Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல்லில் கோலாகலம்: ... கதிர்காமம் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவ விழா! கதிர்காமம் முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரி மலையில் தை அமாவாசை திருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
சதுரகிரி மலையில் தை அமாவாசை திருவிழா துவக்கம்!

பதிவு செய்த நாள்

06 பிப்
2016
10:02

வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் பிரசித்திபெற்ற தை அமாவாசை திருவிழா, சனிப்பிரதோஷ வழிபாட்டுடன் துவங்குகிறது. இதற்காக இன்று காலை 6 மணிக்கு மலையின் நுளைவாயில் திறந்துவிடப்பட்டு பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். சதுரகிரி மலையில் அருள்புரியும் சுந்தரமகாலிங்கசுவாமி தன்னை வணங்கிய 18 சித்தர்களுக்கும் ஆடி அமாவாசை தினத்தன்றுதான் காட்சி கொடுத்தார். அதன்காரணமாக அது பிரதான திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

அன்று இறைவனை காணாமுடியாத மற்ற சித்தர்கள் மீண்டும் இறைவனை காட்சிகொடுக்க வேண்டி தவமிருந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இறங்கிவந்து இறைவன் மீண்டும் காட்சி கொடுத்தது இந்த தை அமாவாசை தினத்தில்தான்.  அதனால்தான் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு வரமுடியாத பக்தர்களும், தரிசனம் செய்த பக்தர்களும் இந்த தை அமாவாசை திருவிழாவில் மீண்டும் கலந்து கொண்டு வழிபடுகிறார்கள். இதனால் தை அமாவாசை முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு புராணகாலத்து சிறப்புகள் கொண்ட இத்திருவிழா இன்று மாலை 4 மணிக்கு சனிப்பிரதோஷ வழிபாட்டுடன் கோலாகலமாக துவங்குகிறது. சனிப்பிரதோஷத்துடன் இன்று மாத சிவராத்திரி தினமும் சேர்ந்து வருவதால் பிரதோஷ பூஜைகள் முடிந்த பின் மாலை 6.30 மணிமுதல் சிவராத்திரி பூஜைகள் துவங்குகிறது. மறுநாள் பிப்.7 ல், திருவோண விரத வழிபாடும் சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. பிப்.8 ல் காலைமுதல் தை அமாவாசை பூஜைகள் துவங்கி மாலைவரை நடக்கிறது. இதையொட்டி சுந்தரமகாலிங்கசுவாமிக்கு நாகாபரண அலங்காரமும், சந்தனமகாலிங்க சுவாமிக்கு சந்தனக்காப்புடன் ராஜஅலங்காரமும் செய்யப்படவுள்ளது. இது தவிர சுந்தரமூர்த்தி சுவாமி, பலாஅடி கருப்பசாமி, சந்தனமகாதேவிக்கும் தனித்தனியே அமாவாசை பூஜைகள் நடைபெறவுள்ளன. கோயில் நிர்வாக அதிகாரி குருஜோதி, அறநிலையத்துறையினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar