Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தாசலம் கோவில்களில் நந்தி ... நித்தீஸ்வரகோவிலில் சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம்! நித்தீஸ்வரகோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் இன்று மஹா தீபம்!
எழுத்தின் அளவு:
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் இன்று மஹா தீபம்!

பதிவு செய்த நாள்

25 நவ
2015
11:11

ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் மலை மீது, கார்த்திகை மஹாதீபம் இன்று ஏற்றப்படுகிறது. இதற்காக, 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரை பொருத்தும் பணி நேற்று நிறைவடைந்தது.

ஓசூரின் மையப்பகுதியில் உள்ள மலை மீது, 1,000 ஆண்டு பழமையான சந்திரசூடேஸ்வரர் மரகதாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுயம்பு வடிவில் சிவபெருமான் அருள் பாலிக்கிறார். ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் போன்ற, மூன்று மாநில மக்கள், இக்கோவிலுக்கு வந்து ஸ்வாமி தரிசனம் செய்து செல்கின்றனர். ஆண்டுதோறும் மார்ச் மாதம் தேரோட்டமும், கார்த்திகை மாதம் மஹாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், இந்த கோவிலில் சிறப்பாக நடப்பது வழக்கம். பத்து ஆண்டுகளாக கோவில் விமான தளத்தில், 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரையில், கார்த்திகை மஹாதீபம் ஏற்றப்பட்டு வந்தது. இந்த ஆண்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஏற்றப்படும் மஹாதீபம் போல், ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலிலும் ஏற்ற வேண்டும் என, கோவில் கமிட்டி சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதற்காக, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஒத்துழைப்புடன், 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரை வாங்கப்பட்டுள்ளது. அதில், இன்று (நவ. 25) மாலை, 6 மணிக்கு கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் மஹா தீபத்திற்கு எண்ணெய், நெய் ஆகியவற்றை எடுத்து சென்று ஊற்றுவதற்கு வசதியாக, விமான தளத்திற்கு செல்ல, இரும்பு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கார்த்திகை மஹா தீபத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை, 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. சந்திரசூடேஸ்வரர் மற்றும் மரகதாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து மாலை, 6 மணிக்கு கோவில் விமான தளத்தில் வைக்கப்பட்டுள்ள கொப்பரையில் மஹாதீபம் ஏற்றப்படுகிறது. இதையடுத்து உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா நடக்கிறது. கார்த்திகை மஹாதீப கொப்பரையை கோவில் விமான தளத்தில் பொறுத்தும் பணி, கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. நேற்று மாலை, 1,000 லிட்டர் கொப்பரை விமான தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இரும்பால் அமைக்கப்பட்ட மேடையில் பொருத்தப்பட்டது. இன்று (நவ. 25) ஏற்றப்படும் மஹாதீபம், தொடர்ந்து, ஒரு வாரத்திற்கு எரியும், என, கோவில் செயல் அலுவலர் ராஜரத்தினம் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar