Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) சுபநிகழ்ச்சி நடக்கும் சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) செல்வாக்கு கூடும்
எழுத்தின் அளவு:
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) செல்வாக்கு கூடும்

பதிவு செய்த நாள்

10 பிப்
2016
03:02

கண்ணியம் மிக்க கடக ராசி அன்பர்களே!

மாத பிற்பகுதியில் கூடுதல் பலன் எதிர் நோக்கலாம். புதன் பிப். 25க்கு பிறகும்,சுக்கிரன் மார்ச் 8க்கு பிறகு சாதகமான இடத்துக்கு வருகிறார்கள். மேலும் குருவின் சாதக பலன்கள் நீடிக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். தேவைகள் பூர்த்தியாகும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். மாத பிற்பகுதியில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவர். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிப். 25,26ல் புத்தாடை, நகை வாங்க வாய்ப்பு உண்டு.

தொழில், வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். சில காரணங்களால் விரயமான பணம் பிப். 27க்கு பிறகு திரும்பக் கிடைக்கும். போட்டியாளர்களின் தொல்லை வரலாம். மார்ச் 3,4ல் எதிர்பாராத வருவாய் கிடைக்கும்.

பணியாளர்கள் சுமாரான நிலையில் இருப்பர். வேலைப்பளு இருக்கும். வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். பிப். 25க்கு பிறகு கோரிக்கைகள் நிறைவேறும். பிப். 14,15 மார்ச்12,13ல் எதிர்பாராத பணவரவு உண்டு. நெருப்பு தொடர்பான வேலையில் கவனமாக இருக்க வேண்டும்.

கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடு மறையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணப்புழக்கம் இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு மதிப்பு, மரியாதை இருந்தாலும் புதிய பதவி கிடைப்பது சிரமம்.

மாணவர் புதனால் நல்ல வளர்ச்சி காண்பர். குரு சாதகமான நிலையில் இருப்பதால் ஆசிரியர்கள், ஆன்றோர்கள் ஆலோசனை கிடைக்கும்.

விவசாயிகள் அதிக வருவாய் பெறலாம். கரும்பு, எள், கீரை, காய்கறி வகை நல்ல மகசூல் தரும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரங்களில் தீர்ப்பு சாதகமாக இருக்கும்.

பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகள் வகையில் இருந்து வந்த பிரச்னை மறையும். பிப். 25,26ல் நகை. ஆடம்பரப் பொருள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து உதவி கிடைக்கும்.

நல்ல நாள்: பிப். 14,15,16,17,20,21,25,26 மார்ச் 3,4,5,6,7,12,13.
கவன நாள்: மார்ச் 8,9 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 1,5 நிறம்: மஞ்சள் , பச்சை

பரிகாரம்: சனிக்கிழமை ஆஞ்சநேயரையும், வெள்ளிக்கிழமை முருகனையும் வழிபடுங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவியை செய்யுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar