Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கங்காபாய் பிருஹத்தபா பிருஹத்தபா
முதல் பக்கம் » பிரபலங்கள்
குரூரம்மா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2015
03:12

குரூரம்மா (கி.பி.1570-1640), கேரள மாநிலத்தில் பாலக்காடு அருகில் உள்ள பரயண்ணூர் என்ற ஊரில் பிறந்தவர்.  அவர் தன்னுடைய பதினாறாவது வயதில் விதவையானார். அவருக்குக் குழந்தைகள் கிடையாது. அவருக்கு உறவினர்கள் என்றும் யாருமில்லை. அவர் ஸ்ரீ கிருஷ்ணன் மீது பெரிதும் பக்தி கொண்டவர், ஸ்ரீ கிருஷ்ணனிடம் அவர் பரிபூரணமாகச் சரணடைந்து வாழ்ந்து வந்தார், அவருக்கு ஸ்ரீ கிருஷ்ணனே எல்லாமாக இருந்தான்.  குரூரம்மா ஆரம்பத்தில், ஸ்ரீ கிருஷ்ணன் நாமத்தைச் சில மணி நேரங்கள் ஜபம் செய்தார். அவ்விதம் நாமஜபம் செய்வதை அவர் சிறிது சிறிதாக அதிகமாக்கி, பிறகு எப்போதுமே ஜபம் செய்யும் உயர்ந்த நிலையை அடைந்தார்.  எப்போதும் இறைவன் நாமத்தை ஜபம் செய்வது, குரூரம்மாவுக்கு மூச்சுவிடுவதுபோல் சர்வ சாதாரணமாக இருந்தது.  அவருக்கு ஸ்ரீ கிருஷ்ண மந்திரத்தை சதா சர்வகாலமும் ஜபம் செய்வதுதான், இயல்பான வாழ்க்கையாகவும் இருந்தது.  அவர் செய்த நாமஜபம், அவரைத் தலைசிறந்த ஒரு ஸ்ரீ கிருஷ்ண பக்தை - இறையனுபூதி பெற்றவர்’ என்ற பெரிய ஒரு நிலைக்கு உயர்த்தியது.

ஸ்ரீ கிருஷ்ணனே அவருடைய ஒரே மகனாக ஆகிவிட்டான். குரூரம்மா எளிய உள்ளம், குழந்தை உள்ளம் கொண்டவர். அவரிடம் கள்ளம் கபடம் அறவே இல்லை.  ஸ்ரீ கிருஷ்ணன்தான் எல்லா மனிதர்களின் வடிவத்திலும் இருந்து, லீலை செய்கிறான்’ என்ற இறையனுபூதி அவருக்கு இருந்தது.
எனவே அவர் ஒவ்வொருவரையும் தன் குழந்தையாகவே கருதினார். ஆதலால் அவருடைய தாயன்புக்கு எல்லோருமே உரியவர்களாக  இருந்தார்கள். அவர் தன்னுடைய தாயன்பால், எல்லோரையும் அரவணைத்துகொண்டார். ஒரு தாயின் நிலையிலிருந்து, அவர் எல்லோரிடமும் அன்பு செலுத்தினார்.  எனவே எல்லோரும் குரூரம்மாவைத் தங்கள் தாயாகவே கருதினார்கள்.  வில்வமங்களம்’ என்ற ஊரைச் சேர்ந்த புகழ் பெற்ற வைணவ ஆச்சாரியார் (கி.பி.1575-1660) ஒருவர் இருந்தார். அவரை மக்கள் வில்வமங்களம் சுவாமி’ என்று அழைத்தார்கள். அவர் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மனம் ஒன்றிப் பூஜை செய்வார். அவர் பூஜை செய்யும்போது, ஸ்ரீ கிருஷ்ணனே அவர் எதிரில் நின்றுகொண்டிருப்பான். இவ்விதம் அவருக்கு ஸ்ரீ கிருஷ்ணனின் தரிசனம், தினந்தோறும் இருந்துகொண்டிருந்தது.  வில்வமங்களம் சுவாமி, தினந்தோறும் ஸ்ரீ கிருஷ்ணனுடன் பேசுகிறார்” என்பது எல்லோருக்கும் தெரியும்.

வில்வமங்களம் சுவாமியிடம் அவ்வப்போது பக்தர்கள் சென்று, எங்களுக்கு அறிவுரைகள் கூறுங்கள்” என்று கேட்பார்கள். அவரும் அறிவுரைகள் கூறுவார். அது அவர்களுக்குப் பயனுடையதாக இருந்தது.  நாளடைவில் வில்வமங்களம் சுவாமி, அந்தப் பகுதியிலிருந்த மக்களுக்கு குருவானார்.
ஒரு சமயம் பிராம்மணன் ஒருவன், கடுமையான வயிற்றுவலியால் மிகவும் துன்பப்பட்டுக்கொண்டிருந்தான். அவன் பல மருத்துவர்களிடம் சென்று, சிகிச்சை எடுத்துக்கொண்டான். என்றாலும் அவன் நோய் குணமாகவில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் அவனுடைய வயிற்றுவலி மேன்மேலும் அதிகமாயிற்று.  அவன் தன்னுடைய வயிற்றுவலி நீங்க வேண்டும் என்று, ஜோதிடர்களைச் சென்று சந்தித்தான்; தாந்திரீகர்களையும் அணுகினான்; வேறு பலரையும் சந்தித்தான்; அவர்கள் சொன்னதையெல்லாம் கடைப்பிடித்தான். என்றாலும் அவன் நோய் என்னமோ குணமாகவில்லை.
இந்த நிலையில் சிலர் பிராம்மணனிடம், நீங்கள் வில்வமங்களம் சுவாமியிடம்  செல்லுங்கள். அவர் ஒரு வேளை உங்கள் நோயைக் குணப்படுத்தக் கூடும்” என்று யோசனை கூறினார்கள். அதன்படி பிராம்மணன், வில்வமங்களம் சுவாமியிடம் சென்றான். அவரிடம் அவன், தன் வயிற்றுவலியைப் பற்றிய எல்லா விவரங்களையும் தெரிவித்தான். அவனிடம் வில்வமங்களம் சுவாமி, இது நான் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு வழக்கமாகப் பூஜை செய்யும் நேரம். ஆதலால் நான் இப்போது ஸ்ரீ கிருஷ்ணனுக்குப் பூஜை செய்யப் போகிறேன். பூஜை சமயத்தில் ஸ்ரீ கிருஷ்ணனிடம் உன்னைப் பற்றிக் கூறுகிறேன். நீ பூஜை முடியும் வரையில் கொஞ்சம் காத்திரு!” என்று கூறினார்.

வில்வமங்களம் சுவாமி, ஸ்ரீ கிருஷ்ணனுக்குப் பூஜை செய்ய ஆரம்பித்தார். அப்போது வழக்கம்போல் ஸ்ரீ கிருஷ்ணன் அவருக்குத் தரிசனம் கொடுத்தான்.  வில்வமங்களம் சுவாமி, ஸ்ரீ கிருஷ்ணனிடம் பிராம்மணனின் வயிற்றுவலியைப் பற்றிக் கூறினார். அதற்கு ஸ்ரீ கிருஷ்ணன், அவன் தன்னுடைய முற்பிறவியில் செய்த பாவம்  காரணமாக, இப்போது வயிற்றுவலியால் துன்பப்படுகிறான். அது அவனுடைய பிராரப்த கர்மம்...” என்று கூறினான். மேலும் இது பற்றி ஸ்ரீ கிருஷ்ணன் வில்வமங்களம் சுவாமியிடம் எதுவும் சொல்லவுமில்லை, கேட்கவுமில்லை.  வில்வமங்களம் சுவாமி பூஜை முடிந்தபிறகு பிராம்மணனிடம், உன்னைப் பற்றி நான் ஸ்ரீ கிருஷ்ணனிடம் கூறினேன். அதற்கு  ஸ்ரீ கிருஷ்ணன், நீ உன்னுடைய முற்பிறவியில் செய்த பாவம் காரணமாக இப்போது வயிற்றுவலியால் துன்பப்படுகிறாய். இது உன் பிராரப்த கர்மம்’ என்று கூறினார். இந்தப் பிராரப்த கர்மத்தை நீ அனுபவிக்கத்தான் வேண்டும். இதிலிருந்து நீ தப்ப வழியில்லை” என்று தெரிவித்தார். வில்வமங்களம் சுவாமி கூறியதைக் கேட்டு, பிராம்மணன் மனமுடைந்து போனான்.  அவன், வில்வமங்களம் சுவாமியால் என் நோய் குணமாகும் என்ற பெரிய ஒரு எதிர்பார்ப்புடன், நான் இங்கு வந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லையே!’ என்று மனம் வருந்தியபடியே, சோர்வுடன் அங்கிருந்து சென்றான்.
மேலும் அவன், இனிமேல் நான் ஏன் இந்த உலகத்தில் வாழ வேண்டும்? என்னால் சிறிதுகூட உணவு சாப்பிட முடியவில்லை. ஏற்கெனவே நான் எவ்வளவோ மருந்து சாப்பிட்டுப் பார்த்துவிட்டேன். ஆனால் என் வயிற்றுவலி என்னவோ சிறிதுகூட குறையவில்லை...’ என்று நினைத்து மனம் கலங்கினான்.

இது நடந்த சில காலத்திற்குப் பிறகு, ஒரு சமயம் பிராம்மணன்  தற்செயலாகச் சிலரிடம் பேசிக்கொண்டிருந்தான். அப்போது அவன் அவர்களிடம், வில்வமங்களம் சுவாமியைத் தான் சந்தித்தது பற்றி வருத்தத்துடன் கூறினான். அங்கு குரூரம்மாவின் ஆசீர்வாதத்தால் பயனடைந்த ஒருவர் இருந்தார்.  அவர் பிராம்மணனிடம், நீங்கள் ஒரு முறை குரூரம்மாவைச் சந்தித்து, உங்கள் வயிற்றுவலியைப் பற்றிச் சொல்லுங்கள்” என்று யோசனை கூறினார். இவர் சொல்லும் இந்த யோசனையையும் செய்து பார்த்துவிடுவோம்!’ என்று பிராம்மணன் நினைத்து, குரூரம்மாவின் வீட்டிற்குச் சென்றான்.   பிராம்மணன், உடல் மெலிந்தும் பலவீனமாகவும் சோர்ந்தும் களைத்தும் காணப்பட்டான்.  அவனை அந்த நிலையில் பார்த்த குரூரம்மா, இவன் இப்போது பசியுடன் இருக்கிறான்’ என்று நினைத்தார். ஆதலால் அவர் அவனுக்குச் சாப்பிடுவதற்கு உணவு கொடுத்தார்.  அவரிடம் பிராம்மணன், அம்மா!  நீண்ட காலமாக நான் கடுமையான வயிற்றுவலியால் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன். அது காரணமாக என்னால் எதுவும் சாப்பிட முடிவதில்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்தான். குரூரம்மாவுக்கும் பிராம்மணனுக்கும் இந்த உரையாடல் நடந்துகொண்டிருந்தபோது, ஸ்ரீ கிருஷ்ணன் குரூரம்மா அருகில்தான் நின்றுகொண்டிருந்தான்.  ஆனால் குரூரம்மா ஸ்ரீ கிருஷ்ணனிடம், ஸ்ரீ கிருஷ்ணா! இந்த பிராம்மணனின் வயிற்றுவலி நீங்குவதற்கு என்ன வழி?” என்று கேட்கவில்லை. அது மட்டுமல்ல, அவர் பிராம்மணனின் வயிற்றுவலி பற்றி எதுவுமே ஸ்ரீ கிருஷ்ணனிடம் சொல்லவில்லை.   குரூரம்மா பிராம்மணனிடம், மகனே! ஓம் ராம் ராமாய நம:’ என்பது தாரக மந்திரமாகும். இந்த ராமமந்திரத்தை நீ ஜபம் செய். அதனால் உன் வயிற்றுவலி முழுவதும் உன்னைவிட்டு நீங்கும். இப்போதே நீ ராம மந்திரத்தை ஜபம் செய்ய ஆரம்பித்துவிடு. இது பற்றி நீ சந்தேகப்படாதே!” என்று கூறினார்.

பிராம்மணன் குரூரம்மாவை வணங்கிவிட்டு, ஓம் ராம் ராமாய நம:’  என்ற தாரக மந்திரத்தை, உடனே அப்போதே ஜபம் செய்ய ஆரம்பித்தான்.
அதிகமாக மந்திரஜபம் செய்து செய்து, ஒருவருக்கு ஜபசித்தி ஏற்படுகிறது. அவ்விதம் ஜபசித்தி பெற்ற சித்தகுரு ஒருவர், தகுதியுடைய தன் சீடருக்கு மந்திரோபதேசம் செய்யும்போது - அது பெரிய அளவில் நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி சீடருக்கு நன்மை செய்கிறது. இது போன்று சாதாரண குரு - சீடர் விஷயத்தில் ஏற்படுவதில்லை.   குரூரம்மாவுக்கு எப்போதும் இறைவன் நாமத்தை ஜபம் செய்வது, மூச்சுவிடுவதுபோல் இயல்பாக இருந்தது. அதனால் அவர், இந்த பிராம்மணனுக்கு ராமமந்திரம் உபதேசம் செய்வதற்கு முழுதகுதியும் உடையவராக இருந்தார்.  இங்கு பிராம்மணனும், குரூரம்மாவிடம் உபதேசம் பெறுவதற்கு உரிய முழுதகுதியும் உடையவனாக இருந்தான்.  குரூரம்மா கூறியபடி பிராம்மணன் ஜபம் செய்ய ஆரம்பித்ததுமே, அவனுடைய வயிற்றுவலி சிறிது குறைந்தது.  குரூரம்மா அவனிடம், நீ பக்கத்தில் இருக்கும் குளத்திற்குச் சென்று, ஸ்ரீ கிருஷ்ணன் நாமம் சொல்லிக்கொண்டே  நீராடு!” என்று கூறினார். குரூரம்மா கூறியபடி, பிராம்மணன் பக்கத்தில் இருந்த குளத்தில் நீராடிவிட்டு வந்தான்.  அப்போது குரூரம்மா அவன் சாப்பிடுவதற்கு உணவு கொடுத்தார். அவர் கொடுத்த உணவை பிராம்மணன் நன்றாகச் சாப்பிட்டான். பல நாட்களுக்குப் பிறகு அன்றுதான் முதல் முறையாக அவனால் நன்றாகச் சாப்பிட முடிந்தது.

அவன் தொடர்ந்து, ஓம் ராம் ராமாய நம:” என்ற மந்திரத்தை, ஜபம் செய்துகொண்டிருந்தான். ஆதலால் சிறிது நேரத்திற்குள், அவனுடைய  வயிற்றுவலி முழுவதும் அவனைவிட்டு நீங்கியது!   பிராம்மணன் மனம் நெகிழ்ந்து, தன் நன்றியை குரூரம்மாவுக்குத் தெரிவித்தான். அவன் குரூரம்மாவிடம் விடைபெற்று புறப்பட்டபோது, அவனுடைய வயிற்றுவலி அவனைவிட்டு முழுவதும் நீங்கியிருந்தது. இவ்விதம் இந்த பிராம்மணன், ஸ்ரீ கிருஷ்ணனின் பெரிய ஒரு பக்தனாக ஆகிவிட்டான்.    அதன்பிறகு பிராம்மணன் தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், சத்சங்கம் - நாமசங்கீர்த்தனம் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டான். அவ்விதம் பிராம்மணன், ஒரு நாள் ஒரு நிகழ்ச்சியில் வில்வமங்களம் சுவாமியைச் சந்தித்தான். அப்போது அவன் வில்வமங்களம் சுவாமியிடம், தான் குரூரம்மாவைச் சந்தித்தது - அவர் கூறியபடி ராமமந்திரம் ஜபம் செய்தது - அதனால் தன் நோய் நீங்கியது - போன்ற விவரங்களைத்  தெரிவித்தான். மறுநாள் வில்வமங்களம் சுவாமி, எப்போதும்போல் பூஜை செய்துகொண்டிருந்தார். அன்றைய தினமும் வழக்கம்போல் அவருக்கு ஸ்ரீ கிருஷ்ணன் தரிசனம் கொடுத்தான்.  அப்போது வில்வமங்களம் சுவாமி ஸ்ரீ கிருஷ்ணனிடம், கிருஷ்ணா! ராமமந்திரம் ஜபம் செய்தால் அவனுடைய வயிற்றுவலி நீங்கும்’ என்று, நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை?” என்று குறை கூறுவதுபோல் கேட்டார்.

அதற்கு ஸ்ரீ கிருஷ்ணன் புன்சிரிப்புடன், நீ பிராம்மணனின் வயிற்றுவலியைப் பற்றி என்னிடம் கூறினாய். நான் உன்னிடம் அந்த பிராம்மணன் தன்னுடைய முற்பிறவியில் செய்த பாவம்  காரணமாக, இப்போது வயிற்றுவலியால் துன்பப்படுகிறான். அது அவனுடைய பிராரப்த கர்மம்...” என்று கூறினேன். உனக்கு இறைவன் நாமத்தை ஜபம் செய்வது, எல்லாவிதமான துன்பங்களையும் போக்கும் என்று தெரியாதா, என்ன? குரூரம்மாவுக்கு, இறைவன் நாமத்தை ஜபம் செய்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கும்’ என்ற நம்பிக்கை பூரணமாக இருக்கிறது. அந்த அளவுக்கு இறைவன் நாமத்தின்மீது உனக்கு நம்பிக்கை இல்லையே! அதனால்தான் நான் உனக்கு அன்றைய தினம், இறைவன் நாமஜபம் பற்றிச் சொல்லவில்லை” என்று கூறினான்.  இவ்விதம் ஸ்ரீ கிருஷ்ணனே குரூரம்மாவின் பக்தியைப் பற்றி கூறியதால், வில்வமங்களம் சுவாமி தான் இருந்த இடத்திலிருந்தே குரூரம்மாவை நினைத்து மானசீகமாக வணங்கினார்.

 
மேலும் பிரபலங்கள் »
temple news

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple news

துகாராம் பிப்ரவரி 03,2017

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்
 
temple news

விராதன் டிசம்பர் 14,2016

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்
 
temple news
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple news

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar