Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1). அந்த நிலாவுலே டென்ட் அடிக்க நீங்க ரெடியா? சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1). அந்த ... துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) (ஆண்டவன் தருவான் வரம் அவனுக்கே கிடைக்காத சுகம் துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (2.9.2017 முதல் 3.10.2018 வரை)
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) திட்டாமல் கொட்டாமல் உங்களை பார்த்துக்குவார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2016
12:08

நம்பகத்தன்மை கொண்ட கன்னி ராசி அன்பர்களே!

குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில் இருந்தார். அவர் பல்வேறு இடையூறுகளை கொடுத்து இருப்பார். பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு இருக்கும்.
தற்போது குரு பகவான் ராசிக்கு அடியெடுத்து வைத்துள்ளார். இது அவ்வளவு சிறப்பானதல்ல. ஆனாலும் அவர் 12ம் இடத்தில் இருந்தது போல கெடுபலன் தர மாட்டார். பொதுவாக குரு 1ம் இடத்தில் இருக்கும்போது கலகம் விரோதம் வரும் என்றும், மந்த நிலை ஏற்படும் என்றும் கூறப்படுவதுண்டு. அதற்காக கவலைப்பட வேண்டாம். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரின் அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. குருவின் பார்வைக்கு கோடி நன்மை உண்டு. அவர் தன் 5,7,9 ஆகிய மூன்று பார்வைகளும் சாதகமாக இருப்பது விசேஷம். இதனால் உங்களுக்கு வரும் இடையூறுகளை முறியடித்து வெற்றிக்கு வழிவகுப்பார். அந்த வகையில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் இருக்கிறார். இது உன்னதமான அமைப்பாகும். முயற்சி அனைத்தையும் வெற்றி அடையச் செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் சிறந்தோங்க செய்வார். நிழல் கிரகமான கேது 6ம் இடமான கும்பத்தில் இருக்கிறார். இதனால் பின்தங்கிய நிலை அடியோடு மறையும். பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும்.

செயலில் வெற்றி உண்டாகும். இன்னொரு நிழல் கிரகமான ராகு 12ம் இடமான சிம்மத்தில் இருக்கிறார். இங்கு அவர் பொருள் விரயமும், துõரதேச பயணமும் உண்டாக வாய்ப்புண்டு. கேது, சனி பகவானின் பலம் மட்டுமின்றி குரு பகவானின் பார்வை பலத்தாலும் வாழ்வில் நன்மை அதிகரிக்கும். எதிலும் தீர யோசித்து தெளிவான முடிவு எடுப்பீர்கள். முயற்சியில் குறுக்கிடும் தடைகளை, குரு தன் பார்வையால் தடுத்து நிறுத்துவார். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும். 5ம் இடத்துப் பார்வையால் குடும்பத்தில் குதுõகலத்தைத் கொடுப்பார். பெண்களால் மேன்மை கிடைக்கும். 7ம் இடத்துப் பார்வையால் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிப்பதால் தேவை பூர்த்தியாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். 9ம் இடத்துப் பார்வையால் மனதில் உற்சாகம் பிறக்கும். தம்பதியர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் விலகியவர்கள் கூட உங்கள் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம். உடல்நலம் சிறப்பாக இருப்பதால் மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். மொத்தத்தில், அவரது பார்வை பலத்தால் உங்களை திட்டாமல், கொட்டாமல் அன்பாக பார்த்துக் கொள்வார் குரு. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். கடந்த சில மாதங்களாக தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனிதே கை கூடும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புண்டாகும்.

தொழில், வியாபாரம்: தொழிலதிபர்கள், வியாபாரிகள் நல்ல வளர்ச்சி நிலையில் இருப்பர். லாபம் படிப்படியாக அதிகரிக்கும். தொழிலாளர் ஒத்துழைப்பு நல்ல முறையில் கிடைக்கும். புதிய தொழில் முயற்சியும் வெற்றி பெறும். போட்டியாளர் வகையில் இருந்த இடையூறு அடியோடு மறையும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். தொழில் ரீதியான வெளியூர், வெளிநாட்டுப் பயணம் அடிக்கடி செல்ல நேரிடும்.

பணியாளர்கள்: பணியாளர்கள் ஆறுதலான முன்னேற்றத்தை காண்பர். கடந்த காலத்தை விட நன்மை மேலோங்கும். உழைப்பு அதிகமாக தேவைப்பட்டாலும், அதற்கான ஆதாய பலனும் கிடைக்கும். ஈடுபடும் வேலையில் மனநிறைவு காண்பீர்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவைக்கு தடையேதும் இல்லை. சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு அலைச்சல் இருக்கும். வேலையின்றி இருப்பவர்கள் விடாமுயற்சியால் புதிய பணியில் சேரும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவர்.

கலைஞர்கள்: கலைஞர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். புதிய ஒப்பந்தங்கள் தடையின்றி கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் பெற வாய்ப்புண்டு. எதிர்பார்த்த புகழ், பாராட்டு போன்றவை கிடைக்கும். சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்ப்பு நிறைவேற சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். ஆனால் பணப்புழக்கத்தில் குறை இருக்காது. தலைமையின் சொல்லுக்கு கட்டுப்படுவது வளர்ச்சிக்கு வழி வகுக்கும். தொண்டர்களின் நலனுக்காக பணம் செலவழிக்க நேரிடும்.

விவசாயிகள்: விவசாயிகள் போதுமான வருமானம் காணலாம். சிலர் நவீன உத்தியைக் கையாண்டு அதிக பலன் பெறுவர். கரும்பு, எள், பனை போன்ற பயிர் வகைகளில் நல்ல மகசூல் கிடைக்கும். நெல், கோதுமை, கொண்டை கடலை போன்ற பயிர் வகைகளில் ஓரளவே வருமானம்  கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப்போகும். வழக்கு விவகாரத்தில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். கைவிட்டு போன சொத்து மீண்டும் கிடைக்கும்.

மாணவர்கள்: கடந்த ஆண்டை விட நற்பலன்களை பெறலாம். வரும் கல்வி ஆண்டு
சிறப்பானதாக அமையும். அக்கறையுடன் படித்தால் அதற்கான பலன் நிச்சயமாக கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று நடப்பது அவசியம். போட்டி, பந்தயத்தில் விழிப்புடன் ஈடுபட்டால் பரிசு வெல்ல முடியும்.

பெண்கள்:  பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.  கணவரின் அன்பு கிடைக்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டவும். குடும்பச் செலவுக்கான பணம் கிடைக்கப் பெறுவர். குடும்பத்தினரின் அன்பைக் கண்டு மனம் நெகிழ்வீர்கள். தோழியரின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்தியை வழிபட்டு கடலை தானம் செய்யலாம். சிவபெருமானை வழிபடுவது நன்மையளிக்கும். காளியம்மன் வழிபாடு வாழ்வில் முன்னேற்றம் உண்டாக்கும். விநாயகரையும் வழிபடுங்கள்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (2.9.2017 முதல் 3.10.2018 வரை) »
temple
நல்லவர்களின் நட்பை விரும்பும் மேஷ ராசி அன்பர்களே!

குரு பகவான் 6-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்திற்கு ... மேலும்
 
temple
விடாமுயற்சியால் வெற்றி காணும் ரிஷப ராசி அன்பர்களே!

குருபகவான் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து 6-ம் ... மேலும்
 
temple
அனைவரிடமும் அன்பு காட்டும் மிதுன ராசி அன்பர்களே!

குருபகவான்  ராசிக்கு 5-ம் இடத்துக்கு செல்வது ... மேலும்
 
temple
குறிக்கோளுடன் பணியாற்றி வரும் கடக ராசி அன்பர்களே!
 
குருபகவான் ராசிக்கு 4-ம் இடமான துலாம் ... மேலும்
 
temple
நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்ளும்  சிம்ம ராசி அன்பர்களே!

குருபகவான்  ராசிக்கு 3-ம் இடமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.