பதிவு செய்த நாள்
17
நவ
2015
02:11
பிறர் கருத்தை மதிக்கும் தனுசு ராசி அன்பர்களே!
சுக்கிரன் நவ. 30ல் இருந்து நன்மை செய்ய தொடங்குவார். பொருளாதார வளம் சீராக இருக்கும். செலவைக் குறைத்து சேமிக்க முயல்வீர்கள். முக்கிய முடிவு எடுப்பதை தள்ளிப் போடுங்கள். வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். குரு பகவான் சிறப்பான இடத்தில் உள்ளதால், தடைபட்ட திருமணம் இனிதே கைகூடும். டிச. 1க்கு பிறகு உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். டிச. 12,13ம் தேதிகளில் பெண்கள் உதவிகரமாக இருப்பர். உஷ்ணம், தோல், தொடர்பான நோய் உண்டாகலாம்.
பயணத்தின் போது கவனம் தேவை.
தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி உண்டாகலாம். நவ. 30 க்கு பிறகு நிலைமை சீராகும். பணவரவுக்கு குறைவிருக்காது.
பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். அதிகாரிகளுடன் அனுசரித்துப் போவது நல்லது. விடா முயற்சி இருந்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். டிச. 1 க்கு பிறகு பணியாளர்கள்திடீர் இடமாற்றத்தை சந்திப்பர்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கிடைக்க வேண்டிய புகழ் தட்டி பறிக்கப்படலாம். ஆனாலும் உங்கள் கவுரவத்திற்கு பங்கம் வராது. மாத பிற்பகுதியில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சீரான பலனைக் காண்பர். அவப்பெயர் , போட்டி முதலியன நவம்பர் 30க்கு பிறகு மாறும்.
மாணவர்கள் கல்வியில் அக்கறை கொள்வது நல்லது. ஆசிரியர்களின் ஆலோனையை பின்பற்றினால் முன்னேற்றம் கிடைக்கும்.
விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்காமல் போகலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். கால்நடை வளர்ப்பில் ஆதாயம் வரும்.
பெண்கள் நவ. 30 க்கு பிறகு குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். கணவரின் கருத்துக்கு மதிப்புஅளிப்பர். தாய் வீட்டினர் ஆதரவுடன் இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். நவ. 19,20ல் சகோதர வகையில் உதவி கிடைக்கும்.
நல்ல நாள்: நவ.19, 20, 26, 27, 28, 29, டிச. 5, 6, 7, 8, 9, 12, 13
கவன நாள்: நவ.30 டிச.1 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,9
நிறம்: மஞ்சள், வெள்ளை
பரிகாரம்: சனியன்று சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். சிவன் வழிபாடு உங்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும்.