Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவையார் | எட்டாம் ...
முதல் பக்கம் » எட்டாம் திருமறை
மாணிக்கவாசகர் குரு பூஜை -- ஆனி மகம்
எழுத்தின் அளவு:
மாணிக்கவாசகர் குரு பூஜை -- ஆனி மகம்

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2016
04:07

மாணிக்கவாசகர் குரு பூஜை -ஆனி மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. மணிவாசகர் தில்லையில் சிறிது காலம் தங்கி அப்பதியில் திருநடமிடும் இறைவரைப் போற்றித் துதித்து வந்தார். ’தான்’ எனும் தத்போதமற்று எந்நேரமும் சிவயோகத்தில் வீற்றிருப்பார்.   பெருந்துறை மேவும் பரமனும், சொக்கேசரும், அம்பலவாணரும் தம்மை ஆட்கொண்டருளிய நிகழ்வினை நினைந்து நினைந்து ருகுவார்; கண்ணீர் பெருக்குவார்; சிவானந்த வெள்ளத்தில் மூழ்கித் திளைப்பார்.

தில்லை மேவும் இறைவர் வேதியரின் ருக்கொண்டு அடிகளாரின் இருப்பிடம் நாடிச் சென்றார். வருகை புரிந்து இருப்பது சபாநாதரென அறியாத அடிகள் ’வேதியரே, தாம் இங்கு எதன் பொருட்டு எழுந்தருளினீர்?’ என வினவினார். ஆதி முதல்வனும் ’அடிகளே! அம்பிகை பாகன் ம்மை ஆட்கொண்டு அருளிய நிகழ்வினைக் கேள்வியுற்றுப் பெரிதும் வந்தோம். எம் பொருட்டு தாம் முன்பு அருளிச் செய்த பாடல்களை மீண்டும் ஓதுவீராக! என்று கூறியருளினார்.

சிவப்பிழம்பாய் வீற்றிருந்த அடிகளும் தன் வயமற்று ’திருவாசகம்’ முழுவதும் பாடியருளினார். ஆனந்தக் கூத்தரும் தன் திருக்கரங்களால் அவற்றைச் சுவடிகளில் பதிவு செய்து கொண்டார். பின் அடிகளிடம் ’திருக்கோவையும் பாடி அருள்க’ என்று அருளினார். மணிவாசகப் பெருமானும் கோவை பாட, நடேசப் பெருமான் அகம் குளிர்ந்து அவற்றையும் பதிவு செய்து கொண்டார். பின் அடிகளாரை வணங்கி விடை பெற்றார்.

’மாணிக்கவாசகன் சொல்ல அழகிய சிற்றம்பலம் டையான் எழுதியது’ என்று கையொப்பம் இட்டுத் தில்லைத் திருக்கோயிலின் பஞ்சாட்சரப் படிகளில் வைத்தருளிப் பின் ஆலயம் ஏகினார். பொழுது புலர்ந்ததும் தில்லை அந்தணர்கள் ஆடல் வல்லானின் திருச்சந்நிதியின் முன் சுவடிகளையும் அதில் அருட்கூத்தரின் திருக்கையொப்பத்தினையும் கண்டு பெருவியப்புற்றனர்.

தன்னிலை மறந்து ’சிவ மயமாய்’ வீற்றிருந்த அடிகளாரிடம் ’இப்பாடல்களின் பொருள் யாது?’ என வணங்கி வேண்ட, வாதவூரடிகள் அமபலத்து ஆடுகின்ற கூத்தர் பிரானைச் சுட்டி ’இங்குறையும் இறைவரே இத்திருப்பாடல்களின் சாரமும் பொருளும்’ என்று அறிவித்து, சந்நிதி ட்புகுந்து, ஆனி மாதமும் மக நட்சத்திரமும் கூடிய அத்திருநாளில் பொன்னம்பல ஜோதியில் கலந்து சிவமாம் பேறு பெற்று இன்புற்றார்.

திருவாசகத் திருப்பதிகங்கள் மொத்தம் 51. பாடல் பெற்றுள்ள பிரதானத் தலங்கள் ஏழு ’தில்லை, திருப்பெருந்துறை, திருத்திரகோசமங்கை, திருக்கழுக்குன்றம், திருவாரூர், திருவண்ணாமலை, திருத்தோணிபுரம் (சீர்காழி)’. இவ்வேழு தலங்களுக்கான பதிகங்களிலும் குறிக்கப் பட்டுள்ள வைப்புத் தலங்கள் மொத்தம் 54. திருவாசகமும் திருக்கோவையும் 8ஆம் திருமுறையாகத் தொகுக்கப் பட்டுள்ளது.

ஆதியில் சிதம்பர நாதர் தன் திருக்கரங்களால் எழுதி அருளிய மூலச் சுவடிகள் தில்லையில் பாதுகாக்கப் பட்டு வந்தது. 300 ஆண்டுகளுக்கு முன்பு, அந்நியப் படையெடுப்புக் கால கட்டத்தில்,  சுவடிகளை புதுவை மாநிலத்திலுள்ள ’அம்பலத்தாடி’ மடத்திற்கு எழுந்தருளச் செய்து, காத்து வந்தனர்.  ஆதி முதல்வன் கரம் வருந்த எழுந்திய சுவடிகள் இன்றும் இம்மடத்தில் மூலிகைக் காப்பிட்டுப் பாதுகாக்கப் பட்டு வருகிறது.

மகாசிவராத்திரி இரண்டாம் கால பூஜையில் ’சுவடிகளை எழுந்தருளச் செய்துள்ளப் பேழையைத்’ திறந்து ’துõப தீபம்’ காட்டி அர்ச்சிப்பர். மற்ற நாட்களில் பேழையை மட்டுமே தரிசிக்க இயலும். அடிகளின் குருபூஜை தினமான ஆனி மகமன்று சிவாலயம் சென்று ஆடல் வல்லானையும் வாதவூர் அடிகளாரையும் போற்றித் துதித்து ய்வு பெறுவோம்.

திருச்சிற்றம்பலம்.

 
மேலும் எட்டாம் திருமறை »
temple news
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர். சிவனடியார்கள் பலர் இருந்தாலும் சிவனுக்கு மிக ... மேலும்
 
temple news
மாணிக்கவாசகரால் பாடப்பட்ட 8ம் திருமுறையில் மொத்தம் 1056 பாடல்கள் உள்ளது. இதில் திருவாசகம் 656 பாடல்களும், ... மேலும்
 
temple news
5. திருச்சதகம் (இது திருப்பெருந்துறையில் பாடப்பட்டது) பக்தி வைராக்கிய விசித்திரம். திருவாசகத்தின் ... மேலும்
 
temple news
மாணிக்கவாசகரால் பாடப்பட்ட 8ம் திருமுறையில் மொத்தம் 1056 பாடல்கள் உள்ளது. இதில்  திருக்கோவையார் 400 ... மேலும்
 
temple news
விநாயகர் வணக்கம் 1. எண்ணிறைந்த தில்லை எழுகோ புரந்திகழக்கண்ணிறைந்து நின்றருளும்/கற்பகமே - ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar