Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) குடும்ப மகிழ்ச்சி! ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) சொத்து யோகம்!
எழுத்தின் அளவு:
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) சொத்து யோகம்!

பதிவு செய்த நாள்

17 நவ
2015
02:11

திட்டமிட்டு பணிபுரியும் மேஷ ராசி அன்பர்களே!

புதனால் கிடைத்த நற்பலன் மாத பிற்பகுதியில் சற்று குறையலாம். டிச. 1 வரை முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஆடை, அணிகலன் வாங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அதன் பிறகு சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். விட்டுக் கொடுத்து போகவும். குரு, ராகு, செவ்வாயும் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் பொருளாதார வளம் பெருகும். எந்த பிரச்னையையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் உண்டாகும். வீட்டுக்கு தேவையான ஆடம்பர வசதி கிடைக்கும். புதிய சொத்து வாங்க அதிர்ஷ்டம் ஏற்படும்.

தொழில், வியாபாரத்தில் நல்ல வருமானம் காணலாம். அரசு வகையில் சலுகை ஏதும் எதிர்பார்க்க வேண்டாம். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பணியாளர்கள் நல்ல வளர்ச்சியை காண்பர். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் தங்கள் கோரிக்கைகளை டிசம்பர் 1க்குள் கேட்டுப் பெற்று கொள்ளவும். அதன் பிறகு விடாமுயற்சி, உழைப்பு தேவைப்படும்.

கலைஞர்கள் சிரத்தை எடுத்து முன்னேற வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் நவ. 30 க்கு பிறகு மறையும்.

அரசியல்வாதிகள் சிறப்பான பலனையே பெறுவர். உங்கள் வாழ்வில் வசதி பெருகும்.

மாணவர்கள் சிறப்பானநிலை காண்பர். போட்டி, பந்தயத்தில் வெற்றி கிடைக்கும்.

ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.

விவசாயிகள் நல்ல மகசூலைப் பெறுவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரம் திருப்தி தரும்.

பெண்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவர். குடும்ப பிரச்னையில் இருந்து விடுபடுவர். கணவரின் அன்பு கிடைக்கும்.

நல்லநாள்:  நவ.17, 18, 23, 24, 25, 28, 29 டிச.  5, 6, 7, 8, 9, 14, 15, 16

கவன நாள்:  டிசம்பர் 10, 11,  சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 3,9

நிறம்: சிவப்பு, மஞ்சள்

பரிகாரம்: நாக தேவதையை வணங்குங்கள். மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றி லட்சுமியை வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை சுக்கிரனை வழிபடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar