Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ராகுவால் சுமை இருக்கு! கேதுவால் சுகம் இருக்கு!(70/100) கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) வெற்றி வேண்டுமா! எதிர்நீச்சல் போடுங்க! (60/ 100) விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (27.7.2017 முதல் 13.2.2019 வரை)
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) அசத்தப் போகும் ராகு வந்தாச்சு ராஜயோகம்! (75/100)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2015
12:50

நேர்மை குணம் படைத்த துலாம் ராசி அன்பர்களே!

ராகு-கேது பெயர்ச்சி சிறப்பாக அமையும். ராகு இது வரை உங்கள் ராசிக்கு 12-ம் இடமான கன்னி ராசியில் இருந்ததால் வாழ்வில் பண இழப்பையும், மனக்கவலையையும் நீங்கள் சந்தித்து இருக்கலாம். முயற்சிகளில் தடை ஏற்பட்டு இருக்கும். ராகுவால் ஏற்பட்ட இடர்பாடுகளுக்கு இனி விடை கொடுக்கலாம். இப்போது ராகு உங்கள் ராசிக்கு 11-ம் இடமான சிம்மத்திற்கு செல்வது சிறப்பான அமைப்பாகும். பொருளாதாரத்தில் ராஜயோகத்தை தருவார். பெண்களால் நன்மை உண்டாகும். ராகு நன்மை தரும் போது கேதுவால் நன்மை கிடைக்காது. கேது இதுவரை 6-ம் இடமான மீனத்தில் இருந்து பொன், பொருளை அள்ளித் தந்தார். அவர் இப்போது 5-ம் இடமான கும்பத்திற்கு வருகிறார். தொழிலில் பிரச்னை உருவாகலாம். திருட்டு பயமும் ஏற்படலாம்.

2016 ஜனவரி முதல்  டிசம்பர் வரை: குரு பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் உள்ளார். இது சுமாரான நிலையே. ஆனால் ராகு நன்மை தருவார்.மேலும் குரு 7-2-2016 முதல் 20-6-2016 வக்கிரம் அடைகிறார். இதனால் பொருளாதார வளம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும். மக்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தடை ஏற்படலாம். சில காலம் பொறுத்திருப்பது நல்லது. சிலருக்கு குரு வக்கிர காலத்தில் திருமணம் கைகூடலாம். துõரத்து உறவினர்களின் வகையில் இருந்து எதிர்பாராத விரும்பத்தகாத செய்தி வரலாம்.

பணியாளர்களுக்கு அலைச்சல் ஏற்படும். சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். புதிய வேலை மாற்றம், இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. குரு வக்கிர காலத்தில் நன்மை தொடர்ந்து நடக்கும்.

வியாபாரத்தில் வளர்ச்சி நிலவும். ராகுவால் பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். கேதுவால் எதிரிகளின் இடையூறு அவ்வப்போது தலைதுõக்கலாம். அரசாங்க வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. சிலர் திடீர் சோதனைக்கு ஆளாகலாம். எனவே வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். குருவால் நிர்வாகச் செலவு அதிகரிக்கும். சிலருக்கு வீண் விரயம் ஏற்படவும் வாய்ப்புண்டு. பண விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. 2016 ஜூலை முதல் புதிய முதலீட்டை தவிர்க்கவும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைப்பதில் சற்று தடைகளைச் சந்திப்பர். விடாமுயற்சியின் பேரில் நன்மை கிடைக்கும். திறமைக்கு ஏற்ப புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆனால் வருமானத்திற்கு குறைவிருக்காது.

மாணவர்கள் இந்த கல்வி ஆண்டு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். எளிதாக படித்து அதிக மதிப்பெண் எடுத்து விடலாம் என்று அசட்டையாக இருந்து விட வேண்டாம். இப்போது கஷ்டப்பட்டு படிப்பது அடுத்த கல்வி ஆண்டுக்கு உறுதுணையாக அமையும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது அவசியம்.

விவசாயிகள் தொடர்ந்து சிறப்பான பலனைக் காணலாம். கரும்பு, எள், பயறு வகை மற்றும் பனை பொருட்களில் நல்ல மகசூல் கிடைக்கும். முயற்சியின் பேரில் புதிய சொத்து அமையும்.

பெண்கள் திருப்திகரமாக வாழ்வு நடத்துவர். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டவும்.

2017 ஜனவரி முதல்  ஜூலை வரை:  சனி, குரு, கேது ஆகிய கிரகங்கள் சாதகமாக இல்லை என்றாலும், குருவின் அனைத்துப் பார்வைகளும் சாதகமாக உள்ளன. அதன் மூலம் நன்மை கிடைக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. முயற்சி எடுத்தால் மட்டுமே திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும்.

பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

வியாபாரிகள் அலைச்சலுக்கு ஆளாக நேரிடும். பெண்களை பங்கு தாரராக கொண்ட தொழில் நல்ல வளர்ச்சி அடையும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். எதிரியால் உருவாகும் பிரச்னையை சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள்.

கலைஞர்கள் திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகள் சீரான பலனைக் காண்பர். மாணவர்கள் விடா முயற்சியுடன் படிப்பது நல்லது. விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வழக்கு விவகாரம் சுமாராக இருக்கும்.

பெண்கள் அதிகமாக பாடுபட வேண்டியதிருக்கும். பெண் காவலர்கள் சிலர் உயர் பதவியை அடைய வாய்ப்புண்டு.

பரிகாரம்: குருபகவானுக்கும், கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுங்கள். ஏழை மாணவர்கள் படிக்க உதவி செய்யுங்கள். சனிக்கிழமை சனி பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

செல்ல வேண்டிய தலம்:  கீழப்பெரும்பள்ளம் கேதுபகவான் கோவில்

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (27.7.2017 முதல் 13.2.2019 வரை) »
temple
பெரியோரை  மதிப்புடன் நடத்தும் மேஷ ராசி அன்பர்களே!

ராகு சிம்ம ராசியில் இருந்து 4-ம் இடமான ... மேலும்
 
temple
தன்னம்பிக்கையுடன் செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!

ராகு, கேது பெயர்ச்சியால் வாழ்வில் நற்பலன் ... மேலும்
 
temple
அன்புக்கு அடிபணியும் மிதுன ராசி அன்பர்களே!

ராசிக்கு 3-ல் சிம்மத்தில் உள்ள ராகு  2-ம் இடமான ... மேலும்
 
temple
கடமையுணர்வுடன் பணிபுரியும் கடக ராசி அன்பர்களே!

ராசிக்கு 2-ம் இடமான சிம்மத்தில் உள்ள ராகு, உங்கள் ... மேலும்
 
temple
சிந்தனையில் வளம் மிக்க சிம்ம ராசி அன்பர்களே!

தற்போது கேது 6ம் இடமான மகரத்திற்கு வருவதால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.