பொள்ளாச்சி: பொள்ளாச்சி அன்னை கஸ்துாரி பாய் வீதி வெள்ளையம்மன், பொம்மியம்மன் உடனமர் மதுரைவீரன் சுவாமி, பட்டத்தரசியம்மன், முனீஸ்வரன் கோவிலில், 52ம் ஆண்டு உற்சவ திருவிழா கடந்த மாதம் 19ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் கிராம சாந்தியும், நேற்று சக்தி கும்பம், தீர்த்தம் எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, நேற்று மதுரைவீரன், பட்டத்தரசியம்மன் உற்சவ சிலை திருவீதி உலா மற்றும் அலகு குத்தி உருவாரம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று மாவிளக்கு, சுவாமிக்கு திருக்கல்யாணம் உற்சவமும்; நாளை அமுதப்பொங்கல் நிகழ்ச்சியும், 6ம் தேதி மஞ்சள் நீராடுதல், 7ம் தேதி அபிேஷக பூஜைகள் 9ம் தேதி மறு பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது.