Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » வேத ஸ்துதி
வேத ஸ்துதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2015
06:08

1. விஷ்ணோ: வீர்யாணி க: வா
கதயது தரணே: க: ச ரேணூந் மிமீதே
யஸ்ய ஏவ அங்க்ரி த்ரயேண த்ரி ஜகத்
அபிமதம் மோததே பூர்ண ஸம்பத்
ய: அஸௌ விச்வாநி தத்தே ப்ரியம்
இஹ பரமம் தாம தஸ்ய அபியாயாம்
த்வத் பக்தா: யத்ர மாத்யந்தி அம்ருத
ரஸ மரந்தஸ்ய யத்ர ப்ரவாஹ:

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! எந்த ஒரு பகவானின் மூன்று அடிகளால் இந்த மூன்று உலகங்களும் அளக்கப்பட்டதோ, அதனால் இந்த உலகம் செல்வம் பல அடைந்து மகிழ்வுற்றதோ, எந்த பகவான் உலகம் முழுவதையும் தாங்கி நிற்கின்றானோ, அந்த பகவானான மஹாவிஷ்ணுவின் பெருமைகளை யார்தான் பட்டியல் இடமுடியும்? உலகில் உள்ள மண் தூள்களை எண்ண இயலுமா? (இதுவும் அதுபோல்தான்) விஷ்ணுவுக்கு மிகவும் ப்ரியமானதும், அனைத்து பக்தர்களும் இன்பம் அடையும் இடமானதும், மோட்சம் என்ற மலரின் தேன் பெருக்கெடுத்து ஓடும் இடமானதும் ஆகிய வைகுண்டத்தை இந்த உலகிலேயே நான் அடைய வேண்டும்.

2. ஆத்யாய அசேஷ கர்த்ரே ப்ரதி
நிமிஷ நவீநாய பர்த்ரே விபூதே:
பக்த ஆத்மா விஷ்ணவே ய: ப்ரதிசதி
ஹவி ஆதீநி யஜ்ஞ அர்ச்சந ஆதௌ
க்ருஷ்ண ஆத்யம் ஜந்ம ய: வா மஹத
இஹமஹத: வர்ணயேத் ஸ: அயம் ஏவ
ப்ரீத: பூர்ண: யசோபி: த்வரிதம்
அபிஸரேத் ப்ராப்யம் அந்தே பதம் தே

பொருள்: குருவாயூரப்பா! எல்லாவற்றிக்கும் முதன்மையான ஆதியாக உள்ளவனும், அனைத்தையும் படைப்பவனும், தனது பக்தர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் வேறு வேறு விதமாக புதிதாகத் தோன்று பவனும், மிகுந்த செல்வங்களுக்கு அதிபதியும் ஆகிய மஹாவிஷ்ணுவான உனக்கு - எந்த ஒரு பக்தன் தான் இயற்றும் வேள்வியிலும் பூஜையிலும் அவிர்பாகத்தை பக்தியுடன் அளிக்கின்றானோ, க்ருஷ்ணாவதாரம் போன்ற அவதாரங்களைப் புகழ்ந்து பாடுகின்றானோ, அவன் இந்த உலகில் பெரும் ஆனந்தம் அடைகிறான். அனைவராலும் புகழப்படுகிறான். இப்படியாக வாழ்ந்து இறுதியில் சென்று அடைய வேண்டிய உனது வைகுண்டத்தை அடைகிறான்.

3. ஹே ஸ்தோதார: கவிஇந்த்ரா: தம்
இஹ கலு யதா சேதயத்வே ததா ஏவ
வ்யக்தம் வேதஸ்ய ஸாரம் ப்ரணுவத
ஜநந உபாத்த லீலா கதாபி:
ஜாநந்த: ச அஸ்ய நாமாநி அகில
ஸுக காரணி இதி ஸங்கீர்தயத்வம்
ஹே விஷ்ணோ கீர்த்தந ஆத்யை:
தவ கலு மஹத: தத்வ போதம் பஜேயம்

பொருள்: பகவானைத் துதிக்கும் கவிஞர்களே! வேதங்களால் காட்டப்படும் அந்த மஹாவிஷ்ணுவை நீங்கள் எப்படித் த்யானம் செய்கிறீர்களோ, அப்படியே அவன் உள்ளான். அவனது அவதாரங்கள் மூலம் அவன் செய்த லீலைகளை வர்ணனை செய்து ஸ்தோத்திரம் செய்யுங்கள். ஞானிகளே! அனைவருக்கும் அனைத்து விதமான இன்பத்தையும் அளிக்கும் அவனது திருநாமங்களைப் பாடுங்கள் மஹாவிஷ்ணுவே! இப்படியாக உனது திருநாமங்களை மட்டுமே பாடி உன்னைப் பற்றிய ஞானம் அடைவேனாக.

4. விஷ்ணோ: கர்மாணி ஸம்பச்யத மநஸி
ஸதா யை: ஸ தர்மாந் அபத்நாத்
யாநி இந்த்ரஸ்ய ஏஷ ப்ருத்ய: ப்ரியஸக
இவ ச வ்யாதநோத் க்ஷேம காரீ
ஈக்ஷந்தே யோக ஸித்தா: பரபதம் அநிசம்
யஸ்ய ஸம்யக் ப்ரகாசம்
விப்ர இந்த்ரா: ஜாகரூகா: க்ருத பஹ
நுதய: யத்ச நிர்பாஸயந்தே
 
பொருள்: குருவாயூரப்பா! அந்த மஹாவிஷ்ணு பலவகையான செயல்கள் மூலமாக, செய்ய வேண்டிய கடமைகளை அதனைச் செய்ய வேண்டியவர்களுக்கு வழங்குகிறான். இந்திரனின் பணியாளாகவும், தோழனாகவும் இருந்து உலக நன்மைக்காக பல நற்செயல்கள் செய்தான். யோகம் கைகூடப் பெற்று சித்தி பெற்றவர்கள். அவனது பரமபதத்தை என்றும் பார்க்கின்றனர். அந்தணர்கள் மிகவும் விழிப்புடன் பலவகையாக ஸ்தோத்திரம் செய்து அவனை நன்றாக அனைவருக்கும் விளங்கும்படி செய்கின்றனர். இப்படிப்பட்ட மஹாவிஷ்ணுவின் லீலைகளை என்றும் உங்கள் மனதில் த்யானம் செய்யுங்கள்.

5. நோ ஜாத: ஜாயமாந: அபி ச ஸமதிகத:
த்வத் மஹிம்ந: அவஸாநம்
தேவ ச்ரேயாம்ஸி வித்வாந் ப்ரதிமுஹு:
அபி தே நாம சம்ஸாமி விஷ்ணோ
தம் த்வாம் ஸம்ஸ்தௌமி நாநாவித நுதி
வசநை: அஸ்ய லோக த்ரயஸ்ய அபி
ஊர்த்வம் விப்ரஜாமாநே விரசித வஸதிம்
தத்ர வைகுண்ட லோகே

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! விஷ்ணுவே! நாராயணா! உனது மகிமைகளின் எல்லை என்பதை அறிந்தவன் யாரும் இதுவரை பிறந்ததும் இல்லை. பிறக்கப்போவதும் இல்லை. நன்மைகள் கிடைக்கும் உபாயமான வழியை அறிந்த நான் உனது திருநாமத்தையே மீண்டும் மீண்டும் கூறுகிறேன். உனது வைகுண்டலோகம் மூன்று உலகங்களை விட மேலானது. அங்கு உள்ள உன்னைப் பலவாகத் துதிக்கிறேன்.

6. ஆப: ஸ்ருஷ்டி ஆதி ஜந்யா: ப்ரதமம்
அயி விபோ கர்ப்ப தேசே தது: த்வாம்
யத்ர த்வயி ஏவ ஜீவ: ஜல சயந
ஹரே ஸங்கதா ஐக்யம் ஆபந்
தஸ்ய அஜஸ்ய ப்ரபோ தே விநிஹிதம்
அபவத் பத்மம் ஏகம் ஹி நாபௌ
திக் பத்ரம் யத்கில ஆஹு: கநக
தரணி ப்ருத் கர்ணிகம் லோக ரூபம்

பொருள்: குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே! ஸ்ருஷ்டி காலத்திற்கு முன்பு எங்கும் நீராக இருந்தது. அந்த நீரானது தனது கர்ப்பத்தில் வைத்தது போல் உன்னைத் தாங்கி நின்றது. நீ அதில் பள்ளி கொண்டிருந்தாய். அப்போது அனைத்து ஜீவன்களும் உன்னிடமே ஒடுங்கியிருந்தன. அந்த நேரம் பிறப்பில்லாத உனது தொப்புளின் நடுவில் இருந்து ஒரு தாமரை மலர் தோன்றியது. திசைகளையே இதழ்களாகவும், மேருவை தனது கொட்டையாகவும் கொண்ட அந்த மலரை உலகின் ரூபம் என்று கூறுகின்றனர்.

7. ஹே லோகா விஷ்ணு: ஏதத் புவநம்
அஜநயத் தத் ந ஜாநீத யூயம்
யுஷ்மாகம் ஹி அந்தரஸ்தம் கிம் அபி
தத் அபாம் வித்யதே விஷ்ணுரூபம்
நீஹார ப்ரக்ய மாயா பரிவ்ருத மநஸ:
மோஹிதா: நாமரூபை:
ப்ராண ப்ரீதி ஏக த்ருப்தா: சரத
மகபரா ஹந்த ந இச்சா முகுந்தே

பொருள்: மக்களே! மகாவிஷ்ணுவே இந்த உலகைப் படைத்தவன். அதனை நீங்கள் உணரவில்லை. விவரிக்க இயலாத அவனது ஸ்வரூபம் உங்கள் இதயத்திலேயே ஜீவனை விட மாறுபட்டதாக உள்ளது. அதனையும் நீங்கள் அறியவில்லை. காரணம் உங்கள் எண்ணம் மூடுபனி போல் மூடப்பட்டுள்ளது. இதனால் பெயரிலும், உருவத்திலும் மயங்கியவர்களாக, உயிர் வாழ்வதில் கருத்தை உடையவர்களாக, வயிற்றுப் பிழைப்பிற்காக யாகம் செய்பவர்களாக உள்ளீர்கள். மேலும் முகுந்தனான க்ருஷ்ணனிடம் பக்தியும் இல்லை. என்னே பரிதாபம்!

8. மூர்த்நாம் அக்ஷ்ணாம் பதாநாம் வஹஸி
கலு ஸஹஸ்ராணி ஸம்பூர்ய விச்வம்
தத் ப்ரோத்கம்ய அபி திஷ்டந் பரிமித
விவரே பாஸி சித்த அந்தரே அபி
பூதம் பவ்யம் ச ஸர்வம பரபுருஷ பவாந்
கிஞ்ச தேஹ இந்த்ரிய ஆதிஷு
ஆவிஷ்ட: அபி உத்கத த்வாத் அம்ருத
ஸுக ரஸம் ச அநு புங்க்க்ஷே த்வம் ஏவ

பொருள்: குருவாயூரப்பா! பரமபுருஷா! நீ ஆயிரம் தலைகள், கண்கள், கால்கள் உடையவன். அனைத்து உலகங்களிலும் பரவி உள்ளாய். அதனினும் அப்பாலும் உள்ளாய். இருந்தாலும் மிகவும் சிறிய மனித மனத்திலும் உள்ளாய். முன்பு இருந்தது. இருப்பது, இருக்கப்போவது ஆகிய அனைத்தும் நீயே. உடலிலும் புலன்களிலும் நீயே உள்ளாய். ஆயினும் அவற்றின் மீது பற்று இல்லாமல் மோட்ச சுகத்தை அனுபவித்து வருகிறாய்.

9. யத்து த்ரைலோக்ய ரூபம் ததத் அபி
ச தத: நிர்கத: அநந்த சுத்த
ஜ்ஞாந ஆத்மா வர்த்தஸே த்வம் தவ
கலு மஹிமா ஸ: அபி தாவாந் கிம் அந்யத்
ஸ்தோக: தே பாக ஏவ அகில
புவநதயா த்ருச்யதே த்ரி அம்ச கல்பம்
பூயிஷ்டம் ஸாந்த்ர போத ஆத்மகம்
உபரி தத: பாதி தஸ்மை நமஸ்தே

பொருள்: குருவாயூரப்பா! முடிவு என்பதே இல்லாதவனே! மூன்று உலகங்களிலும் ரூபமாக நீயே உள்ளாய். அதற்கும் அப்பால் நின்று சுத்த ஞான ரூபமாகவும் உள்ளாய். இப்படி நீ உள்ளதற்கு அளவிட்டுக் கூற இயலாத உனது பெருமைகளே காரணம் ஆகும். உனது நான்கில் ஒரு பாகம் மட்டுமே உலகங்களாக உள்ளது. மீதம் உள்ள முக்கால் பகுதி உலகங்களைத் தாண்டி பரமானந்த ரூபமாக உள்ளது. அப்படிப்பட்ட உனக்கு என் வணக்கம்.

10. அவ்யக்தம் தே ஸ்வரூபம்
துரதிகமதமம் தத்து சுத்த ஏக ஸத்வம்
வ்யக்தம் ச அபி ஏதத் ஏவ ஸ்புடம்
அம்ருத ரஸ அம்போதி கல்லோல துல்யம்
ஸர்வ உத்க்ருஷ்டாம் அபீஷ்டாம் தத்
இஹ குண ரஸேந ஏவ சித்தம் ஹரந்தீம்
மூர்த்திம் தே ஸம்ச்ரயே அஹம் பவந
புர பதே பாஹிமாம் க்ருஷ்ண ரோகாத்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது ஸ்வரூபம் அறிந்து கொள்வதற்கு மிகவும் கடினமானது. சுத்தமான ஸத்வ குணம் உடைய உருவம் இந்த்ரியங்களான கண் போன்றவற்றுக்குப் புலனாகிறது. இது பரமானந்தக் கடல் அலைக்கு ஒப்பானது. எனவே இந்தக் க்ருஷ்ண வடிவம் அனைத்திலும் சிறந்தது; அனைவருக்கும் ப்ரியமானது; கல்யாண குணங்களால் அனைவரையும் ஈர்க்கக்கூடியது. இப்படிப்பட்ட உனது விக்ரத்தை நான் வணங்குகிறேன். க்ருஷ்ணா! குருவாயூரப்பா! எனது பிணிகளில் இருந்து காக்க வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar