பதிவு செய்த நாள்
11
ஜூன்
2016
02:06
அனைவரிடமும் நட்புடன் பழகும் மேஷ ராசி அன்பர்களே! (வீட்டில் சுபநிகழ்ச்சி)
சூரியன், சுக்கிரன் முன்னேற்றம் அளிப்பர். ராசிக்கு 5 ல் குருவும் , 11ல் கேதுவும் நன்மை தருவர். சுக்கிரன் ஜூலை 8ல் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறினாலும் நன்மை தருவார். தற்போது ரிஷபத்தில் இருக்கும் புதன், ஜூன் 20ல் மிதுனத்திற்கு மாறுவதால் நன்மை தர மாட்டார். ஆனால் அவரே ஜூலை 6ல் கடகத்திற்கு மாறியதும் நன்மையளிப்பார். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். புதிய முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். வீட்டில் சுபநிகழ்ச்சி ஆடம்பர முறையில் நடந்தேறும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். ஜூன் 20 முதல் ஜூலை 6 வரை பகைவரால் இடையூறு வரலாம். அரசு வகையில் பிரச்னை ஏற்படலாம்.
பணியாளர்கள் சிறப்பான பலனை பெறுவர். வேலை விஷயமாக வெளியூர் செல்ல வாய்ப்புண்டு.
கலைஞர்கள் சுக்கிரனின் பலத்தால் முன்னேற்றம் காண்பர்.
அரசியல்வாதிகள் சிறப்பான பலன் பெறுவர்.
மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். ஜூலை6க்கு பிறகு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். கறுப்பு நிற தானியம் பயிரிடுவதை தவிர்க்கவும்.
பெண்கள் முன்னேற்றம் காண்பர். கணவரின் அன்பும் ஆதரவும் உண்டு. விருந்து விழா என சென்று மகிழ்வர்.
நல்ல நாள்: ஜூன்15,16,17,23,24,25,26, 29,30, ஜூலை 3,4, 5,10,11,12,13,14
கவன நாள்: ஜூன் 18,19 ஜூலை 15 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்: மஞ்சள், செந்துõரம்
பரிகாரம்: பைரவரை வழிபடுங்கள். புதன் பகவானுக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு பாசிப் பயறு தானம் செய்யலாம்.