குன்னுார்: குன்னுார் பெரிய வண்டிச்சோலை பகுதியில் உள்ள சின்ன திருப்பதி பாலாஜி கோவிலில், 24ல் ஆண்டு திருவிழா துவங்குகிறது. விழாவில், காலை,6:30 மணிக்கு மகா கணபதி ஹோமம், சமூக அர்ச்சனை, பாகவத பாராயணம், கலச அபிஷேகம், மகா அபிஷேகம், சுற்று விளக்கு ஆகியவை நடக்கின்றன. 25ல், காலை, 8:00 மணிக்கு மகா சுதர்சன ஹோமம், அனுக்கிரக பிரபாசனம், பகவதி சேவா ஆகியவை நடக்கின்றன. ஏற்பாடுகளை கோவில் குருக்கள், அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.