Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவிளக்கு பூஜை நடத்துவது ஏன்? அதிசயம்: கேதார்நாத்லிருந்து.. ராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் முக்கிய சிவாலயங்கள்! அதிசயம்: கேதார்நாத்லிருந்து.. ...
முதல் பக்கம் » துளிகள்
திருவிளக்கு போற்றி!
எழுத்தின் அளவு:
திருவிளக்கு போற்றி!

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2016
02:07

ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் திருவிளக்கு பூஜை நடத்துவார்கள். அப்போது சொல்வதற்கு இந்த திருவிளக்கு போற்றியை எடுத்துச் செல்லுங்கள்.

பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி
போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி
மூவுலகம் நிறைந்திருந்தாய் போற்றி
வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி
இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி
ஈரேழு உலகமும் ஈன்றாய் போற்றி
பிறர்வயமாகாப் பெற்றியாய் போற்றி
பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
பேரருட் கடலாம் பொருளே போற்றி.
முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி
மூவுலகும் தொழும் மூத்தோய் போற்றி
அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி
ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி
இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி
மங்கள நாயகி மாணி போற்றி
வளமை நல்கும் வல்லியே போற்றி
அறம்வளர் நாயகி அம்மே போற்றி
மின் ஒளி அம்மையாம் விளக்கே போற்றி.
மின் ஒளிப்பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
தையல் நாயகித் தாயே போற்றி
தொண்டர் அகத்தமர் துõமணி போற்றி
முச்சுடரின் முதல்வியே போற்றி
ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
சூளாமணி சுடரொளி போற்றி
இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி
அருள் பொழிந்து எம்மை ஆள்வோய் போற்றி
எளியவனுக்கு அறிவை அருள்வாய் போற்றி
இல்லக விளக்காம் இறைவியே போற்றி.
சுடரே விளக்காம் துõயோய் போற்றி
இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவி போற்றி
ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் போற்றி
அருமறைப் பொருளாம் ஆதி போற்றி
துõண்டு சுடரனைய ஜோதி போற்றி
ஜோதியே போற்றிச் சுடரே போற்றி
ஓதும் உள்ஒளி விளக்கே போற்றி
இருள்கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி
சொல்லக விளக்காம் ஜோதி போற்றி.
பலர்காண் பல்லக விளக்கே போற்றி
நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி
உலப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
உணர்வுசூழ் கடந்தோர் விளக்கே போற்றி
உடம்பெனும் மனையக விளக்கே போற்றி
உள்ளத்தகழி விளக்கே போற்றி
மடம்படும் உணர்நெய் விளக்கே போற்றி
உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி
இடம்படும் ஞானத்தீ விளக்கே போற்றி
நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி.
ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி
அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி
ஜோதியாய், உணர்வுமாகும் விளக்கே போற்றி
தில்லைப் பொதுநட விளக்கே போற்றி
கருணையே உணர்வுமாம் விளக்கே போற்றி
கற்பனை கடந்த ஜோதி போற்றி
அற்புதக் கோல விளக்கே போற்றி
அருமறைச் சிரத்து விளக்கே போற்றி
சிற்பர வியோம விளக்கே போற்றி
பொற்புடன் நடஞ்செய் விளக்கே போற்றி.
உள்ளத்திருவனை ஒழிப்பாய் போற்றி
கள்ளப்புலனைக் கரைப்பாய் போற்றி
உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
பெருகு அருள் சுரக்கும் பெருமான் போற்றி
இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி
அருவே உருவே அருவுருவே போற்றி
நந்தா விளக்கே நாயகியே போற்றி
செந்தாமரைத்தாள் தந்தாய் போற்றி
தீபமங்கள ஜோதீ போற்றி
மதிப்பவர் மனமணி விளக்கே போற்றி.
பாகம் பிரியா பராபரை போற்றி
ஆகம முடிமேல் அமர்ந்தாய் போற்றி
ஏகமாய் நடஞ்செய் எம்மான் போற்றி
ஊழி ஊழி உள்ளோய் போற்றி
ஆழியான் காணா ஆடியோய் போற்றி
ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி
அந்தமில் இன்பம் அருள்வாய் போற்றி
முந்தை வினை முடிப்பாய் போற்றி
பொங்கும் கீர்த்திப் பூரணியே போற்றி
தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி.
அருளே உருவாய் அமர்ந்தாய் போற்றி
இருநில மக்கள் இறைவி போற்றி
குருவென ஞானம் கொடுப்பாய் போற்றி
ஆறுதல் எமக்கிங்கு அளிப்பாய் போற்றி
தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி
பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
எத்திக்கும் துதிக்கும் எந்தாய் போற்றி
அஞ்சல் என்றருளும் அன்பே போற்றி
தஞ்சம் என்பவரை தாங்குவாய் போற்றி
ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி.
ஓங்காரத்து உள்ளொளி விளக்கே போற்றி
எல்லா உலகமும் ஆனாய் போற்றி
பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
புகழ்ச்சேவடி என் மேல் வைத்தாய் போற்றி
செல்வாய செல்வம் தருவாய் போற்றி
பூங்கழல் திருவிளக்கே போற்றி
உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
உயிர்களின் பசிப்பிணி ஒழிப்பாய் போற்றி
செல்வம் கல்வி சிறப்பருள் போற்றி
நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி.
விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி
நலமெலாம் உயிர்க்கு நல்குக போற்றி
தாயே நின்னருள் தருவாய் போற்றி
துõய நின்திருவடி தொழுதனம் போற்றி
போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி
போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி
போற்றி என் அன்பு பொலி விளக்கே போற்றி
போற்றி போற்றி திருவிளக்கே போற்றி.

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar