Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்). திருநிறைச் செல்விகளுக்கு திறந்தாச்சு திருமண வாசல்! கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்). ... கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) திட்டாமல் கொட்டாமல் உங்களை பார்த்துக்குவார் கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (2.9.2017 முதல் 3.10.2018 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1). அந்த நிலாவுலே டென்ட் அடிக்க நீங்க ரெடியா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2016
12:07

தொழிலைத் தெய்வமாக மதிக்கும் சிம்மராசி அன்பர்களே!

கடந்த சில ஆண்டுகளாக குரு பகவான் சாதகமற்ற நிலையில் இருந்தார். அதே போல் சனி பகவான், ராகுகேது ஆகியோரும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எதிர்மறைப் பலன் அதிகம் நடந்திருக்கும். குருவின் பார்வைகளால் ஓரளவு நன்மை கிடைத்திருக்கலாம். இந்த நிலையில் குருபகவான் 2ம் இடமான கன்னி ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான அம்சம். இது வரை குடும்பத்தில் நிலவி வந்த குழப்பத்திற்கு விடுதலை கிடைக்கும். குடும்பம், தொழில் என அனைத்திலும் வானளாவிய வளர்ச்சி உண்டாகும். ‘அந்த நிலாவில் கூட டென்ட் அடித்து தங்கலாமோ’ என்ற எண்ணுமளவுக்கு வளர்ச்சியின் அளவு இருக்கும். ராகு உங்கள் ராசியில் இருக்கிறார். இது சுமாரான நிலையே. இதனால் வீண் அலைச்சல் உண்டாவதை தடுக்க முடியாது. உழைப்பிற்கேற்ப ஆதாயமும் இல்லாமல் போகலாம். கேது 7ம் இடமான கும்ப ராசியைப் பார்க்கிறார். இது உகந்த இடம் என்று சொல்ல முடியாது. மனைவி வகையில் பிரச்னை ஏற்படலாம்.

மன வேதனையும் சிலருக்கு உண்டாகலாம். சனிபகவான் தற்போது 4ம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. பொதுவாக 4ம் இடத்தில் இருக்கும் போது சனிபகவான் குடும்ப பிரச்னையைக் கொடுப்பார். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலையும் உருவாகும். தாயை பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். இவை எல்லாம் பொதுவான பலன்கள் மட்டுமே. இதைக் கண்டு பயம் கொள்ள வேண்டாம். சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3ம் இடத்துப் பார்வை சிறப்பான இடத்தில் விழுகிறது. இது மிகவும் சாதகமான நிலை. அவர் பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தருவார். இது வரை எந்த முக்கிய கிரகங்களுமே சாதகமாக இல்லாமல் இருந்த நிலை மாறி இப்போது குருபகவான் நன்மை தர காத்திருக்கிறார். பொருளாதாரம் அதிகரிப்பதால் தேவையான பொருட்களை வாங்கி குவிக்கலாம். சமூகத்தின் மத்தியில் மதிப்பு மரியாதை மேம்படும். உங்களை சுற்றி இருப்பவர்கள் ஓகோ என்று உங்களை புகழ்வார்கள்.  கேதுவால் இருந்து வரும் பிரச்னைக்கு குருபகவானால் தீர்வு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு மேம்படும். உறவினர்கள் மத்தியில் இருந்த கருத்துவேறுபாடு மறையும். விருந்து, விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். பல ஆண்டுகளாக தடைப்பட்ட திருமணம் இனிதே நிறைவேறும். புதிய வீடு, சொத்து போன்றவை வாங்கலாம். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தோடு புண்ணியத் தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்புண்டு. உடல்நலத்தை பொறுத்தவரை ஆரோக்கியம் மேம்படும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும்.

தொழில், வியாபாரம்:  தொழிலதிபர்கள், வியாபாரிகள் இதற்கு முன் சமாளிக்க முடியாத அளவுக்கு பிரச்னைகளைச் சந்தித்திருக்கலாம். உழைப்புக்கு ஏற்ற வருமானமும் கிடைக்காமல் போயிருக்கும். இப்படிப்பட்ட பிற்போக்கான நிலை இனி இருக்காது. லாபம் படிப்படியாக அதிகரிக்கும். புதிய வியாபார முயற்சியும் நல்ல அனுகூலத்தைக் கொடுக்கும். வியாபாரத்தை விரிவுப்படுத்தும் எண்ணம் நிறைவேறும். போட்டியாளர்களால் இடையூறு அவ்வப்போது வந்தாலும், அதை முறியடித்து இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கி விடுவீர்கள். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டுவந்தவர்கள் அவர்கள் பிடியில் இருந்து முற்றிலும் விடுபடுவர். பெண்கள் வகையிலும் இனி பிரச்னை இருக்காது. கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். சிலர் பிறரின் கட்டுப்பாட்டில் தொழில் செய்ய வேண்டியதிருக்கும். ஆனால் அதிலும் வருமானம் குறைவின்றிக் கிடைக்கும்.

பணியாளர்கள் : பணியாளர்கள் முன்னேற்ற பாதையில் தொடர்ந்து செல்வர். கடந்த காலங்களில் இருந்து வந்த பிற்போக்கான நிலை மறையும். சுறுசுறுப்புடன் பணியில்
ஈடுபடுவீர்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் தங்கள் தவறை உணர்ந்து உங்களிடம் சரணடைவர். உங்கள் ஆற்றலை மேம்படுத்துவதன் மூலம் நல்ல பதவி கிடைக்கப் பெறுவீர்கள். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர வாய்ப்புண்டாகும். பணியிடத்தில் செல்வாக்கும், பெருமையும் கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கப் பெறுவீர்கள். வேலை இன்றி இருப்பவர்கள் முயற்சி செய்தால் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமுடன் இருக்கவும்.

கலைஞர்கள்:  கலைஞர்களுக்கு எளிதாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த வகையில் புகழ், பாராட்டு கிடைக்கப் பெறுவர். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகள்:  அரசியல்வாதிகள் வளர்முகமாகவே காணப்படுவர். தொண்டர்
மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் ஆதரவோடு மக்கள் பணியில் ஈடுபடுவீர்கள். தலைமையின் நம்பிக்கைக்கு உரியவராகச் செயல்படுவர். மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படுவீர்கள்.

விவசாயிகள்: நல்ல வளத்தோடு காணப்படுவர். விளைச்சல் பலமடங்கு அதிகரிக்கும். நெல், கோதுமை, கேழ்வரகு, கடலை மற்றும் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் உண்டாகும். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. சிலர்  நவீன  விவசாயத்தை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பர். கால்நடைகள் வளர்ப்பில் நல்ல லாபம் கிடைக்கும். கூலி வேலை செய்பவர்கள் சுய தொழிலில் இறங்கும் நல்ல காலம் உருவாகும்.

மாணவர்கள்: மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு சுமாராகவே இருந்திருக்கும். அதிக சிரத்தை எடுத்து படித்து முன்னேறி இருப்பீர்கள். ஆனால் இந்த கல்வி ஆண்டு உங்களுக்கு சிறப்பானதாக அமையும். பாடங்கள் எளிதில் புரிந்து கொள்வீர்கள். தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வகுப்பில் முன்னணி மாணவராகத் திகழ்வீர்கள்.
சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பை பெறுவர். போட்டி பந்தயங்களில் அடிக்கடி பங்கேற்கவும், வெற்றி பெறவும் வாய்ப்புண்டாகும்.

பெண்கள்: பெண்கள் திருப்திகரமாக வாழ்வு நடத்துவர். கணவர் மற்றும் குழந்தைகளால் வீட்டில் குதுõகலம் ஏற்படும். உறவினர் மத்தியில் தனி கவுரவம் உண்டாகும்.
பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். பிறந்த வீட்டிலிருந்து பொன், பொருள்
வந்து சேரும். வேலை செய்யும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். எதிர்பார்த்த சலுகை, பதவி கிடைக்கப் பெறுவர். மனம் போல புத்தாடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வர்.

பரிகாரம்: குரு பெயர்ச்சியால் கிடைக்கவுள்ள பலன்களை அதிகப்படுத்திக்கொள்ள சாஸ்தாவை வழிபடுங்கள். ஏழைகளுக்கு ஆடை தானம் செய்யலாம் திருநாகேஸ்வரம்,
காளஹஸ்தி ஆகிய தலங்களுக்கு சென்று வழிபடுங்கள்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (2.9.2017 முதல் 3.10.2018 வரை) »
temple
நல்லவர்களின் நட்பை விரும்பும் மேஷ ராசி அன்பர்களே!

குரு பகவான் 6-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்திற்கு ... மேலும்
 
temple
விடாமுயற்சியால் வெற்றி காணும் ரிஷப ராசி அன்பர்களே!

குருபகவான் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து 6-ம் ... மேலும்
 
temple
அனைவரிடமும் அன்பு காட்டும் மிதுன ராசி அன்பர்களே!

குருபகவான்  ராசிக்கு 5-ம் இடத்துக்கு செல்வது ... மேலும்
 
temple
குறிக்கோளுடன் பணியாற்றி வரும் கடக ராசி அன்பர்களே!
 
குருபகவான் ராசிக்கு 4-ம் இடமான துலாம் ... மேலும்
 
temple
நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்ளும்  சிம்ம ராசி அன்பர்களே!

குருபகவான்  ராசிக்கு 3-ம் இடமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.