Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

 மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) குடும்பத்தில் குற்றால சாரல் உள்ளத்தில் உதகை பூக்கள் மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...  மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) மனைவி சொல்லே மந்திரம் கேட்டால் வாழ்வு இனித்திடும் மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (2.9.2017 முதல் 3.10.2018 வரை)
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) புன்னகை சிந்துவீங்க! புதுவாழ்வு பெறுவீங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2016
12:01

சாதனை படைக்கும் மனம் படைத்த ரிஷப ராசி அன்பர்களே!

குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 4ம் இடத்தில் இருந்து பல்வேறு இன்னலை தந்திருப்பார். அவர் குடும்பத்தில் பல பிரச்னைகளை உருவாக்கி இருப்பார். உறவினர்களிடையே வீண் விரோதம் வந்திருக்கும். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிணக்கால் வெறுப்பு கூட வந்திருக்கலாம். துõரத்து உறவினர் வகையில் விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்திருக்கலாம். சனிபகவான் மற்றும் ராகு, கேது சாதகமற்ற நிலையில் இருந்ததால் சிலருக்கு பிரச்னை எடுத்து சொல்ல முடியாத அளவுக்கு கூட இருந்திருக்கலாம். இந்த நிலையில், குரு பகவான் உங்கள் ராசிக்கு 5ம் இடமான கன்னி ராசிக்கு செல்கிறார். இது மிகவும் சிறப்பான அமைப்பாகும். 5ம் இடத்தில் குரு பகவான் இருக்கும்போது குடும்பத்தில் குதுõகலத்தை கொடுப்பார். இனி உங்கள் முகத்தில் புன்னகை தான். புதுவாழ்வு உங்களை தேடி வருகிறது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை உண்டாகும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். விரும்பத்தகாத காரணத்தால் பணத்தை வீணாகச் செலவு செய்தவர்கள் கூட, மனம் திருந்தி சேமிப்பில் கவனம் செலுத்துவர். நல்லவர் யார், தீயவர் யார் என்பதை இனம் காணும் தெளிவு பெறுவீர்கள். இதன் மூலம் வாழ்வில் வளம் காணலாம். குருவின் 5ம் இடத்துப்பார்வையும், 7ம் இடத்துப் பார்வையும் சாதகமாக இருப்பதால் கூடுதல் நன்மை கிடைக்கும்.

சனி பகவான் தற்போது 7ம் இடமான விருச்சிகத்தில் இருக்கிறார். பொதுவாக இந்த இடத்தில் இருக்கும் போது சனி குடும்பத்தில் பிரச்னையை உருவாக்குவார். தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு தொழில், பணி விஷயமாக வெளியூரில் தங்கவும் நேரிடும். நிழல் கிரகமான ராகு 4ம் இடமான சிம்ம ராசியில் இருப்பதால் அலைச்சல், குடும்ப பிரச்னை உருவாகலாம். கேது உங்கள் ராசிக்கு 10ம் இடமான கும்பத்தில் இருப்பதால் உடல் உபாதை ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் கேது பிற்பகுதியில் செயலில் வெற்றியை அளிப்பார். கடந்த காலம் நீங்கள் பட்ட எண்ணற்ற பிரச்னைகளுக்கு விடை கொடுக்கும் காலம் இது. படிப்படியாக வாழ்வில் நன்மை அதிகரிக்கும். முயற்சியில் இருந்த தடையனைத்தும் விலகும். புதிய முயற்சியும் எளிதாக நிறைவேறும். மண்ணெல்லாம் பொன்னாகும்; பொற்காலம் உண்டாகும் என்று சொல்லும் விதத்தில் பொருளாதாரத்தில் உயர்வு பெறுவீர்கள். நீண்ட கால ஆசை தற்போது பூர்த்தியாகும். வீடு, நிலம் போன்றவை வாங்கும் யோகமுண்டாகும். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடியான நிலை மறைந்து மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். கணவன், மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு விலகி நெருக்கம் உண்டாகும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். உறவினர் வகையில் இருந்த பிரச்னை மறையும். அவர்களால் நன்மையும் கிடைக்கும். தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி இனிதாக நிறைவேறும். நீண்டநாள் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் மழலை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். விருந்து, விழா என சென்று வர வாய்ப்புண்டு. உடல் உபாதை அனைத்தும் குணமாகும். மருத்துவச் செலவும் படிப்படியாக மறையும். மனதில் அமைதி எப்போதும் நிலைத்திருக்கும்.

தொழில், வியாபாரம்:
தொழிலதிபர்கள், வியாபாரிகள் எவ்வளவோ முயற்சித்தும் கடந்த காலத்தில் போதிய வருமானம் கிடைக்காமல் போயிருக்கும். ஊரை விட்டு ஊர் செல்லும் நிலையும் கூட சிலருக்கு ஏற்பட்டு இருக்கும். இவற்றுக்கு விடை கொடுக்கும் நல்ல காலம் நெருங்கி விட்டது. தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். தடை அனைத்தும் அடியோடு மறையும். போட்டியாளர்களால் தொல்லை சிறிதும் இருக்காது. அவர்கள் உங்களிடம் சரணடையும் சூழ்நிலை உருவாகும். புதிய வியாபாரம் நல்ல வளர்ச்சி பெறும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும்.

பணியாளர்கள்: பணியாளர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். வேலைப்பளு படிப்படியாகக் குறையும். வேலையில் இருந்த வெறுப்புணர்ச்சி அடியோடு மறையும். ஆர்வமுடன் பணியில் ஈடுபடுவீர்கள். திறமை பளிச்சிடுவதால் பதவி உயர்வு, சம்பள உயர்வு எளிதாக கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவும், ஆலோசனையும் வளர்ச்சிக்கு துணை நிற்கும். சக ஊழியர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கவும் வாய்ப்புண்டு. வேலை இன்றி இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். சிலர் பக்க தொழிலிலும் ஈடுபட்டு அதிக வருமானம் காண்பர்.

கலைஞர்கள்: கலைஞர்களுக்கு திறமைக்கு ஏற்ற புகழ் கிடைக்காமல் போயிருக்கலாம். இனி கவலை வேண்டாம். தட்டிப் பறிக்கப்பட்ட வாய்ப்பு தானே வலிய கிடைக்கும். புதிய ஒப்பந்தம் மூலம் ஆதாயம் தாராளமாக கிடைக்கும். நடிப்பு திறனில் கைதேர்ந்து விளங்குவீர்கள்.

அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள் சிறப்பான வளர்ச்சியுடன் காணப்படுவர். எதிர்பாராத பதவி கிடைக்கும். நல்ல பணப்புழக்கம் இருப்பதால் தொண்டர் நலனுக்காகச் செலவு செய்வீர்கள்.

விவசாயிகள்: வளர்ச்சியான பலன் கிடைக்கப் பெறுவர் அனைத்து மானாவாரி மற்றும் நெல், கோதுமை, கேழ்வரகு, பழவகைகள் போன்றவற்றில் நல்ல மகசூலும், அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றி பெறும். நவீன கருவிகள் மூலம் பணியை மேம்படுத்துவீர்கள். கூலித் தொழிலாளர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். சிலர் விளைபொருள் வர்த்தகத்திலும் ஈடுபட்டு அமோக லாபம் காண்பர். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும்.

மாணவர்கள்: கடந்த கல்வி ஆண்டில் சுமாரான நிலையில் தான் இருந்திருப்பீர்கள். ஆனால் இந்த ஆண்டு கல்வி வகுப்பில் முன்னணி மாணவராகச் சிறந்து விளங்குவீர்கள். விரும்பிய பாடப்பிரிவில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். போட்டி, பந்தயத்தில் பங்கேற்று பரிசும், பாராட்டும் பெறுவீர்கள்.

பெண்கள்: பெண்கள் வாழ்க்கையில் எல்லையில்லா மகிழ்ச்சி காண்பர். விருப்பம் போல புத்தாடை, அணிகலன்கள், ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறுவர். வேலைக்கு செல்வோர் மற்றும் தொழில் நடத்தும் பெண்கள் வளர்ச்சி பெறுவர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும்.

பரிகாரம்: நிழல் கிரகங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். பிரதோஷ வேளையில் நரசிம்மரை வழிபட்டு நன்மை பெறுங்கள். சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (2.9.2017 முதல் 3.10.2018 வரை) »
temple
நல்லவர்களின் நட்பை விரும்பும் மேஷ ராசி அன்பர்களே!

குரு பகவான் 6-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்திற்கு ... மேலும்
 
temple
விடாமுயற்சியால் வெற்றி காணும் ரிஷப ராசி அன்பர்களே!

குருபகவான் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து 6-ம் ... மேலும்
 
temple
அனைவரிடமும் அன்பு காட்டும் மிதுன ராசி அன்பர்களே!

குருபகவான்  ராசிக்கு 5-ம் இடத்துக்கு செல்வது ... மேலும்
 
temple
குறிக்கோளுடன் பணியாற்றி வரும் கடக ராசி அன்பர்களே!
 
குருபகவான் ராசிக்கு 4-ம் இடமான துலாம் ... மேலும்
 
temple
நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்ளும்  சிம்ம ராசி அன்பர்களே!

குருபகவான்  ராசிக்கு 3-ம் இடமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.