பதிவு செய்த நாள்
14
மே
2016
12:05
எதையும் அறிவதில் ஆர்வமுள்ள மேஷ ராசி அன்பர்களே!
சுக்கிரன், குரு, கேது நன்மை தருவார்கள். மற்ற கிரகங்கள் சாதகமான நிலையில் இல்லை. எனினும் பின்தங்கிய நிலை இனி இருக்காது. குரு, கேதுவால் பொருளாதார வளம் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான சகல வசதியும் கிடைக்கும். பெண்கள் மூலம் பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். மதிப்பு, மரியாதை கூடும். மாத பிற்பகுதியில் பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பணியாளர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும், அதற்கேற்ற பலன் கிடைக்கும். அதிகாரிகளுடன் அனுசரித்து போக வேண்டும். சற்று முயற்சி எடுத்தால்
கோரிக்கைகள் நிறைவேறும். மே 26,27,28 சிறப்பான நாட்களாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு நல்ல லாபம் இருக்கும். சூரியனால் பணவிரயம்
ஏற்பட்டாலும் அதை ஈடுகட்ட பணம் வரும். அலைச்சல் இருக்கும். அரசின் சலுகை, வங்கி கடன் கிடைக்கும். மே 17,18 ஜூன் 13,14-ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு பணவசதி இருந்தாலும் எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.
மாணவர்கள் மேல் படிப்பிற்காக அதிக முயற்சி எடுக்க வேண்டி வரும். எனினும் ஆசிரியர்களின் உதவி, ஆலோசனை கிடைக்கும்.
விவசாயிகள் கரும்பு, எள், பயறு வகை மற்றும் பனை பொருட்களில் நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும்.
பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நல்ல பெயர் எடுப்பர். புத்தாடை, நகை வாங்கலாம்.
நல்ல நாள்: மே 17, 18, 19, 20, 21, 26, 27, 28, 29, 30, ஜூன் 1, 2, 6, 7, 13, 14
கவனநாள்: மே 22, 23 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 3, 7 நிறம்: வெள்ளை, மஞ்சள்.
பரிகாரம்: சூரியன், முருகன் வழிபாடு உடல் நலத்தை மேம்படுத்தும். பைரவர் வழிபாடும் தேவை.