Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விடியற்காலை எழுவதால் ஏற்படும் ... அட்சய திரிதியையும் சிறப்பும்! அட்சய திரிதியையும் சிறப்பும்!
முதல் பக்கம் » துளிகள்
வள்ளி கல்யாண வைபோகம்.. பாடல்கள் சொல்லும் கதை!
எழுத்தின் அளவு:
வள்ளி கல்யாண வைபோகம்.. பாடல்கள் சொல்லும் கதை!

பதிவு செய்த நாள்

03 மே
2016
02:05

திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் மங்கலக் காட்சிகள் நிறைந்த பாடல்களைப் பாடுவது வழக்கம். திருமணத்தின் போது மணமக்களை ஊஞ்சலில் அமர்த்தி, கவுரி கல்யாண வைபோகமே, கொத்தோடு குலைவாழை நிறுத்தி, தோரணம் கட்டி-கவுரி கல்யாண வைபோகமே என்று பாடுவது வழக்கம். இந்தப் பாட்டில் தொடர்ந்து, சீதாராம கல்யாண வைபோகமே, ராதாகிருஷ்ண கல்யாண வைபோகமே என்று பாடுவார்கள். இது நெடும் பாடலாக அமைந்ததாகும்.

திருமணக் காட்சிகளை விளக்கும் பாடல்களைப் பாடி வந்தால் பாடுபவர்களுக்கும், அவர்களது குடும்பத்துக்கும் தொடர்ந்து நன்மைகள் நடக்கும் என்பது நம்பிக்கை. வைணவர்கள் ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் உள்ள, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத என்ற பாசுரத்தைப் பாடி மகிழ்கின்றனர்.

முருகனடியார்கள் வள்ளியின் திருமணத்தைச் சிந்தித்து மகிழ்கின்றனர். வள்ளித் திருமணத்தைப் படிக்கும் கன்னியர்க்கு அழகும், நல்ல குணமும் நிறைந்த மணவாளன் கிடைப்பான் என்பது உறுதி!

வள்ளித் திருமணத்தை முழுவதுமாக சிந்தித்துப் பாராயணம் செய்யமுடியாமல் போனாலும், பின்வரும் மூன்று பாடல்களையாவது தினமும் பாராயணம் செய்த பலன் அடையலாம். தின்னப் புனம் காத்திருந்த வள்ளியிடம் சென்று காதல் மொழி பேசி மகிழ்ந்த முருகன், அவளை அழைத்துக் கொண்டு சென்று ஒரு சோலையில் தங்கியிருந்தார். அதையறிந்த வள்ளியின் தந்தையான நம்பிராஜனும் சகோதரர்களும் படை திரட்டிக்கொண்டு சென்று, அவர்களைச் சூழ்ந்துகொண்டனர். அப்போது முருகனின் கையில் இருந்த சேவல் பெருங்குரலெடுத்துக் கூவியது. அந்தப் பெரிய இடி போன்ற குரலால் வேடுவர் அனைவரும் வீழ்ந்து மாண்டனர். அங்கு வந்த நாரதர், முருகனிடம் அனைவரையும் உயிர்ப்பிக்கும்படி வேண்டிக் கொண்டார். முருகன் கடைக் கண்ணால் பார்க்க, எல்லோரும் உயிர்பெற்று எழுந்தனர். நம்பிராஜனும் அவனது குமாரர்களும் முருகனை வணங்கினர்.

பாடல்கள் சொல்லும் கதை:

முதற் பாடல்:

அன்னதோர் வேளை தன்னில் ஆறுமுக முடைய வள்ளல்
தன்னுழை இருந்த நங்கை தனையரு ளோடு நோக்கக்
கொன்னவில் குறவர் மாதர் குயிற்றிய கோலம் நீங்கி
முன்னுறு தெய்வக் கோலம் முழு தொருங்குற்ற தன்றே!

கருத்து: முருகன் ஆறு திருமுருகங்களும் பன்னிரண்டு தோள்களும் கொண்டவராகக் காட்சி தந்தார். அவர் தன்னருகில் இருந்த வள்ளியை அருளுடன் பார்த்து, நீ மேற்கொண்ட குறப்பெண் கோலத்தை விடுத்து, முன்னம் இயல்பாக இருக்கும் உனது தேவ வடிவை அடைவாய் என்றார். வள்ளி தனது குறக்கோலத்தை விடுத்து, தனது தெய்வப் பெண் வடிவம் கொண்டாள்.

இரண்டாவது பாடல்:

அந்த நல் வேளை தன்னில் அன்புடையக் குறவர் கோமான்
கந்த வேற் பாணி தன்னில் கன்னிகை கரத்தை நல்கி
நந்தவ மாக்கி வந்த நங்கையை நயப்பால் இன்று
தந்தனன் கொள்க வென்று தண்புனல் தாரை உய்த்தான்.

கருத்து: அந்த நல்ல வேளையில் குறவர் அரசனான நம்பிராஜன் கந்தவேளின் கையில் வள்ளியின் கையை வைத்து, எங்களது பெருந்தவத்தால் எம்மிடம் வந்த இந்த நங்கையை விருப்போடு உமக்குந் தந்தேன், என்று கூறியதுடன், நீரைத் தாரையாக வார்த்தான்.

மூன்றாவது பாடல்:

நற்றவம் இயற்றுத் தொல்சீர் நாரதன் அனைய காலைக்
கொற்றம துடைய வேலோன் குறிப்பினால் அங்கியோடு
மற்றுள கனுந் தந்து வதுவையின் சடங்கு நாடி
அற்றமது அடையா வண்ணம் அருமறை விதியாற் செய்தான்.

கருத்து: நல்ல தவத்தைச் செய்து கொண்டிருப்பவரும், பழம்பெருமை வாய்ந்தவருமான நாரதரை, முருகன் நோக்கினான். அவர் அவனது குறிப்பை உணர்ந்து, வேள்வித் தீயை மூட்ட, வேத விதிப்படியான அனைத்துச் சடங்குகளையும் செய்தான்.

இந்த மூன்று பாடல்களையும் தினமும் படித்து வந்தாலே வள்ளித் திருமணத்தைப் பாராயணம் செய்த பலனைப் பெறலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar