Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பழநிகோயில் இரண்டாம் வின்ச் பராமரிப்பு பணிக்காக நிறுத்தம் பழநிகோயில் இரண்டாம் வின்ச் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த சாலை சேதம் கேபிள் பதிப்பதற்காக அரசு நிதி ரூ.25 லட்சம்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த சாலை சேதம் கேபிள் பதிப்பதற்காக அரசு நிதி ரூ.25 லட்சம்

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2016
11:06

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் சி.சி.டி., கேமராவுக்கான கேபிள் பதிப்பதற்காக பேவர் பிளாக் சாலை சேதப்படுத்தபட்டதால் அரசு நிதி ரூ.25 லட்சம் விரயமானது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், யாத்ரிகர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி பின்னரே கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்வது வழக்கம். இதனால் கடற்கரை பகுதி அதிகாலை முதல் இரவு வரை பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிவதை காணலாம். பக்தர்களின் வசதிக்காக சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடற்கரை பகுதியை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. முதற்கட்டமாக மண்டி தெருவில் கடற்கரையை ஒட்டி ரூ.25 லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் அக்னி தீர்த்த கடற்கரையில் தொடர் திருட்டை தடுக்க போலீசார் கண்காணிப்பு கேமரா பொருத்தினர். அவை பழுதாகியதால் நவீன கேமரா பொருத்த போலீசார் முடிவு செய்தனர். இதற்கான கேபிள் பதிப்பதற்காக நகராட்சி அனுமதியின்றி நேற்று முன்தினம் இரவோடு இரவாக மண் அள்ளும் இயந்திரம் மூலம் புதிதாக போடப்பட்ட பேவர் பிளாக் சாலை பெயர்க்கப்பட்டு 300 மீட்டர் துாரம் குழி தோண்டப்பட்டது. தகவலறிந்த நகராட்சி ஆணையர் ஜெயராமராஜா சம்பவஇடம் விரைந்து சென்று மேலும் குழி தோண்ட விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் இரு திட்ட பணிகளும் முழுமை பெறாமல் பக்தர்களுக்கு பயனற்ற நிலையில் உள்ளது.

இதற்கிடையே புனித நீராடுவதற்காக அக்னிதீர்த்த கடற்கரைக்கு செல்லும் பக்தர்கள் கூட்ட நெரிசல் காரணமாக கால்இடறி குழிக்குள் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். தோண்டப்பட்ட குழியை மூட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி ஆணையர் ஜெயராம ராஜா கூறுகையில்,“அக்னி தீர்த்த கடற்கரையில் கண்காணிப்பு கேமராவுக்காக கேபிள் பதிக்க, நகராட்சி அனுமதியின்றி பேவர் பிளாக் சாலையை போலீசார் பெயர்த்துவிட்டனர். முறையாக அனுமதி பெற்று கேபிள் பதிக்குமாறு போலீசாருக்கு அறிவுரை வழங்கி பணி நிறுத்தப்பட்டது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிப்பது உங்களுக்கு தெரியும். ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar