வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், காசிவிஸ்வநாதர் சன்னதி உள்ளது. இதைச்சுற்றி விநாயகர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி, துர்க்கைஅம்மன் ஆகிய சன்னதிகள் உள்ளன. சன்னதியில் இடது புறம் உள்ள துர்க்கை அம்மனுக்கு வாரம் தோறும் செவ்வாய்க் கிழமை சிறப்பு பூஜை நடக்கிறது. புரட்டாசி மாதத்தில் மூன்றாவது செவ்வாய்க்கிழமையான நேற்றுமுன்தினம் மாலை, அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்காரபூஜையும் செய்யப்பட்டது.