பதிவு செய்த நாள்
14
மே
2016
01:05
கடமையுணர்வு மிக்க மீன ராசி அன்பர்களே!
சூரியன் சாதகமான பலன் தர காத்திருக்கிறார். சுக்கிரன், ராகு இருவரும் மாதம் முழுவதும் நன்மை அளிப்பர். இதனால் ஆற்றல் மேம்படும். பொருளாதார வளம் பெருகும். முயற்சியில் தடை குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக அதை முறியடிப்பீர்கள். புதன் சாதகமற்று இருப்பதால் குடும்பத்தில் கணவன்-, மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். மே20க்கு பிறகு நிலைமை சீராகும். உறவினரால் உதவி கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வங்கி நிதியுதவிஉடன் விரிவாக்கப் பணியில் ஈடுபடுவீர்கள். ஜூன் 3க்கு பிறகு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. வரவு-,செலவு கணக்கை சரியாக வைப்பது நல்லது.
பணியாளர்களுக்கு புதனால் பணிச்சுமை ஏற்பட வாய்ப்புண்டு. மே 20க்கு பிறகு தனியார் துறையில் பணியாற்றுபவர்கள் நற்பலன் காண்பர். விரும்பியபணி, இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். அதிகாரிகளின் ஆதரவு ஓரளவே இருக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும். அரசிடம் இருந்து புகழ், பாராட்டு கிடைக்கும்.
அரசியல்வாதிகள் முன்னேற்றமான பலன் பெறுவர். தொண்டர்களின் ஆதரவு உண்டு.
மாணவர்கள் ஆசிரியர்கள் வழிகாட்டுதலை ஏற்பது நல்லது. புதன்,குரு சாதகமற்று
இருப்பதால் விடாமுயற்சி தேவை.
விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். பணப்பயிர்களைத் தவிர்த்து குறைந்த முதலீட்டில் பயிர் செய்வது நல்லது. புது சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் கிடைக்கும்.
பெண்களால் குடும்பம் சிறக்கும். ஜூன் 4,5ம் தேதிகளில் புத்தாடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வர்.பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.
நல்ல நாள்: மே 14, 15, 16, 17, 18, 24, 25, 26, 27, 28, 31, ஜூன் 1, 4, 5, 11, 12, 13, 14
கவன நாள்: மே 19, 20, 21 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்:3, 5 நிறம்: வெள்ளை, செந்துõரம்
பரிகாரம்: குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழைபோடுங்கள். ராமர் வழிபாடு நன்மையளிக்கும்.