Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது! மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை ...
முதல் பக்கம் » மதுரை சித்திரை திருவிழா - 2016
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைப் பெருவிழா நிகழ்ச்சிகள்!
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைப் பெருவிழா நிகழ்ச்சிகள்!

பதிவு செய்த நாள்

08 ஏப்
2016
11:04

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது. விழாவானது ஏப்.10ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஏப்.19ல் நடக்கிறது.

சித்திரைப் பெருவிழா  நிகழ்ச்சிகள்:
9.4.2016பங்குனி 27 வாஸ்து சாந்தி (நிலத்தேவர் வழிபாடு)

முதலாம் திருநாள்கற்பகவிருட்சம் சிம்ம வாகன உலா

கொடியேற்றம் காலை 10.3011.30
10.04.2016      பங்குனி28    ஞாயிற்றுக்கிழமை

காலை வாகனம் : வெள்ளி சிம்மாசனம்
காலை எழுந்தருளும் மண்டபம்: கோயிலுக்குள் குலாலர் மண்டகப்படி
இரவு எழுந்தருளும் நேரம் : 7.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகன விபரம் : கற்பகவிருட்சம் சிம்மம்
திருவீதிஉலா முடிவுற்று திருக்கோயிலுக்கு வந்து சேரும் நேரம்: இரவு 10.30 மணியளவில்
விபரம்: பகல் 10.30 நாழிகைக்கு மேல் 11.30 நாழிகைக்குள் (காலை 10.30 மணியில் இருந்து 10.54 மணிக்குள்) மிதுன லக்கனத்தில் கொடியேற்றம்.

இரண்டாம் திருநாள் பூதம் அன்னம்

11.04.2016      பங்குனி29     திங்கட்கிழமை
காலை எழுந்தருளும் நேரம் : 7.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகனம் : தங்கச்சப்பரம்
எழுந்தருளும் மண்டபம் : கோயிலுக்குள் முத்துராமய்யர் மண்டகப்படி
திருவீதிஉலா முடிவுற்று திருக்கோயிலுக்கு வந்து சேரும் நேரம்: காலை 9.30 மணியளவில்
இரவு எழுந்தருளும் நேரம் : 7.00 மணியவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகன விபரம் : பூதம் அன்னம்
திருவீதிஉலா முடிவுற்று திருக்கோயிலுக்கு வந்து சேரும் நேரம்: இரவு 10.30 மணியளவில்

மூன்றாம் திருநாள்கைலாசபர்வதம்காமதேனு

12.04.2016    பங்குனி30    செவ்வாய்க்கிழமை
காலை எழுந்தருளும் நேரம் : 7.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகனம் : தங்கச்சப்பரம்
எழுந்தருளும் மண்டபம் : கோயிலுக்குள் கல்யாண சுந்தரமுதலியார் மண்டகப்படி
திருவீதிஉலா முடிவுற்று திருக்கோயிலுக்கு வந்து சேரும் நேரம்: காலை 9.30 மணியளவில்
இரவு எழுந்தருளும் நேரம் : சுமார் 7.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகன விபரம்: கைலாசபர்வதம்காமதேனு
திருவீதிஉலா முடிவுற்று திருக்கோயிலுக்கு வந்து சேரும் நேரம்: இரவு 10.30 மணியளவில்

நான்காம் திருநாள்தங்கப்பல்லக்கு

13.04.2016     பங்குனி31     புதன்கிழமை
காலை எழுந்தருளும் நேரம் : 9.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : சின்னக்கடைத்தெரு, தெற்குவாசல் வழியாக வில்லாபுரம் செல்லுதல்
வாகனம் : தங்கப்பல்லக்கு
திருவீதிஉலா முடிவுற்று திருக்கோயிலுக்கு வந்து சேரும் நேரம்: அழகப்பபிள்ளை தானப்பபிள்ளை வகையறா வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படி
மாலை எழுந்தருளும் நேரம் : மாலை 6.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : தெற்கு வாசல், சின்னக்கடைத் தெரு வழியாக வந்து சித்திரை வீதிகள் சுற்றி கோயிலுக்குள் வருதல்
வாகன விபரம் : தங்கப்பல்லக்கு திருவீதிஉலா முடிவுற்று திருக்கோயிலுக்கு வந்து சேரும் நேரம்: இரவு 9.30 மணியளவில்

ஐந்தாம் திருநாள்தங்கக்குதிரை

14.04.2016    சித்திரை1    வியாழக்கிழமை
காலை எழுந்தருளும் நேரம் : 9.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : மாசி வீதிகள்
வாகனம் : தங்கச்சப்பரம்
திருவீதிஉலா முடிவுற்று திருக்கோயிலுக்கு வந்து சேரும் நேரம்: வடக்குமாசிவீதி இராமாயணச் சாவடி ஆயிரம் வீட்டு யாதவர்களுக்குச் சொந்தமான ஸ்ரீஇராமசுவாமி, ஸ்ரீநவநீதகிருஷ்ணசுவாமி தேவஸ்தான
மண்டகப்படி, இரவு எழுந்தருளும் நேரம் : 7.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : வடக்கு மாசிவீதி, கீழமாசி வீதி, அம்மன் சந்நிதி வழியாக கோயிலுக்குவருதல்
வாகன விபரம் : தங்கக்குதிரை திருவீதிஉலா முடிவுற்று திருக்கோயிலுக்கு வந்து சேரும் நேரம்: இரவு 9.30 மணியளவில்

விபரம் : தமிழ்ப்புத்தாண்டு (துர்முகி வருடப்பிறப்பு) பஞ்சாங்கம் வாசித்தல் இரவு 9.30 மணிக்கு கோயிலுக்குள் எழுந்தருளி மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் வேடர் பறிலீலை.

ஆறாம் திருநாள்தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபம்

15.04.2016    சித்திரை2    வெள்ளிக்கிழமை
காலை எழுந்தருளும் நேரம் : 7.30 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகனம் : தங்கச்சப்பரம்
எழுந்தருளும் மண்டபம் : கோயிலுக்குள் சிவகங்கைராஜா மண்டகப்படி
திருவீதிஉலா முடிவுற்று திருக்கோயிலுக்கு வந்து சேரும் நேரம்: காலை 10.30 மணியளவில்
இரவு எழுந்தருளும் நேரம் : 7.30 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகன விபரம் : தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபம்
திருவீதிஉலா முடிவுற்று திருக்கோயிலுக்கு வந்து சேரும் நேரம்: இரவு 11.00 மணியளவில்

விபரம் : மாலை 6.00 மணிக்கு யானை மஹால் முன்பு மதுரை திரு கே. முரளிதரன் குடும்பத்தினர் கட்டளை திருக்கண் ஆகிய பின்பு அருள்மிகு திருஞானசம்பந்தப்பெருமான் சைவ சமயத்தை நிலைநாட்டிய வரலாறு (சைவ சமய ஸ்தாபித வரலாற்றுலீலை) தல ஓதுவாரால் சொல்லப்பட்டு பின் வீதிக்கு எழுந்தருளல்.

ஏழாம் திருநாள் நந்திகேசுவரர்யாளி

16.04.2016     சித்திரை3     சனிக்கிழமை
காலை எழுந்தருளும் நேரம் :  8.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
எழுந்தருளும் மண்டபம் : கோயிலுக்குள் மீனாட்சி நாயக்கர் மண்டகப்படிக்கு சுவாமி அம்மன் நண்பகல் 12மணிக்கு எழுந்தருளல்
திருவீதிஉலா முடிவுற்று திருக்கோயிலுக்கு வந்து சேரும் நேரம்: காலை 10.30 மணியளவில்
இரவு எழுந்தருளும் நேரம் : 7.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகன விபரம் : நந்திகேசுவரர்யாளி
திருவீதிஉலா முடிவுற்று திருக்கோயிலுக்கு வந்து சேரும் நேரம்: இரவு 10.30 மணியளவில்

விபரம் : காலை 8.00 மணிக்கு கங்காளநாதர் மட்டும் மாசி வீதி எழுந்தருளல். இரவு சுவாமி அம்மன் நான்கு மாசி வீதிகள் சுற்றி வந்து, அஷ்ட சக்தி மண்டபத்தில் திரு. எம். ராசுபண்டாரம் குமாரர்களால் நடத்தப்படும் புஷ்ப சிங்கார திருக்கண்ணில் இரட்டைசோடசோபசார தீபாராதனை ஆன பின் கோயிலுக்குள் எழுந்தருளல்.

எட்டாம் திருநாள் பட்டாபிஷேகம்

17.04.2016    சித்திரை4    ஞாயிற்றுக்கிழமை
காலை எழுந்தருளும் நேரம் : 10.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : கீழச்சித்திரை வீதி, தெற்கு ஆவணிமூலவீதி, திண்டுக்கல் ரோடு வழியாக மேலமாசிவீதி
வாகனம் : தங்கப்பல்லக்கு
எழுந்தருளும் மண்டபம் : மேலமாசிவீதி திருஞானசம்பந்தர் சுவாமிகள் ஆதீனம் கட்டுச்செட்டி மண்டகப்படியில் தங்கி, பின் பிற்பகல் 3.00 மணிக்குப் புறப்பாடாகி கோயிலுக்குள் வருதல்.
இரவு எழுந்தருளும் நேரம் : 9.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகன விபரம் : வெள்ளி சிம்மாசனம்.
திருவீதிஉலா முடிவுற்று திருக்கோயிலுக்கு வந்து சேரும் நேரம்: நள்ளிரவு 12.30 மணியளவில்

விபரம் : காலை சபாநாயகர் புறப்பாடாகி ஊடல் லீலை நடைபெறும். இரவு 7.35 மணிக்கு மேல் 7.59 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கு அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் பட்டாபிஷேகம். அருள்மிகு மீனாட்சி அம்மனுக்குக் கிரீடம் சாற்றி செங்கோல் கொடுத்தல். திருக்கோயில் தக்கார் திரு. கருமுத்து தி. கண்ணன் அவர்கள் அருள்மிகு மீனாட்சி அம்மனிடமிருந்து செங்கோல் பெற்று, சகல விருதுகளுடன் சுவாமி சந்நிதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து, மீண்டும் அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கரத்தில் செங்கோலைச் சமர்ப்பிக்கும் காட்சியைக் கண்டு அம்மனின் திருவருள் பெற்று உய்ய வேண்டப்படுகிறது.

ஒன்பதாம் திருநாள்  திக்கு விஜயம்

18.04.2016    சித்திரை5    திங்கட்கிழமை
காலை எழுந்தருளும் நேரம் : 7.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசிவீதிகள்
வாகனம் : மரவர்ணச் சப்பரம்
எழுந்தருளும் மண்டபம் : கோயிலுக்குள் சிவகங்கைராஜா மண்டகப்படி
திருவீதிஉலா முடிவுற்று திருக்கோயிலுக்கு வந்து சேரும் நேரம்: காலை 9.30 மணியளவில்
மாலை எழுந்தருளும் நேரம் : 6.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகன விபரம் : இந்திரவிமானம்
திருவீதிஉலா முடிவுற்று திருக்கோயிலுக்கு வந்து சேரும் நேரம்: அதிகாலை 1.00 மணியளவில்

விபரம் : வடக்கு மாசிவீதி, கீழமாசிவீதி சந்திப்பு இடத்தில் உள்ள லாலாஸ்ரீ ரெங்க சத்திரம் திருக்கண் மண்டபத்திற்கு எழுந்தருளி அருள்மிகு மீனாட்சி அம்மன் திக்கு விஜயம்.

பத்தாம் திருநாள் திருக்கல்யாணம்பூப்பல்லக்கு

19.04.2016    சித்திரை6    செவ்வாய்க்கிழமை
காலை எழுந்தருளும் நேரம் : 4.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு சித்திரை வீதிகள்
வாகனம் : வெள்ளி சிம்மாசனம்
எழுந்தருளும் மண்டபம் : கோயிலுக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் நாகப்பச் செட்டியார் கட்டளை மண்டகப்படி
இரவு எழுந்தருளும் நேரம் : 7.30 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகன விபரம் : யானை ஆனந்தராயர் பூப்பல்லக்கு
திருவீதிஉலா முடிவுற்று திருக்கோயிலுக்கு வந்து சேரும் நேரம்: இரவு 11.30 மணியளவில்

விபரம் : திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமியும், அருள்மிகு பவளக்கனிவாய்ப் பெருமாளும் காலை 6.00 மணிக்கு எழுந்தருளல். கோயிலுக்குள் அதிகாலை 4.00 மணிக்கு அழகர்சாமி நாயுடு, சூறாவளி சுப்பைய்யர், கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படிகளாகி, நான்கு சித்திரை வீதிகள் சுற்றி வந்து, பின் முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி, பின்பு திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளி காலை 8.30 மணிக்குமேல் 8.54 மணிக்குள் ரிஷப லக்கனத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம். இரவு திரு. ஏ. சொக்கலிங்கம் பிள்ளை டிரஸ்டிலிருந்து புஷ்ப அலங்காரம் செய்யப்பெற்ற ஆனந்தராயர் பூப்பல்லக்கில் அம்மனும் சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா. பிரதோஷம்.

பதினோராம் திருநாள் திருத்தேர் சப்தாவர்ணச்சப்பரம்

20.04.2016    சித்திரை7     புதன்கிழமை
காலை எழுந்தருளும் நேரம் : 6.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகனம் : திருத்தேர்
எழுந்தருளும் மண்டபம் : கோயிலுக்குள் ம. முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படியும் இராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படியும்
இரவு எழுந்தருளும் நேரம் : 7.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசிவீதிகள்
வாகன விபரம் : சப்தாவர்ணச்சப்பரம்
திருவீதிஉலா முடிவுற்று திருக்கோயிலுக்கு வந்து சேரும் நேரம்: இரவு 10.30 மணியளவில்

விபரம் : அதிகாலை 5.00 மணி முதல் 5.30 மணிக்குள் மேஷ லக்கனத்தில் சுவாமி அம்மன் தேருக்கு எழுந்தருளல். காலை 6.00 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தல்.

பன்னிரண்டாம் திருநாள் வெள்ளி ரிஷபம்

21.04.2016    சித்திரை8    வியாழக்கிழமை
எழுந்தருளும் மண்டபம் : கோயிலுக்குள் திருக்கல்யாண மண்டபம்
ஆடிட்டர் லெட்சுமணன் சிவராமன் மண்டகப்படி
இரவு எழுந்தருளும் நேரம் : 7.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசிவீதிகள்
வாகன விபரம் : வெள்ளி ரிஷபம்

விபரம் : பொற்றாமரைக்குளத்தில் தீர்த்தம், தேவேந்திர பூஜை. இரவு 9 மணிக்கு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியும், அருள்மிகு பவளக்கனிவாய்ப் பெருமாளும் 16 கால் மண்டபத்தில் விடை பெற்றுக் கொள்ளுதல்.

 
மேலும் மதுரை சித்திரை திருவிழா - 2016 »
temple news
மதுரை சித்திரை திருவிழாவின் 10ம் நாளான ஏப்.19ல் மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழா நேற்று துவங்கியது. நாளை அழகர் மலையில் இருந்து ... மேலும்
 
temple news
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக, அம்மனுக்கு ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவில் இன்று மீனாட்சியம்மன் இந்திரவிமான வாகனத்தில் திக்விஜயம் செய்கிறாள். பட்டம் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: கண்டாங்கிப் பட்டு உடுத்தி, கையில் நேரிக் கம்புடன் தங்கப் பல்லக்கில் அழகர் கோவிலிலிருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar