Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)
எழுத்தின் அளவு:
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2016
04:07

தாய்ப்பாசம் மிக்க கடக ராசி அன்பர்களே! (அரசின் சலுகை)

சுக்கிரன் ஆக. 1ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் தருவார். தற்போது குரு ராசிக்கு 2ல் இருந்து நன்மை தந்து கொண்டு இருக்கிறார். ஆக. 2ல் குரு 3-ம் இடமான கன்னி ராசிக்கு செல்வதால் முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. ஆனாலும் அவரது பார்வை பலத்தால் இடையூறை உடைத்தெறிவீர்கள். புதன் ஜூலை 24 வரை குடும்ப பிரச்னையை ஏற்படுத்தலாம். உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு உருவாகலாம். சுக்கிரனால் மாத முற்பகுதியில் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஆக.1க்கு பிறகு அரசின் சலுகை கிடைக்கும். குடும்பத்தில் சுபவிஷயம் குறித்த பேச்சு நடக்கும். அதில் நல்ல முடிவும் கிடைக்கும். ஆக. 2,3 ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர்.

தொழில், வியாபாரத்தில் மாத முற்பகுதியில் அதிக லாபம் கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடந்த கால உழைப்பின் பயன் கிடைக்கப்பெறுவீர்கள். ஆக.1க்கு பிறகு வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.  அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஜூலை 24 க்குள் சிலர் இடமாற்றத்தைச் சந்திக்க நேரிடலாம். ஆக.1க்கு பிறகு குருவால்  பணிச்சுமைக்கு ஆளாகலாம்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.
அரசியல்வாதிகள் சீரான நிலையில் இருப்பர். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஆகலாம்.
மாணவர்கள் ஆக.1 வரை குருவால் சிறப்பான நிலை காணலாம். அதன் பிறகு சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும்.

விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்களில் விளைச்சல் பெருகும். கால்நடை மூலமும் அதிக வருவாயை எதிர்பார்க்கலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். கணவரின் ஆதரவு கிடைக்கும். அக்கம்பக்கத்தினரின் மத்தியில் மதிப்பு உயரும். பிறந்த வீட்டில் இருந்து சசீதனப் பொருட்கள் வரும். ஜூலை 20,21ல் ஆடம்பர பொருள் வாங்குவர்.
நல்ல நாள்: ஜூலை 18,19,20,21,27,28,29,30, ஆக. 2,3,7,8,14,15,16
கவன நாள்: ஜூலை 22,23 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,8  நிறம்: மஞ்சள், வெள்ளை

பரிகாரம்: தினமும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வாருங்கள். ஏழைகளுக்கு துவரை தானம் செய்வது நல்லது. ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு உதவி செய்யுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar