Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ... துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) பதவி உயர்வு கிடைக்கும் துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) தடைகள் தகரும்
எழுத்தின் அளவு:
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) தடைகள் தகரும்

பதிவு செய்த நாள்

10 பிப்
2016
03:02

கடமை உணர்வு மிக்க கன்னி ராசி அன்பர்களே!

புதன் பிப், 25ல் இருந்தும், செவ்வாய் பிப். 27ல் இருந்தும் நன்மை தரும் இடத்துக்கு வருகிறார்கள். சூரியன், சனி,கேது சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். கிரகங்கள் சாதகமாக இருப்பதால் இம்மாதம் சிறப்பாக இருக்கும்.பக்தி உயர்வு மேம்படும். உங்கள் முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பிப். 25க்கு பிறகு அடியோடு மறையும். காரிய அனுகூலம் கிட்டும். பொருளாதார வசதி சிறப்பாக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். வீட்டுக்கு தேவையான வசதி கிடைக்கும். தம்பதியிடையே கருத்து வேறுபாடு விலகி அன்பு மேம்படும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர் பயணம் ஏற்படலாம். அரசு வகையில் இருந்து வந்த தொல்லைகள், போட்டியாளர்கள் வகையில் இருந்த பிரச்னைகள் மறையும். மார்ச் 8,9ல் எதிர்பாராத வருவாய் கிடைக்கும்.

பணியாளர்களிடம் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கைகள் நிறைவேறும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். வேலை காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தவர்கள் ஒன்று சேருவர். பதவி உயர்வு உண்டு.

கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்தபடி புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புகழ் பாராட்டு வந்து சேரும்.

அரசியல்வாதிகள் புதிய பதவியோடு பணவரவும் பெறுவர்.

விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். நெல், கேழ்வரகு, சோளம் பயிர்கள் சிறப்பான மகசூல் தரும். கால்நடை வகையில் வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் இந்த மாத பிற்பகுதியை பயன்படுத்திக் கொள்ளவும். வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வி நிறுவனத்தில் நற்பெயர் கிடைக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு
பெறலாம்.

பெண்களுக்கு உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். தடைபட்டு வந்த திருமணம் நடைபெறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புத்தாடை, நகை வாங்கலாம்.

நல்ல நாள்: பிப். 13,18,19,20,21,25,26, மார்ச்1,2,8,9,10,11.
கவன நாள்: பிப் 14,15 மார்ச் 12,13 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 3,7,9   நிறம்: சிவப்பு, செந்துõரம்.

பரிகாரம்: ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். விநாயகரை வணங்கி வாருங்கள். இதனால் குடும்பத்தில் பிரச்னைகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar