Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » கேசாதி பாத வர்ணனை
கேசாதி பாத வர்ணனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2015
06:08

1. அக்ரே பச்யாமி தேஜ: நிபிடதர
கலாயா ஆவலீ லோபநீயம்
பீயூஷ ஆம்லாவித: அஹம் ததநு
தத் உதரே திவ்ய கைசோரவேஷம்
தாருண்யா ஆரம்ப ரம்யம் பரம ஸுக
ரஸ ஆஸ்வாத  ரோமாஞ்சித அங்கை:
ஆவிதம் நாரத ஆத்யை: விலஸத்
உபநிஷத் ஸுந்தரீ மண்டலைச்ச

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இதோ என் கண்களின் முன்னால் ஓர் ஒளிப்பிழம்பை நான் பார்த்துக் கொண்டுள்ளேன். அது காயாம்பூ மலர்க்கொத்து போல் அழகான நிறமுடையதாக உள்ளது. அதன் மூலம் நான் அமிர்தத்தில் நனைகிறேனே! அந்த ஒளியின் நடுவில் மனம் கவர்கின்ற சிறிய சிறுவனாகிய ஓர் உயர்ந்த உருவத்தைக் காண்கிறேன். அது மிகவும் அழகாக உள்ளது; இளமையுடன் உள்ளது. நாரதர் போன்ற முனிவர்கள் அதன் இன்பத்தை அனுபவித்த வண்ணம் உள்ளனர். உபநிஷத்துக்கள் அனைத்தும் தேவலோக மங்கைகளாக மாறி அதனைச் சுற்றி நிற்கின்றனர்.

2. நீல ஆபம் குஞ்சித அக்ரம் கநம்
அமலதரம் ஸம்யதம் சாரு பங்க்யா
ரத்ந உத்தம்ஸ அபிராமம் வலயிதும்
உதயத் சந்த்ரகை: பிஞ்ச ஜாலை:
மந்தார ஸ்ரக் நிவீதம் தவ ப்ருது
கபரீ பாரம் ஆலோகயே அஹம்
ஸ்நிக்த சவேத ஊர்த்வ புண்ட்ராம்
அபி ச ஸுலலிதாம் பால பால இந்துவீதீம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்த அழகான குழந்தையின் தலைமுடியானது கறுத்து உள்ளது; சுருள் சுருளான நுனிகளை உடையது; அடர்த்தியாக உள்ளது; அழகாக மடித்து கொண்டையுடன் கட்டப்பட்டது; சிறந்த ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது; பெரிய கண்களை உடைய மயிற் பீலிகள் உள்ளன. மந்தார மாலை அணியப்பட்டுள்ளது. இப்படியாக அதன் தலையழகைக் காண்கிறேன். கீழே இளம்சந்திரன் போன்ற வெண்மையான நெற்றியைக் காண்கிறேன்; அதில் உள்ள நாமம் பளபள என்று உள்ளது. அந்த நாமம் மேல்நோக்கி இடப்பட்டுள்ளது.

3. ஹ்ருத்யம் பூர்ண அநுகம்பா அர்ணவ
ம்ருது லஹரீ சஞ்சல ப்ரூவிலாஸை:
ஆநீல ஸ்நிக்த பக்ஷ்ம ஆவலி
பரிலஸிதம் நேத்ர யுக்மம் விபோ தே
ஸாந்த்ர ச்சாயம் விசால அருண
கமல தல ஆகாரம் ஆமுக்த தாரம்
காருண்யா ஆலோக லீலா சிசிரித
புவநம் க்ஷிப்யதாம் மயி அநாதே

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! கருணை பெருகி நிற்கும் கடலின் அலைகள் போல் வளைந்து அசைகின்ற புருவங்கள் மனதை ஈர்க்கின்றன. கண் இமையின் முடிகள் கறுப்பாகவும், பளபளப்பாகவும் உள்ளன. அவற்றுடன் இணைந்த கண்கள் தாமரை மலர் போன்று அழகாகவும் சிவந்தும் உள்ளன. அந்தக் கண்களின் உள்ளே உள்ள கருவிழிகள் தனது பார்வை மூலமாக இந்த உலகத்தையே இன்பம் அடையச் செய்கின்றன. கருணை நிறைந்த உனது இந்தப் பார்வை அனாதையாக உள்ள என் மீது விழக்கூடாதா?

4. உத்துங்க உல்லாஸி நாஸம் ஹரி மணி
முகுர ப்ரோல்லஸத் கண்ட பாலீ
வ்யாலோலத் கர்ண பாச கஞ்சித மகர
மணி குண்டல த்வந்த்வ தீப்ரம்
உந்மீலத் தந்த பங்க்தி ஸ்புரத்
அருணதர ச்காய பிம்ப அதர அந்த;
ப்ரீதி ப்ரஸ் யந்தி மந்த ஸ்மித
மதுரதரம் வக்த்ரம் உத்பாஸதாம் மே

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது முகத்தில் மூக்கு எடுப்புடன் உள்ளது. பச்சை நிற மணியால் செய்யப்பட்ட கண்ணாடி போல் உன் கன்னங்கள் உள்ளன. காதுகளில் அணிந்துள்ள மகர குண்டலங்கள் அழகாக அசைந்து அசைந்து அந்தக் கன்னத்தில் இடித்து ப்ரகாசிக்கச் செய்கின்றன. தந்தம் போன்ற அழகான பல்வரிசை ஒளிவீசி உள்ளது. உதடுகள் இரண்டும் கோவைப்பழம் போன்று சிவந்து உள்ளன. அந்த உதடுகளில் உள்ள புன்னகை அருளை அள்ளி வீசுகிறது. இப்படியான உனது அழகான முகம் எனக்குக் தெளிவாகப் பதியட்டும்.

5. பாஹு த்வந்த்வேந ரத்ந உஜ்வல
வலய ப்ருதா சோண பாணி ப்ரவாலேந
உபாத்தாம் வேணு நாலீம் ப்ரஸ்ருத
நக முக அங்குலீ ஸங்க சாராம்
க்ருத்வா வக்த்ர அரவிந்தே ஸுமதுர
விகஸத் ராகம் உத்பாவ்ய மாநை:
சப்த ப்ரஹ்ம அம்ருதை: த்வம் சிசிரித
புவநை: ஸிஞ்ச மே கர்ண வீதீம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது கைகளில் அழகிய இரத்தின வளையல்கள் உள்ளன. உள்ளங்கையானது இளம்தளிர் இலை போன்று சிவப்பாக உள்ளது. அந்தக் கைகளில் உள்ள நகங்கள் ஒளிவீசுகின்றன. இத்தனை அழகான விரல்கள் புல்லாங்குழலைப் பிடித்துள்ளதால், அது விரல்களின் சேர்க்கை மூலம் பல நிறங்களுடன் உள்ளது. நீ அந்தப் புல்லாங்குழலை தாமரை இதழ் போன்ற சிவந்த உனது வாயில் வைத்துள்ளாய். அதில் இருந்த இனிமையான ராகத்தை உண்டுபண்ணுகிறாய். அதைக் கேட்ட உலகங்கள் மகிழ்கின்றன. அப்படிப்பட்ட இனிய நாதத்தின் மூலம் எனது காதுகளை நீ குளிரும்படி செய்ய வேண்டும்.

6. உத் ஸர்ப்பத் கௌஸ்துப ஸ்ரீ ததிபி:
அருணிதம் கோமளம் கண்ட தேசம்
வக்ஷ: ஸ்ரீவத்ஸ ரம்யம் தரளதர
ஸமுத்தீப்ர ஹார ப்ரதாநம்
நாநா வர்ண ப்ரஸுந ஆவளி
கிஸலயிநீம் வந்ய மாலாம் விலோலத்
லோலாம்பாம் லம்பமாநாம் உரஸி
தவ ததா பாவயே ரத்ந மாலாம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது கழுத்துப் பகுதி, அங்கு உள்ள கவுஸ்துபம் என்ற மணியின் ஒளியால் சிவந்து அழகாக உள்ளது. மார்பில் உள்ள ஸ்ரீவத்ஸம் என்ற மச்சம் மேலும் அழகு சேர்க்கிறது. அந்த மார்பில் உள்ள முத்து மாலைகள் அழகாக அசைகின்றன. பல நிறங்களை உடைய மலர்களாலும், தளிர் இலைகளாலும், தொகுக்கப்பட்ட வைஜயந்தி என்ற மாலை அழகாக உள்ளது. அதில் உள்ள மலர்களில் வண்டுகள் மொய்க்கின்றன. மேலும் ரத்தினங்களால் ஆன மாலையும் அசைகிறதே! இப்படிப்பட்ட உனது திருமார்பை நான் த்யானம் செய்கிறேன்.

7. அங்கே பஞ்ச அங்கராகை: அதிசய
விகஸத் ஸௌபர ஆக்ருஷ்ட லோகம்
லீந அநேக த்ரிலோகீ விததிம் அபி
க்ருசாம் பிப்ரதம் மத்ய வல்லீம்
சக்ர அச்ம ந்யஸ்த தப்த உஜ்வல கநக
நிபம் பீத சேலம் ததாநம்
ந்யாயாம: தீப்ர ரச்மி ஸ்புட மணி
ரசநா கிங்கிணீ மண்டிதம் த்வாம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது அழகான திருமேனியில் ஐந்து பொருள்கள் கொண்ட குழம்பு பூசப்பட்டுள்ளது. அதில் இருந்து வீசுகின்ற நறுமணத்தின் மூலம் அனைவரையும் ஈர்க்கின்றாய். பல உலகங்கள் உனது வயிற்றில் உடையபோதிலும், உனது இடையானது மிகவும் மெல்லியதாகவே உள்ளது. அந்த அழகிய இடையில், இந்திர நீலக்கற்கள் உடையதும், தங்கத்தையே உருக்கி ஆடையாகச் செய்ததுபோல் உள்ள மஞ்சள் பட்டாடையை அணிந்துள்ளாய். உன்னுடைய அரைஞாண் கயிற்றில் உள்ள கற்கள் ஒளி வீசுகின்றன. அதில் சிறிய மணிகள், சதங்கைகள் கட்டப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட உனது திருமேனியை த்யானம் செய்கிறேன். (ஐந்து வகை=குங்குமம், அகரு, கஸ்தூரி, கோரோகனம், ஹரிசந்தனம்)

8. ஊரு சாரூ தவோரூ கந மஸ்ருண
ருசௌ சித்த சோரௌ ரமாயா:
விச்வ க்ஷோபம் விசங்க்ய த்ருவம்
அநிசம் உபௌ பீத சேல ஆவ்ருத அங்கௌ
ஆநம்ராணாம் புரஸ்தாத் ந்யஸந
த்ருத ஸமஸ்த அர்த்த பாலீ ஸமுத்க
ச்சாயம் ஜாநு த்வயம் ச க்ரம
ப்ருதுல மநோஜ்ஞே ச ஜங்கே நிஷேவே

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது தொடைகள் இரண்டும் பருத்து மிகவும் அழகாக உள்ளன. மஹாலக்ஷ்மியின் மனதையே கொள்ளை கொண்டவை அல்லவா அவை? அவை மக்கள் மனதில் புகுந்து மயக்கிவிடும் என்பதால் எப்போதும் மஞ்சள் ஆடை மூலம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இரு முழங்கால்களும் இரு பாத்திரங்கள் போல் உள்ளன. உன்னை வணங்குபவர்களுக்கு அவர்கள் கேட்பதை அவற்றில் வைத்துள்ளாய் போலும்! கணுக்கால்கள் அகலமாக பருத்து உள்ளன. இவற்றை நான் த்யானம் செய்கிறேன்.

9. மஜ்ஜீரம் மஞ்ஜு நாதை: இவ
பத பஜநம் ச்ரேய: இதி ஆலபந்தம்
பாத அக்ரம் ப்ராந்தி மஜ்ஜத்
ப்ரணத ஜந மந: மந்தர உத்தார தர்மம்
உத்துங்க ஆதாம்ர ராஜத் நகர
ஷிம கர ஜ்யோத்ஸ்நயா ச ஆச்ரிதாநாம்
ஸந்தாப த்வாந்த ஹந்த்ரீம் ததிம்
அநுகலயே மங்களாம் அங்குலீநாம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது கொலுசுகள் இரண்டும், எனது திருவடிகளை அடைவதே பேரானந்தமும், நன்மைகளையும் வழங்கும் என்று கூறுவதை போல் இனிமையாக ஒலிக்கின்றன. அஞ்ஞானத்திலும் மோகத்திலும் ஆழ்ந்துள்ளவர்களின் மனதை, மேருமலை ஆமையால் தூக்கப்பட்டது போல், தூக்கிவிட உனது நுனிக்கால்கள் ஆமைக்கு ஒப்பாக உள்ளது. உனது கால் விரல்களில் உள்ள நகங்கள் சிவந்து அழகாக உள்ளன. அதில் இருந்து வெளியில் வரும் சந்திரனின் ஒளிக்கீற்று போல் குளிர்ந்த ஒளியானது, உன்னை அடைந்தவர்களின் துன்பங்களையும் அறியாமையையும் நீக்குகிறது. இப்படிப்பட்ட கால் விரல்களை நான் த்யானம் செய்கிறேன்.

10. யோகீந்த்ராணாம் த்வத் அங்கேஷு
அதிக ஸுமதுரம் முக்தி பாஜாம் நிவாஸ:
பக்தாநாம் காம வர்ஷ த்யு தரு
நாத தே பாத மூலம் கிஸலயம்
நித்யம் சித்த ஸ்திதம் மே பவந
புர பதே க்ருஷ்ண காருண்ய ஸிந்தோ
ஹ்ருத்வா நிச்சேஷ தாபாந் ப்ரதிசது
பரமானந்த ஸந்தோஹ லக்ஷ்மீம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! கருணைக் கடலே! உன்னுடைய அனைத்து உறுப்புகளிலும் யோகிகளுக்கு மிகவும் ப்ரியமானதும் இனிமையானதும் உனது திருவடிகளே ஆகும். மோட்சம் பெற்றவர்களின் இருப்பிடமும் அதுவே. பக்தர்கள் வேண்டுவதை அவர்களுக்கு அளித்து மகிழும் கற்பக மரத்தின் தளிரானது அந்தப் பாதமே ஆகும். அத்தகைய உயர்ந்த உனது திருவடிகள் என்றும் என் மனதில் நிலையாக இருக்க வேண்டும். அப்படி இருந்துகொண்டு, எனது துன்பங்கள் அனைத்தையும் நீக்கி, எனக்கு பரமானந்தமான மோட்ச செல்வத்தையும் அளிக்க வேண்டும்.

11. அஜ்ஞாத்வதே மஹத்வம் யத்
இஹ நிகதிதம் விச்வநாத க்ஷமேதா:
ஸ்தோத்ரம் ச ஏதத் ஸஹஸ்ரை
உத்தரம் அதிகதரம் த்வத் ப்ரஸாதாய பூயாத்
த்வேதா நாராயணீயம் ச்ருதிஷு
ச ஜநுஷா ஸ்துத்யதா வர்ணதேந
ஸ்பீதம் லீலா அவதாரை: இதம் இஹ
குருதாம் ஆயு: ஆரோக்ய ஸௌக்யம்

பொருள்: க்ருஷ்ணா! க்ருஷ்ணா! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! விச்வநாதனே! உனது பெருமைகளை முழுவதுமாக நான் அறியாதவன். இருப்பினும் இங்கு நான் கூறியவற்றை நீ ஏற்றுக் கொண்டு பொறுக்க வேண்டும். ஆயிரம் ஸ்லோகங்களுக்குச் சற்றுக் கூடுதலாக உள்ள இந்தத் தொகுப்பு உனது அருளைப் பெற வேண்டும். வேதங்களில் உள்ள உனது லீலைகளைப் ப்ரமாணமாக (சாட்சிகள்) கொண்டு இந்த ஸ்தோத்திரம் உள்ளது. இது இரு வகையில் நாராயணீயம் என்று பெயர் கொண்டுள்ளது. நாராயணன் என்ற கவியின் மூலம் இயற்றப்பட்டதாலும், நாராயணனைக் குறித்து உள்ளதாலும் ஆகும். இது இந்த உலகில் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் நீண்ட ஆயுளையும், அப்படி வாழ நல்ல உடல் ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும்.

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! க்ருஷ்ணா!

நிறைவு உரை

ஆமோதம் பூண்டு சொல்லுவின் நாமங்கள்
ஆனந்தம் பூண்டு ப்ரஹ்மத்தில் சேருவான்
மதியுண்டெங்கில் ஒக்கே மதியீது
திருநாமத்தில் மாகாத் ம்யமாம் ஈது
பிழையாகிலும் பிழக்கேடன் ஆகிலும்
திருவுள்ளம் அருளுக பகவானே!

மேலே உள்ள வரிகள் பூந்தானம் எழுதிய ஞானப்பானை என்பதன் நிறைவு வரிகள் ஆகும். இங்கு அவர் - பரமபக்தியுடன் திருநாமங்களைக் கூறுவதன் மூலம் ப்ரஹ்மத்துடன் ஐக்யம் ஆவதைக் கூறுகிறார். அறிவுள்ள மனிதர்களுக்கு அறிவு இது மட்டுமே என்கிறார். மேலும் தான் எழுதிய நூலில் பிழை இல்லை என்றாலும், பிழை இருந்தாலும் க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மன்னித்து ஏற்க வேண்டும் என்கிறார். இதையே நானும் எனது நிறைவு வரிகளாகக் கூறிக் கொள்கிறேன் - பகவானே! அனைத்தையும் பொறுத்தருள வேண்டும்!

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar