Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நந்திதேவரின் நடனம் ! கவலை தீர்ப்பார் கருட பகவான்! கவலை தீர்ப்பார் கருட பகவான்!
முதல் பக்கம் » துளிகள்
அல்லல்கள் நீக்கும் அம்பிகையின் திருப்பெயர்கள்!
எழுத்தின் அளவு:
அல்லல்கள் நீக்கும் அம்பிகையின் திருப்பெயர்கள்!

பதிவு செய்த நாள்

24 மே
2016
04:05

அங்கிங்கெனாதபடி எங்கும் பரிபூரணமாக வியாபித்திருக்கும் அம்பிகை, தனக்கென தனியே உருவமும் பெயரும் இல்லாதவள். என்றாலும் அன்பர்கள் மீது கொண்ட கருணையால், அவள் பல வடிவங்களைத் தாங்கி வந்து அவர்களுக்கு அருள்பாலிக்கிறாள். கவுரி என்பது அவளுக்குப் பொதுப்பெயராகும். பெருமான் அவளை உமா என்று அழைத்தார். இந்தத் திருப்பெயராலேயே அம்பிகை தேவராத்துள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குறிக்கப்படுகின்றாள். கல்வெட்டுக்கள் அவளை உமா என்றும் உமாபட்டாரகி என்றும் அழைக்கின்றன. சிவன்கோயில்களில் அவள் பல சிறப்புப்பெயர்களைக் கொண்டு எழுந்தருளியுள்ளாள். அந்தத் திருநாமங்கள்..

லிங்கோத்பவர் - மோட்சப்பிரதாயினீ
திரிமூர்த்தி - வம்சவிருத்திப்பிரதாயினீ
கல்யாணசுந்தரர் - சர்வமங்களப் பிரதாயினீ
உமாசகாயர் - பார்யா சவுக்யப் பிரதாயினீ
சுகாசனர் - தர்மார்த்தகாமமோட்சப் பிரதாயினீ
கங்காதரர் - சர்வபாபப் பிராணாஸினீ
நடராஜர் - சம்பத்யோகப் பிரதாயினீ
சண்டேச அனுக்கிரகர் - மகாபாதகநாசினீ
வ்ருஷபவாகனர் - தர்மஸித்திப்ரதாயினீ
நீலகண்டர் - விஷதோஷப் பிராணஸினீ
ஹரிஹரர் - தர்மார்த்த தாயினீ
ஏகபாதர் - மகாரோகவிநாசினீ
அர்த்தநாரீசர் -சர்வசவுக்யப் பிரதாயினீ
தட்சணாமூர்த்தி - மேதாபிரக்ஞா பிரதாயினீ
சோமாவிநாயகர் - ஸர்வஸித்திப் பிரதாயினீ
சோமாஸ்கந்தர் - புத்ரசவுக்யப் பிரதாயினீ
சந்திரமவுலீசுவரர் - தனதான்யப் பிரதாயினீ
வீரபத்திரர் - சத்ருவித்வேஷ்ட விநாசினீ
காலசம்ஹாரர் - சர்வாரிஷ்ட விநாசினீ
காமந்தகர் - யோகவிக்ன விநாசினீ
கஜாந்தகர் - பராபிசாரசமனீ
திரிபுரசம்காரர் - ஜன்மஜராம்ருத்யுவினாசினீ
பிட்சாடனர் - யோகஷித்ப்ருத்த விமோஹினீ
சரபர் - அரிப்பிராசினீ
பைரவர் - ரட்சாகரீ
ஜலந்தரசம்ஹாரர் - துஷ்டவிநாசினீ

இந்தத் திருநாமங்கள் தவிர, சிவன்கோயில்களில் சிவபெருமானோடு இணைந்த நிலையில் விளங்கும் அம்பிகையின் திருப்பெயர்களும் நம்மை சிலிர்க்கவைக்கும் அவை.

நடராசர் - சிவகாமி
தியாகராஜர் - கமலாம்பிகை
சந்திரசேகரர் - பாலாம்பிகை
சந்திரசேகரர் - இந்துசேகரி
சோமாஸ்கந்தர் - உமாதேவி (கொண்டி)
காசிவிசுவநாதர் - விசாலாட்சி
ஏகாம்(ப)ரநாதர் - காமாட்சி
சோமசுந்தரர் - மீனாட்சியம்பிகை
வியாக்ரபுரீசுவரர் - சவுந்தராம்பிகை
அகத்தீசுவரர் - ஆனந்தவல்லி (அகிலாண்டேஸ்வரி)
அண்ணாமலையார் - உண்ணாமுலைநாயகி
ஜலகண்டேசுவரர் - அகிலாண்டேசுவரி
பிட்சாடனர் - மோகினி
கங்காதரர் - மோகினி
மார்க்கசகாயர் - மரகதவல்லி
பிரதோஷ நாயகர் - அமுதீசுவரி
வீரபத்திரர் - பத்ரகாளி
அகோரர் - அகோரேசி
சூர்யேசுவரர் - மங்களாம்பிகை
வைத்தியநாதர் - தைல நாயகி
அமுதகடேசர் - அபிராமி
காளத்தீஸ்வரர் - ஞானப்பூங்கோதை
வேதகிரீசுவரர் - திரிபுரசுந்தரி
ராமநாதர் - பர்வதவர்த்தினி
அக்னீசுவரர் - சவுந்தரநாயகி
காமேசுவரர் - காமகலா
நெல்லையப்பர் - காந்திமதி
சங்கரலிங்கம் - சங்கரகோமதி
வேதபுரீசுவரர் - வேதவல்லி
சிவசைலநாதர் - பரமகல்யாணி
ஞானேசுவரர் - ஞானேசுவரி
கேதாரேசுவரர் - கவுரி
ஏகாம்(ப)ரேசுவரர் - காமாட்சியம்மன்
மகாருத்ரர் - ரோகசி

மேலும் திருத்தலங்களின் பெயர்களையும் தனது திருநாமத்தில் கொண்டு அம்பிகை அருள்பாலிப்பது உண்டு. மதுரையின் ஆதிப் பெயர் கடம்பவனம். ஆதலால், மீனாட்சி அம்மையை கடம்பவனப் பூங்குயில் என்றும் போற்றுவர். அதேபோல், திருமயிலை கற்பகாம்பிகையை புன்னைவனப் பூங்குயில் எனப்போற்றுவர். கோகிலம் என்பது குயிலாகும். இதையொட்டி திருமணஞ்சேரியில் வீற்றிருக்கும் அம்பிகைக்குக் கோகிலாம்பிகை என்பது பெயராயிற்று. அறுபது ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் 60 திருநாமங்கள் இங்கே இடம் பெற்றுள்ளன. இத் திருநாமங்களைச் சொல்லி அம்பிகை மீது மலர் தூவு அல்லல்கள் நீக்கும் செல்வம் பெருகும்.

 
மேலும் துளிகள் »
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திரமாகும். இது ... மேலும்
 
temple news
பவுர்ணமியில் சந்திரன் 16 கலைகளுடன் பரிபூரணமாக பிரகாசிக்கும். இன்று கிரிவலம் சென்று வழிபட மனஅழுத்தம், ... மேலும்
 
temple news
இன்று பங்குனி பிரதோஷ விரதம். சிவனை வழிபட எல்லாம் நன்மையும் நடக்கும்.பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ... மேலும்
 
temple news
பங்குனி ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar