Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சதுர்த்தி விழா: சிலைகள் ... சொக்கநாதர் கோவிலில் சங்கடஹர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பசுமையாக்க கரம் கோர்க்கும் இந்து சமய அறநிலையத்துறை!
எழுத்தின் அளவு:
பசுமையாக்க கரம் கோர்க்கும் இந்து சமய அறநிலையத்துறை!

பதிவு செய்த நாள்

03 செப்
2015
11:09

திருப்பூர்: "வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, 500 ஏக்கர் நிலங்களில் மரக்கன்று நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் கனவை நிறைவேற்றும் வகையில், திருப்பூர் மாவட்டத்தில், ஒரு லட்சம் மரக்கன்று நட்டு, பராமரிக்கும் திட்டம், 23ல் துவக்கப்பட்டது. வனத்துறை, ஒரு லட்சம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்குகிறது. வெற்றி அமைப்பு, "தினமலர் நாளிதழின் இம்முயற்சியில், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்துள்ளது. கோவில்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில், கோவில் திருப்பணி, தேர் திருப்பணி, பூஜை, யாகங்களுக்கு பயன்படும் வகையில் பயனுள்ள மரங்களான, இலுப்பை, வேம்பு, மகா கனி, நாவல், பூவரசு ஆகிய மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்ட துவக்க விழா, விஜயாபுரம் பிரிவு அருகே, நல்லூர் விசாலாட்சியம்மன் உடனமர் விஸ்வேஸ்வரர், சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 3.18 ஏக்கர் நிலத்தில் நேற்று துவங்கியது. அறநிலையத்துறை இணை ஆணையர் இளம்பரிதி, உதவி ஆணையர் ஆனந்த், வெற்றி அமைப்பு தலைவர் சிவராம், செயல் அலுவலர்கள் வெற்றி செல்வன், அழகேசன், சங்கர சுந்தரேசன், நாகராஜ், பசவராஜன், சிவராம சூரியன் மற்றும் வனத்துறையினர், பெம் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். நேற்று, 150 மரக்கன்றுகள் நடப்பட்டன. "நவகிரி அப்பேரல்ஸ் நிறுவனத்தினர், குழாய், சொட்டு நீர் பாசன வசதி செய்து, பராமரிப்பதாக உறுதியளித்தனர். இதே கோவிலுக்கு சொந்தமான, 10 ஏக்கர் நிலம், தெக்கலூர் செல்வ விநாயகர் கோவிலுக்கு சொந்தமாக என்.எச்., ரோட்டிலுள்ள, 7 ஏக்கர் நிலம், உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 30 ஏக்கர், அல்லாளபுரம் கோவிலுக்கு சொந்தமான, 100 ஏக்கர், சிவன்மலை கோவிலுக்கு சொந்தமான, 24 ஏக்கர், தாராபுரம் கொங்கநாயக்கன் பாளையத்திலுள்ள, 14 ஏக்கர் நிலங்கள் என, 500 ஏக்கர் நிலங்களில், 25 ஆயிரம் மரக்கன்றுகள் வரை, நட்டு பராமரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இணை ஆணையர் இளம்பரிதி கூறுகையில், ""கோவில்களுக்கு சொந்தமான, காலியான நிலங்கள் கணக்கெடுக்கப்படுகிறது. அங்கு, பயனுள்ள மரக்கன்று நட்டு பராமரிக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.பழநியில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar