Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: நட்புணர்வுடன் பழகும் மேஷ ராசி ... மிதுனம்: அனைவரிடமும் பண்புடன் நடக்கும் மிதுன ராசி அன்பர்களே! மிதுனம்: அனைவரிடமும் பண்புடன் ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
ரிஷபம்: உற்சாக மனப்பான்மை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
எழுத்தின் அளவு:
ரிஷபம்: உற்சாக மனப்பான்மை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

பதிவு செய்த நாள்

15 ஏப்
2016
02:04

சுக்கிரன் மட்டும் நன்மை அளிக்க காத்திருக்கிறார். மற்ற கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் எந்த செயலிலும் விடாமுயற்சி தேவைப்படும். செவ்வாயும், புதனும் வக்ரத்தில் இருந்தாலும் கெடுபலன் தர மாட்டார்கள். குடும்பத்தில் சுக்கிரனால் வருமானம் படிப்படியாக உயரும். உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். பெண்கள் உதவிகரமாக இருப்பர். விருந்து விழா என செல்வீர்கள். அண்டை வீட்டாருடன் கருத்துவேறுபாடு மறையும். உடல் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. சிலருக்கு மருத்துவச் செலவும் அதிகரிக்கலாம்.

தொழில், வியாபாரத்தில் சூரியனால் வீண் விரயம் ஏற்படலாம். பண விஷயத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம். புதனால் எதிரி தொல்லை உருவாகலாம். முயற்சியில் தடைகளைச் சந்திக்கும் நிலை வரலாம். ஏப். 22,23ல் பகைவரை வெல்லும் ஆற்றல் பெறுவீர்கள்.

பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவையும் கிடைக்கும். எதிர்பார்த்த சலுகையும் பெற வாய்ப்புண்டு.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும். நண்பர்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். மக்கள் மத்தியில் பாராட்டு, புகழ் கிடைக்கும். அரசியல்வாதிகள் உழைப்புக்கேற்ப நற்பலனைக் காணலாம். தொண்டர்களுக்காக பணம் செலவழிப்பர்.

மாணவர்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம். அக்கறையுடன் படித்தால் மட்டுமே தரத்தேர்ச்சி கிடைக்கும். விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்காமல் போகலாம். அதிக முதலீடு செய்ய வேண்டாம். புதிய சொத்து வாங்கும் வண்ணம் தள்ளிப் போகும். வம்பு வழக்கில் சிக்காமல் இருப்பது நல்லது.

பெண்கள் குடும்பத்தில் முக்கிய அம்சமாகத் திகழ்வர். உங்களால் குடும்பம் வளர்ச்சி பெறும். பிறந்த வீட்டில் இருந்து சீதனப்பொருள் கிடைக்கும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.

நல்ல நாள்: ஏப். 22,23,24,25,26, மே 1,2,3,4,8,9,12,13
கவன நாள்: ஏப். 27,28 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,6, நிறம்: வெள்ளை, நீலம்

பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். சனிக்கிழமை காக்கைக்கு அன்னமிடுங்கள். வியாழக்கிழமை தட்சணாமூர்த்தியை வழிபடுங்கள். தினமும் சூரியனை வணங்கினால் ஆரோக்கியம் மேம்படும்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar