும் நீயே: ப்ரக்ருதியான காரணமும் நீயே. இந்த உலகில் நீ இல்லாத பொருள் என்று எதுவும் கிடையாது.

3. தர்மம் வர்ண ஆச்ரமாணாம் ச்ருதி பத
விஹிதம் த்வத் பரத்வேந பக்த்யா
குர்வந்த: அந்த: விராகே விகஸதி சநகை:
ஸந்த்யஜந்த: லபந்தே
ஸத்தா ஸ்பூர்த்தி ப்ரியத்வ ஆத்மகம் அகில
பதார்த்தேஷு பிந்நேஷு அபிந்நம்
நிர்மூலம் விச்வமூலம் பரமம் அஹம் இதி த்வத்
விபோதம் விசுத்தம்

பொருள்: குருவாயூரப்பா! நான்கு வகையான வர்ணாச்ரமங்களுக்கு உரிய நெறிகளை வேதங்கள் கூறுகின்றன. அவற்றை உனது பக்தர்கள் உன்னிடம் ஆழ்ந்த பக்தியுடன் உனக்கே அர்ப்பணம் செய்கின்றனர். இதனால் அவர்களுக்கு பற்றற்ற நிலை ஏற்படும்போது அந்தக் கர்மங்களை படிப்படியாகத் துறந்து பரம் பொருளான உன்னை நெருங்குகின்றனர். அப்படிப்பட்ட பரம்பொருளான நீ ஸச்சிதானந்த ரூபமாக உள்ளாய். பலவாகத் தோன்றும் பொருள்களில் நீ பலவாக இருப்பதில்லை (ஒன்றாகவே உள்ளாய்). உனக்கு என்று எந்த ஒரு காரணமும் (ஒரு பொருளை உண்டாக்கும் பொருளே காரணம் எனப்படும்) இல்லை. நீயே அனைத்துப் பொருள்களுக்கும் காரணமாக உள்ளாய். இப்படியாக உள்ள உனது ஸ்வரூபத்தை நானே பரம்பொருள் என்று அந்த பக்தர்கள் உனது ஸ்வரூபத்தையே அடைகின்றனர்.

4. ஜ்ஞாநம் கர்ம அபி பக்தி: த்ரிதயம் இஹ
பவத் ப்ராபகம் தத்ர தாவந்
நிர்விண்ணாநாம் அசேஷே விஷய இஹ பவேத்
ஜ்ஞாந யோகே அதிகார:
ஸக்தாநாம் கர்மயோக: த்வயி ஹி விநிஹித:
யேது ந அத்யந்த ஸக்தா:
ந அபி அத்யந்தம் விரக்தா: த்வயி ச த்ருத
ரஸா: பக்தி யோக: ஹி அமீஷாம்

பொருள்: குருவாயூரப்பா! இந்த உலகில் உள்ள மனிதர்களுக்கு, ஞானம், கர்மம், பக்தி ஆகிய மூன்றும் உன்னை அடையச் செய்யும் வழிகள் ஆகும். இந்த உலகில் உள்ள சிற்றின்பங்களைத் துறந்து அவற்றில் வெறுப்பு உடையவர்களுக்கு மட்டும் ஞானயோகம் ஏற்புடையது. பற்று நீங்காமல் உள்ளவர்களுக்கு உன்னை அடைய கர்மயோகமே சிறந்தது. சிற்றின்பங்களில் பற்றும், பற்று இல்லாத நிலையும் கொண்டு, உன்னிடம் அன்பு மாத்திரமே உள்ளவர்களுக்கு பக்தியோகமே சிறப்பானது.

5. ஜ்ஞாநம் தத் பக்ததாம் வா லகு ஸுக்ருத
வசாந் மர்த்ய லோகே ல பந்தே
தஸ்மாத் தத்ர ஏவ ஜந்ம ஸ்ப்ருஹயதி
பகவந் நாகக: நாரக: வா
ஆவிஷ்டம் மாம் து தைவாத் பவ ஜலநிதி
போதாயிதே மர்த்தய தேஹே
த்வம் க்ருத்வா கர்ண தாரம் குரு மநு
குண வாதாயித:  தாரயேதா:

பொருள்: குருவாயூரப்பா! பகவானே! மனிதர்கள் தங்கள் முற்பிறவியில் செய்த புண்ணியத்தில் பலனாக ஞானத்தையோ பக்தியையோ மிகவும் எளிதாகப் பெற்று விடுகின்றனர். இதனால்தான் சுவர்க்கம் சென்றவனும், நரகம் புகுந்தவனும் மீண்டும் இந்த உலகில் மனிதனாகப் பிறக்க விரும்புகிறான். சம்ஸாரம் என்னும் இந்த மனித வாழ்க்கையான பெரும் கடலைக் கடக்க உதவும் ஓடமாக இந்த உடல் உள்ளது. அதில் உனது கருணையால் ஓடத்தைச் செலுத்துபவனாக ஒரு குரு அமைகிறார். நீ காற்றாக மாறி ஓடமாகிய என்னைக் கரையில் சேர்த்துவிடு.

6. அவ்யக்தம் மார்க்கயந்த: ச்ருதிபி:
அபி நயை: கேவல ஜ்ஞாந லுப்தா:
க்லிச்யந்தே அதீவ ஸித்திம் பஹுதர
ஜநுஷாம் அந்த ஏவ ஆப்நுவந்தி
தூரஸ்த: கர்மயோக: அபி ச பரம பலே
நநு அயம் பக்தியோக:
து ஆமூலாத் ஏவ ஹ்ருத்ய: த்வரிதம்
அயி பகவத் ப்ராபக: வர்த்ததாம் மே

பொருள்: குருவாயூரப்பா! ஞானத்தை மட்டுமே பெற விரும்புகின்ற மனிதர்கள் உபநிஷத்துக்களிலும், சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ள, புலன்களுக்கு அறிய இயலாத ப்ரஹ்மத்தை ஆராய்ந்து கஷ்டப்படுகின்றனர். அவர்கள் பல பிறவிகள் எடுத்து இறுதியாகவே மோட்சம் பெறுகின்றனர். கர்மயோகம் கூட மோட்சத்திற்கு வெகு தூரமாகவே உள்ளது. ஆனால் பக்தியோகம் மட்டுமே தொடக்கத்தில் இருந்தே மனிதற்கு இன்பமாகவும், உன்னை எளிதில் அடையச் செய்வதாகவும் உள்ளது. அத்தகைய பக்தி எனக்கு வளரவேண்டும்.

7. ஜ்ஞாநாய ஏவ அதியத்நம் முநி: அபவததே
ப்ரஹ்ம தத்வம் து ச்ருண்வந்
காடம் த்வத் தாப பக்திம் சரணம் அயதி ய:
தஸ்ய முக்தி: கர அக்ரே
த்வத் த்யாநே அபி இஹ துல்யா புந:
அஸுகரதா சித்த சாஞ்சல்யஹேதோ:
அப்யாஸாத் ஆசு சச்யம் தத் அபி வசயிதும்
த்வத் க்ருபா சாருதாப்யாம்

பொருள்: குருவாயூரப்பா! ஞானம் அடைவதை மட்டுமே செய்யும் முயற்சிகளை வ்யாஸர் பலமாகக் கண்டிக்கிறார். யார் ஒருவன் ப்ரஹ்மத்தினைப் பற்றிக் கேட்டு அறிந்தவனாக, உனது திருவடிகளில் உறுதியான பக்தியுடன் சரணம் என்று புகுந்தவனாக உள்ளானோ, அவனுக்கு மோட்சம் என்பது கைகளில் எட்டும் தூரத்தில் உள்ளது. பக்தியோகத்திலும் மனம் எளிதில் கட்டுப் பாட்டில் வராமல் அலைவதால், இதுவும் ஞானயோகம் போன்று சற்று கடினமானது. இருந்தாலும் பயிற்சியின் மூலமாகவும், உனது கருணையாலும், உனது திருமேனியின் அழகாலும் மனதை அடக்க இயலும்.

8. நிர்விண்ண கர்ம மார்க்கே கலு விஷமதமே
த்வத் கதா ஆதௌ ச காடம்
ஜாத ச்ரத்த: அபி காமாந் அயி புவந
பதே ந ஏவ சக்நோமி ஹாதும்
தத் பூய: நிச்சயேந த்வயி நிஹித மநா:
தோஷ புத்யா பஜந்தாந்
புஷ்ணீயாம் பக்திம் ஏவ த்வயி ஹ்ருதய
கதே மங்ஷு நங்க்ஷ்யந்தி ஸங்கா:

பொருள்: குருவாயூரப்பா! உலகின் நாயகனே! மிகவும் கடுமையான கர்மங்கள் உடைய வழியை நான் வெறுத்துள்ளேன். உனது சரிதங்கள் மீது உறுதியான பக்தியைக் கொண்டுள்ளேன். இருப்பினும் ஆசைகளை அடியோடு தொலைப்பதற்கு உரிய ஆற்றல் என்னிடம் இல்லை. அதனால் மீண்டும் மீண்டும் உன்னிடம் எனது மனதை நிலைநிறுத்தி, அந்த ஆசைகளை குற்றம் எதுவும் இல்லாமல் அனுபவித்து, பக்தியை மேலும் வளர்ப்பேன். இதன் மூலம் நீ எனது இதயத்தில் வந்த பின்னர், அந்த ஆசைகளுக்கும், பற்றுகளுக்கும் இடம் இல்லாமல் நாசமாகப் போகின்றன அல்லவா?

9. க: சித் க்லேச ஆர்ஜித அர்த்த க்ஷய
விமல மதி: நுத்யமாந: ஜந ஓகை:
ப்ராக் ஏவம் ப்ராஹ விப்ர: ந கலு மம ஜந:
கால கர்ம க்ரஹா வா
சேத: மே துக்க ஹேது: தத் இஹ குண
கணம் பாவயத் ஸர்வ காரீ இதி
உக்த்வா சாந்த: கத: த்வாம் மம ச குரு
விபோ தாத்ருசீம் சித்த சாந்திம்

பொருள்: குருவாயூரப்பா! முன்பு ஒரு காலத்தில் ஓர் அந்தணன் பெரிதும் கடினப்பட்டு செல்வங்களைச் சேமித்தான். ஆனால் அவை அழிந்தன. இதனால் அவனுக்கு பற்றற்ற தன்மையும் மனமும் உண்டானது. மக்கள் அவனை கபட சன்யாஸி என்று துன்பம் செய்தனர். ஆயினும் அவன், எனது இந்தத் துன்பத்திற்குக் காரணம் இந்த மக்களோ, நேரமோ, எனது கர்மமோ, கிரக நிலையோ அல்ல. எனது மனமே காரணம் ஆகும். ஆத்மாவிடம் குணங்களை புகுத்தி இந்த மனமே அனைத்தையும் செய்கிறது என்றான். அவன் இப்படியாக அமைதியடைந்து உன்னை அடைந்தான் எனக்கும் அவன் அடைந்த மன அமைதியை அளிப்பாயாக!

10. ஜல: ப்ராக் உர்வசீம் ப்ரதி அதிவிவச மநா:
ஸேவமாந: சிரம் தாம்
காடம் நிர்வித்ய பூய: யுவதி ஸுகம் இதம்
க்ஷுத்ரம் ஏவ இதி காயந்
த்வத் பக்திம் ப்ராப்ய பூர்ண: ஸுகதரம்
அசரத் தத்வத் உத்தூய ஸங்கம்
பக்த உத்தம்ஸம் க்ரியா: மாம் புவந புர
பதே ஹந்தமே ருந்தி ரோகாந்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! முன்பு ஒரு காலகட்டத்தில் ஜலன் என்ற புரூரவஸ் என்னும் மன்னன் வாழ்ந்தான். அவன் ஊர்வசியிடம் தனது மனதைப் பறிகொடுத்தான். அவளுடன் பல காலம் இன்பமாக வாழ்ந்து வந்தான். இறுதியில் பெண்கள் மூலம் கிட்டும் சுகம் அற்பமானது என்று தெளிவுற்றான். அதன் பின்னர் உன்னிடம் ஆழ்ந்த பக்தி கொண்டான். தனது விருப்பம் நிறைவேறியதால் இன்பம் கொண்டு ஆனந்தமாக வாழ்ந்தான். இப்படியாக எனக்கும் பற்றுகளை விலக்கி, பக்தர்களில் சிறந்தவனாக என்னை மாற்றி, எனது பிணிகளைத் தடுத்து காக்க வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar