மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் நேற்று திறக்கப்பட்டன. உண்டியலில் ரூ.69 லட்சத்து 44 ஆயிரத்து 494 மற்றும் உப கோயில்கள் உண்டியல்களில் ரூ.6 லட்சத்து 51 ஆயிரத்து 295 இருந்தது. யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.31 ஆயிரத்து 263 இருந்தது. அன்னதான நன்கொடை ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 404. இத்துடன் தங்கம் 702 கிராம் மற்றும் வெள்ளி 897 கிராம் வருவாயாக கிடைத்தன.