Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோமில்லே! (55/100) சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ... துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) அசத்தப் போகும் ராகு வந்தாச்சு ராஜயோகம்! (75/100) துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (27.7.2017 முதல் 13.2.2019 வரை)
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ராகுவால் சுமை இருக்கு! கேதுவால் சுகம் இருக்கு!(70/100)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2015
12:49

பெருந்தன்மையுடன் செயலாற்றும் கன்னி ராசி அன்பர்களே!

ராகு-கேதுவால் இதுவரை எந்த பலனும் கிடைக்காமல் இருந்து வந்தீர்கள். இப்போது இந்த பெயர்ச்சி மூலம் சிறப்பான நன்மை உங்களுக்கு காத்திருக்கிறது. அதுவும் தற்போது கேது நன்மை தரும் இடத்திற்கு வருகிறார். அவர் இதுவரை 7-ம் இடமான மீனத்தில் இருந்து மனைவி வகையில் பிரச்னை, உடல் உபாதை ஏற்படுத்தி வந்தார். இப்போது 6-ம் இடமான கும்பத்திற்கு வருவதன் மூலம் அந்த பின்தங்கிய நிலை அடியோடு மறையும். பொன், பொருள் தாராளமாக சேரும். புதிய முயற்சியில் வெற்றி உண்டாகும்.  கேது நன்மை தரும் காலத்தில் ராகுவால் நற்பலன் தர இயலாது. அதனால் சுமையும், சுகமும் கலந்ததாக வாழ்வு அமையும். ராகு இதுவரை உங்கள் ராசியில் இருந்து உறவினர் வகையில் பிரச்னையை உருவாக்கி இருக்கலாம். இப்போது அவர் இடம் மாறி 12-ம் இடமான சிம்மத்திற்கு செல்கிறார். இங்கு அவர் பொருள் விரயம், துõரதேச பயணத்தையும் கொடுப்பார்.

2016 ஜனவரி முதல்  டிசம்பர் வரை: குரு பகவான் உங்கள் ராசியில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. ஆனாலும் 7-2-2016 முதல் 20-6-2016 வரை வக்கிரம் அடைகிறார். வக்கிரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் குருபகவான் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலன் தர மாட்டார் மாறாக நன்மையே தருவார். அதோடு குருவின் அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளன. சனி பகவான் இப்போது 3-ம் இடத்தில் இருக்கிறார். இதுவும் சிறப்பான நிலை. பொருளாதார வளத்தை மேம்படுத்துவார்.

தொழிலில் சிறந்தோங்க செய்வார். பணப் புழக்கம் சீராக இருக்கும். சமுகத்தில் மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டுத் தேவை அனைத்தும் தாராள பொருள் செலவில் நிறைவேறும். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். எனவே சற்று ஒதுங்கி இருக்கவும். குரு பகவான் வக்கிர காலத்தில் தீவிர முயற்சி எடுத்தால், புதிய வீடு கட்ட வாய்ப்புண்டாகும். சிலர் வசதியான வீட்டுக்கு குடிபுகவும் யோகமுண்டு.

பணியாளர்கள் கடந்த காலத்தை விட முன்னேற்றம் காண்பர். பணிச்சுமை இருந்தாலும் அதற்கான நற்பலன் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புண்டு. வழக்கமான சம்பள உயர்வு, சலுகை கிடைப்பதில் தடை ஏற்படாது.

வியாபாரத்தில் புதிய தொழில் ஓரளவே அனுகூலத்தைக் கொடுக்கும். சிலர் தொழில் நிமித்தமாக இருப்பிடத்தை வேறு இடத்துக்கு மாற்ற நேரிடலாம். எதிரி மீது எப்போதும் கவனம் வைப்பது நல்லது.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். புகழ்,பாராட்டு கிடைக்க தாமதம் உண்டாகும். பெண்களால் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல தேர்ச்சி உண்டாகும்.

விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கப் பெறுவர். அதிகமான பண முதலீடு தேவைப்படும்
பயிர்களைத் தவிர்ப்பது நல்லது.

பெண்கள் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போவது நன்மையளிக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உடல் நலம் சீராக இருக்கும்.

2017 ஜனவரி முதல்  ஜூலை வரை:  குருபகவான் 2-ம் இடமான துலாமிற்கு வருவதால் நன்மை உண்டாகும். குருவின் பலத்தால் மந்த நிலை மாறும். புதிய முயற்சியைச் சிறப்பாக செய்து முடிக்கலாம். பண வரவு அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். சமுக மதிப்பு சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் விருந்து விழா என்று சென்று வருவீர்கள். நீண்ட காலமாக தடைபட்ட திருமணம் கை கூடும். உறவினர் வகையில் அனுகூலம் பிறக்கும். புதிய வீடு கட்ட வாய்ப்புண்டு.

பணியாளர்களுக்கு வேலை பளு குறையும். சிலர் இழந்த பதவியை மீண்டும் கிடைக்கப் பெறுவர்.
இடமாற்ற பீதி மறையும். படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை
கிடைக்கும்.

வியாபாரத்தில் முன்னேற்றத்துக்கான வழி கிடைக்கும். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். அரசு வகையில் நன்மை உண்டாகும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட பிற்போக்கான நிலை இனி இருக்காது. ஆசிரியர்களின் ஆதரவால் முன்னேற்றத்திற்கு வழி காண்பர். விவசாயிகளுக்குப் புதிய நிலம் வாங்கும் வாய்ப்புண்டாகும். பெண்கள் குடும்ப வளர்ச்சியில் பங்கேற்பர்.

பரிகாரம்: நவக்கிரகங்களை தவறாமல் வழிபடுங்கள். ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பாம்பு புற்றுக் கோவிலுக்கு சென்று வாருங்கள். துர்க்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள். ராகு காலத்தில் பைரவருக்கு தயிர் சாதம் படையுங்கள்.

செல்ல வேண்டிய தலம்:  திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள தகட்டூர் பைரவர் கோவில்.

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (27.7.2017 முதல் 13.2.2019 வரை) »
temple
பெரியோரை  மதிப்புடன் நடத்தும் மேஷ ராசி அன்பர்களே!

ராகு சிம்ம ராசியில் இருந்து 4-ம் இடமான ... மேலும்
 
temple
தன்னம்பிக்கையுடன் செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!

ராகு, கேது பெயர்ச்சியால் வாழ்வில் நற்பலன் ... மேலும்
 
temple
அன்புக்கு அடிபணியும் மிதுன ராசி அன்பர்களே!

ராசிக்கு 3-ல் சிம்மத்தில் உள்ள ராகு  2-ம் இடமான ... மேலும்
 
temple
கடமையுணர்வுடன் பணிபுரியும் கடக ராசி அன்பர்களே!

ராசிக்கு 2-ம் இடமான சிம்மத்தில் உள்ள ராகு, உங்கள் ... மேலும்
 
temple
சிந்தனையில் வளம் மிக்க சிம்ம ராசி அன்பர்களே!

தற்போது கேது 6ம் இடமான மகரத்திற்கு வருவதால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.