விருத்தாசலம்: விருத்தாசலத்தில் சீதா கல்யாண உற்சவம் (12ம் தேதி) நடக்கிறது. விருத்தாசலம் நாம சங்கீர்த்தன பக்த ஜன சபா சார்பில் 5ம் ஆண்டு சீதா கல்யாண மகோற்சவம், சேலம் ரோடு சபிதா பேலசில் நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாள் உற்சவத்தையொட்டி, காலை 6:30 முதல் 8:30 மணி வரை உஞ்சவ்ருத்தி, 8:30க்கு மேல் பகல் 1:00 மணி வரை தோடயமங்கலம் குருகீர்த்தனை, பஞ்சபதி, கணேசாதி தியானங்கள், போதேந்திராள் சரித்திரம், ஜானவாசம் (மாப்பிள்ளை அழைப்பு), திவ்யநாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சிகள் நடந்தது. முக்கிய நிகழ்வாக (12ம் தேதி) பகல் 11:40 மணியளவில் சீதா கல்யாணம், மகா தீபாராதனை, வசந்த கேளிக்கை, பவ்வளிம்பு உற்சவம், அனுமன் உற்சவம், மங்கள ஆரத்தி நிகழ்ச்சிகளுடன் நிறைவடைகிறது.