Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இறைவனின் கல்கி அவதாரம் எப்போது? இறைவனின் கல்கி அவதாரம் எப்போது? வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா? வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் ...
முதல் பக்கம் » துளிகள்
புரட்டாசி மாத பலனும் பரிகாரமும்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 செப்
2011
17:05

மேஷம் (உடல்நலனில் கவனம்)

முயற்சி திருவினையாக்கும் என்பதை பின்பற்றும் மேஷராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் பலம் குறைந்து நான்காம் இடத்தில் உள்ளார். நவக்கிரகங்களில் குரு, சுக்கிரனை தவிர பிற கிரகங்கள் கோள் சார ரீதியாக ஆறாம் இடத்தில் அமர்வது சிறந்த பலனைத்தரும். இந்த மாதம் சூரியன், புதன், சனி ஆறில் அனுகூலமாக உள்ளனர். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆன்மிகத்தில் நம்பிக்கை உண்டாகும். தம்பி, தங்கைகளுக்கான சுபநிகழ்ச்சி இனிதாக நிறைவேறும். வீடு, வாகன வகையில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை கொள்வது அவசியம். புத்திரர் சுயதிறமை வெளிப்படுத்துவோடு, கல்வியிலும் வளர்ச்சி பெறுவர்.  பூர்வசொத்தில் எதிர்பார்த்த பணவருமானம் வரும். உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. சீரான சிகிச்சை முறை உடல்நலத்தை பாதுகாக்கும். பணம் கொடுக்கல், வாங்கல் ஓரளவு சாதகமாக அமையும். தம்பதியர் ஒற்றுமையுடன் செயல்படுவதால் மட்டுமே குடும்ப வாழ்வு சீராக அமையும். தொழிலதிபர்கள் குறுக்கீடுகளை சரிசெய்து தொழில் வளர்ச்சியில் சீரான முன்னேற்றம் காண்பர். வியாபாரிகள் சந்தை வாய்ப்புக்களை முறையாகப் பயன்படுத்தி விற்பனை இலக்கை எட்டுவர். பணியாளர்கள் நேர்த்தியாக செயல்பட்டு நிர்வாகத்தினரிடம் நற்பெயர் பெறுவர். எதிர்பார்த்த சலுகை பயன்கள் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் நிலுவைப் பணியை முடித்து நெருக்கடியில் இருந்து மீள்வர். நிர்வாகத்திடம் நற்பெயரும் வரவேண்டிய சலுகைப்பயனும் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் சொல்லை மதித்து நடப்பதால் மட்டுமே மகிழ்ச்சிகரமான வாழ்க்கை நடத்த முடியும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் புதிய சீர்திருத்தங்களை உருவாக்குவர். தொழில்வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த வருமானம், புதிய பொறுப்பு கிடைக்கும் வாய்ப்புண்டு. விவசாயிகள் விளைச்சல், கால்நடை வளர்ப்பில் நல்ல லாபம் காண்பர். மாணவர்கள் படிப்பில் தரதேர்ச்சி பெறுவர். விளையாட்டு பயிற்சியில் ஈடுபடும்போது கவனம் தேவை.

பரிகாரம்: சிவபெருமானை வழிபடுவதால் தொழிலில் வளர்ச்சியும், குடும்பத்தில் அமைதியும் நிலைக்கும்.
உஷார் நாள்: 1.10.11 காலை 6.16 மணி முதல் 3.10.11 காலை 9.41 மணி வரை
வெற்றி நாள்: செப்.20, 21, 22
நிறம்: வெள்ளை, ஆரஞ்ச்         எண்: 2, 3

ரிஷபம்  (அந்தஸ்து அதிகரிக்கும்)

நல்ல எண்ணமும் மன உறுதியும் கொண்ட ரிஷபராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் அனுகூல இடமான மூன்றாம் இடத்தில் உள்ளார். செவ்வாய் நீசம் பெற்று பலம் குறைந்தாலும் ராசியில் உள்ள நட்பு கிரகமான கேதுவின் மூன்றாம் பார்வையை பெறுகிறார். இந்த மாதம் அனுகூல பலன் தரும் கிரகமாக நீசம் பெற்ற சுக்கிரன் செயல்படுகிறார்.  சமூகத்தில் அந்தஸ்து மிக்க மனிதராக வலம் வருவீர்கள். இடம், பொருள் அறிந்து பேசுவது அவசியம்.  எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். முருகப்பெருமானின் அருள் பூரணமாக உங்களுக்கு கிடைக்கும். வீடு, வாகனத்தில் முக்கிய பராமரிப்பு பணிகளை நிறைவேற்றுவீர்கள். புத்திரர்கள் ஆடம்பரச் செலவில் நாட்டம் கொள்வர். ஒவ்வாத உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செயல்பட்டு நல்அன்பு பாராட்டுவர்.  நண்பர்களின் ஆலோசனையும் தகுந்த நேரத்தில் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பொருளின் தரம், உற்பத்தியை உயர்த்தி வளர்ச்சி காண்பர். தொழில்ரீதியாக நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வர். பணியாளர்கள் ஒருமுகத் தன்மையுடன் செயல்படுவதால் மட்டுமே பணியில் குளறுபடி வராத நன்னிலை உண்டாகும். வியாபாரிகள் அளவான மூலதனத்துடன் கடின உழைப்பால் விற்பனை இலக்கை அடைவர்.  பணிபுரியும் பெண்கள் பணியிடத்தில் உருவாகிற மாறுபட்ட சூழ்நிலையில் இருந்து விலகி செயல்படுவது நல்லது. குடும்ப பெண்கள் கணவரின் நல் அன்பும் சீரான பணவசதியும் கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுமானவரை ரொக்கத்திற்கு பொருள் விற்பது நல்லது.  விவசாயிகளுக்கு சராசரி மகசூல் கிடைக்கும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிப்பதால் மட்டுமே தரதேர்ச்சி உண்டாகும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் செயலில் வெற்றியும் எதிர்பார்த்த பணவரவும் கிடைக்கும்.
உஷார் நாள்: 3.10.11 காலை 9.41 மணி முதல் 5.10.11 பிற்பகல் 2.56 மணி வரை
வெற்றி நாள்: செப்.23, 24
நிறம்: சந்தனம், பச்சை   எண்: 5, 6

மிதுனம் (உடல் ஆரோக்கியம்)

செய்யும் செயலில் புதுமையைப் புகுத்தும் மிதுனராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் மாதத்தின் பெரும்பாலான நாட்கள் தன் சொந்த வீட்டில் உச்ச பலத்துடன் உள்ளார். கூடுதல் அனுகூல பலன் தரும்
கிரகங்களாக சுக்கிரன், குரு, ராகு செயல்படுகின்றனர். உங்களின் சுய கவுரவத்தை உயர்த்த தேவையான பணிபுரிவீர்கள். செயல்பாட்டுத்திறன் அதிகரிக்கும். வீடு, வாகனத்தில் தேவையான வளர்ச்சி மாற்றம் செய்வீர்கள். புத்திரர் நல்லவிதமாக படித்து தரதேர்ச்சி காண்பர்.  பூர்வ சொத்தில் கிடைக்கிற வருமானத்தால் பழையகடன் அடைபடும். உடலில் ஆரோக்கியம் பலம் பெறும். உங்களிடம் பகைமை பாராட்டியவர்கூட வலியவந்து பழகுவதோடு, தங்களின் செயலுக்காக மனம் வருந்துவர்.  தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்பு, பாசத்துடன் நடந்துகொள்வர். தொழிலதிபர்கள் புதிய நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தியில் வளர்ச்சி நிலை காண்பர். பணவரவு சராசரியை விட அதிகரிக்கும். பணியாளர்கள் நண்பர்களின் ஆலோசனை, உதவியால் பணியில் அதிக ஈடுபாடு கொள்வர்.  வியாபாரிகள் கூடுதல் முதலீட்டில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வர். வாடிக்கையாளர்களின் ஆதரவோடு விற்பனை சிறப்பாக அமையும்.  பணிபுரியும் பெண்கள் ஒருமுகத் தன்மையுடன் செயல்பட்டு பணியிலக்கை பூர்த்தி செய்வர்.  குடும்ப பெண்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வர். குடும்ப பாசத்துடன் இருக்கும் உங்கள் செயலை உறவினர் பாராட்டுவர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து அதிக பணவரவு காண்பர். அரசியல்வாதிகள் பொது விவகாரங்களில் கடுமையான போக்கை குறைத்துக் கொள்வது நல்லது. விவசாயிகளுக்கு அளவான மகசூலும், திட்டமிட்ட பணவரவும் உண்டாகும். மாணவர்கள் ஆர்வமுடன் படித்து படிப்பில் நல்ல தரதேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: தெட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் வாழ்வில் குறுக்கிடும் துன்பம் நீங்கி வாழ்வில் இன்பம் மேலோங்கும்.
உஷார் நாள்: 5.10.11 பிற்பகல் 2.56 மணி முதல் 8.10.11 இரவு 10.31 மணி வரை
வெற்றி நாள்: செப். 25, 26
நிறம்: நீலம், சிவப்பு    எண்: 1, 8

கடகம் (எதிர்பார்ப்பு நிறைவேறும்)

திறமையை வளர்த்துக்கொள்வதில் ஆர்வம் கொண்ட கடகராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மாத துவக்கத்தில் சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். தன ஸ்தான கிரகம் சூரியன் அனுகூலமாக சனி, சுக்கிரனுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். இதனால் உங்களின் செயல் புதுப்பொலிவு பெறும். குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சி நடத்த அனுகூலம் உண்டு. உங்களின் எதிர்பார்ப்பு அனைத்தும் இனிதாக நிறைவேறும். வீடு, வாகன வகையில் பெறுகிற வசதி திருப்திகரமாக இருக்கும். புத்திரர் தங்களின் படிப்பு, செயல்திறனில் தடுமாற்றம் கொள்வர்.  நண்பர்களின் ஆலோசனையும், உதவியும் உங்கள் மனதிற்கு நம்பிக்கை தரும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் யோகா, உடற்பயிற்சி பணிகளை மேற்கொள்வீர்கள். தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியைப் பெருக்குவர்.  தொழிலதிபர்கள்,தொழிலாளர்களின் தேவையை நிறைவேற்றி உற்பத்தியை உயர்த்துவர். பணியாளர்கள் பணியிடத்தில் சுமூகமான சூழல்  அமையப்பெறுவர். பணியிலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றி மகிழ்வர். சலுகைப்பயன் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வியாபாரிகள் சந்தைப் போட்டியை திறம்பட சமாளித்து விற்பனையை உயர்த்துவர். தாராள பணவரவுடன் நிலுவைப்பணமும் வந்துசேரும். பணிபுரியும் பெண்கள் நிலுவைப் பணியை நிறைவேற்றி நன்மதிப்பு பெறுவர். வெகுநாளாக எதிர்பார்த்திருந்த சலுகைப்பயன்கள் வந்துசேரும். குடும்ப பெண்கள் கணவரின் நன்மதிப்பை பெறும் வகையில் நடந்துகொள்வர். வீண் செலவைக் குறைத்துக் கொண்டு சேமிப்பை உயர்த்துவீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தியை பெருக்கவும், புதிய சந்தை வாய்ப்புக்களை அறிவதிலும் கவனம் கொள்வர். வளர்ச்சிப்பணிக்கான நிதியுதவி கிடைக்கும். அரசியல்வாதிகள் புதிய பதவி, பொறுப்பு கிடைக்கப் பெறுவர். மக்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலும், அதற்கேற்ற லாபமும் கிடைக்கும். மாணவர்கள் பெற்றோரின் அறிவுரைகளை ஏற்று படிப்பில் சிறந்து விளங்குவர். எதிர்பார்த்த தேர்ச்சி கிடைக்கும்.

பரிகாரம்:  துர்க்கை அம்மனை வழிபடுவதால் வாழ்வில் நல்ல வளர்ச்சியும் சிறப்பான பணவரவும் உண்டாகும்.
உஷார் நாள்: 8.10.11 இரவு 10.31 மணி முதல் 10.10.11 காலை 8.28 மணி வரை
வெற்றி நாள்: செப். 27, 28
நிறம்: வெள்ளை, வாடாமல்லி    எண்: 1, 9

சிம்மம் (பிள்ளைகளால் பெருமை)

கடின உழைப்புக்கு இலக்கணமாகத் திகழும் சிம்மராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சூரியன் அனுகூலக் குறைவான இரண்டாம் இடத்தில் சனி, புதன், சுக்கிரனுடன் உள்ளார். நவக்கிரகங்களில் இந்த மாதம் குரு, சுக்கிரன் மட்டுமே கூடுதல் நற்பலன் வழங்குவர். நல்லவர்களின் ஆலோசனையும், உங்களின் நேர்மையான செயல்பாடும் உங்கள் வெற்றிக்கு காரணிகளாக அமையும். பேச்சில் கடுமை ஏற்பட வாய்ப்புண்டு. நிதானத்தைப் பின்பற்றுவது நல்லது. வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம். புத்திரர் தங்களுக்கான பொறுப்பை உணர்ந்து அக்கறையுடன் படிப்பர். அவர்களின் செயல்பாடு கண்டு சந்தோஷம் அடைவீர்கள். உடல்நலம் பேணுவதில் அக்கறை குறையும். அவ்வப்போது உடலில் சில தொந்தரவு தலைதூக்கலாம் கவனம். தம்பதியர் குடும்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவர். தொழிலதிபர்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்திப்பணிகளைத் திறம்பட மேற்கொள்வர். தொழிலாளர் நலனில் அக்கறை பிறக்கும். புதிய ஒப்பந்தங்களை பெறுவதில் இருந்த தடை விலகும். பணியாளர்கள் பணியிட சூழ்நிலையை கவனத்தில் கொண்டு பொறுப்புணர்வுடன் செயல்படுவர். பணி சார்ந்த குறைபாட்டை போக்கி நற்பெயர் காண்பர். வியாபாரிகள் சந்தையில் கூடுதல் போட்டியை எதிர்கொள்ள நேரிடும். சீரான விற்பனை, பணவரவும் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் கூடுதல் பணிச்சுமைக்கு உட்பட்டாலும் உற்சாகத்துடன் செயல்பட்டு பணி இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள் வீட்டின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு செயல்படுவர். குடும்பச்செலவுக்கு சீரான பணவசதி கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான பணவரவு என்கிற நிலையை அடைவர். அரயல்வாதிகள் தங்களின் கடந்தகால நற்பெயருக்கு குறை வராத அளவிற்கு செயல்படுவது நல்லது. விவசாயிகளுக்கு அளவான மகசூல், கால்நடை வளர்ப்பில் சீரான வருமானம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனச்சிதறல் கொள்வர். பெற்றோரின் அறிவுரையை ஏற்பது அவசியம்.

பரிகாரம்: ஏழுமலையானை வழிபடுவதால் தொழிலில் வளர்ச்சியும் உடல்நிலையில் ஆரோக்கியமும் உண்டாகும்.
உஷார் நாள்: 10.10.11 காலை 8.28 மணி முதல் 12.10.11 இரவு 7.56 மணி வரை
வெற்றி நாள்: செப். 29, 30
நிறம்: வெள்ளை, மஞ்சள்   எண்: 3, 6

கன்னி (யோகம் வந்தாச்சு)

நேர்த்தியான செயல்களால் பிறரிடம் பாராட்டு பெறும் கன்னிராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் ஜென்ம ராசியில் மாறுபட்ட குணத்துடன் அமர்வு பெற்றுள்ளார். இதே இடத்தில் சூரியன், சுக்கிரன், சனி உள்ளனர். இருப்பினும் ராசிக்கு தர்மகர்ம அதிபதிகளான சுக்கிரன், புதன் சேர்க்கை உள்ளது. இதனால் தர்மகர்ம அதிபதி யோகத்தின் பலனை பெற்று மகிழ்வீர்கள். மனதில் புதிய நம்பிக்கையும் உற்சாகமும் பிறக்கும். வாழ்வில் முன்னேற ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். வீடு, வாகனத்தில் கிடைக்கிற வசதிகளை முறையாகப் பயன்படுத்துவது போதுமானது. தாய்வழி உறவினர்களிடம் பழைய விவகாரம் பேச வேண்டாம். புத்திரர் உங்களின் சிரமங்களை சரி செய்ய தங்களால் முடிந்த உதவிகளைச் செய்வர்.  உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். தம்பதியர் அன்பு, பாசத்துடன் செயல்படுவர். குடும்பத்தில் அமைதி நிலைத்திருக்கும். தொழிலதிபர்கள் உற்பத்தி குறைகளை சரிப்படுத்தி முன்னேற்றப்பாதையில் கால் பதிப்பர். பணவரவு சீராகும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்தித்தாலும் அதற்கேற்ற வருமானம் காண்பர். வியாபாரிகள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பினால் விற்பனையை நடத்தி லாபத்தை உயர்த்துவர். பணிபுரியும் பெண்கள் பணியில் இருந்த குறைபாடுகளை கவனத்துடன் சரிசெய்ய முற்படுவர்.  குடும்ப பெண்கள் கணவரின் மனநிலை அறிந்து செயல்படுவர். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தியாகும்.  சுயதொழில் புரியும் பெண்கள் எதிர்பார்ப்பை விட கூடுதல் விற்பனை, பணவரவு என்று அனுகூலம் காண்பர். அரசியல்வாதிகள் தங்கள் பதவியால் மக்கள் மத்தியில் செல்வாக்கு காண்பர். ஆதரவாளர்களின் ஆதரவும் கிடைக்கும். விவசாயிகளுக்கு சராசரி மகசூல், கால்நடை வளர்ப்பில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் சுயமுயற்சி, மன உறுதியுடன் படித்து நல்ல தரதேர்ச்சி காண்பர்.

பரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால் வாழ்வு வளம்
பெறுவதோடு மனதில் உற்சாகம் நிலைத்திருக்கும்.
உஷார் நாள்: 12.10.11 இரவு 7.56 மணி முதல் 15.10.11 காலை 7.24 மணி வரை
வெற்றிநாள்: அக். 1, 2
நிறம்: சிவப்பு, நீலம் எண்: 1, 6

துலாம் (சுற்றுலா செல்வீர்கள்)

தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுகின்ற துலாம் ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன், ராசிக்கு பன்னி: ரெண்டாம் இடத்தில் நீசம் பெற்றாலும் அனுகூலமாக உள்ளார். இந்த மாதம் கூடுதல் நற்பலன் தரும் கிரகமாக குருபகவான் செயல்படுகிறார். உடல்நலத்தை சீராக வைத்துக் கொள்வதால் மட்டுமே உங்களின் முயற்சி வெற்றிகரமாகும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்துவிடுவீர்கள். சமூகத்தில் இருக்கிற மதிப்புக்கு குறை எதுவும் நேராது. வீடு, வாகன பயன்பாட்டில் இருக்கிற நிலையை தக்கவைத்துக் கொள்வது போதுமானது. தாய்வழி உறவினர்களிடம் கருத்துவேறுபாடு உண்டாகலாம் கவனம். சுற்றுலா சென்று மகிழ்ச்சியோடு திரும்பும் வாய்ப்புண்டாகும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பர். தொழிலதிபர்கள் தொழிலில் சில பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிவரும். உற்பத்தி சிறந்து பணவரவு சீராகும். பணியாளர்கள் பணியில் குளறுபடியை சந்திக்கக் கூடும். வியாபாரிகள் அளவான மூலதனத்துடன் இயன்ற அளவு ரொக்கத்திற்கு பொருள் விற்பது நல்லது. தேவையில்லாமல் கடன் வாங்குவது கூடாது. பணிபுரியும் பெண்கள் பணிச்சுமையால் அவதிப்படக்கூடும்.  எதிர்பார்த்த சலுகைப்பயன்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். குடும்ப பெண்கள் பொறுப்புடன் குடும்ப பணியை நிறைவேற்றுவர். செலவு அதிகரிப்பதால் சேமிப்பு கரையவும் இடமுண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சராசரி விற்பனை, சுமாரான பணவரவு என்ற நிலையை அடைவர். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவோடு மக்களுக்கு சேவை செய்ய முற்படுவர். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். மாணவர்கள் கவனமுடன் படித்து நல்ல தரதேர்ச்சியும், ஆசிரியர்களின் பாராட்டும் பெறுவர்.

பரிகாரம்: மாரியம்மனை வழிபடுவதால் தொழிலில் சந்திக்கும் சிரமம் விலகுவதோடு, கடன் தொல்லையும் நீங்கும்.
உஷார் நாள்: 18.9.11 காலை 6 மணி முதல் 20.9.11 காலை 9.55 மணி வரை மற்றும் 15.10.11 காலை 7.24 மணி முதல் 17.10.11 அதிகாலை 5.18 மணி வரை
வெற்றி நாள்: அக்.3, 4
நிறம்: மஞ்சள், சாம்பல்   எண்: 3, 4

விருச்சிகம் (தாராள பணவசதி )

பிறருக்கு இயன்ற அளவு உதவும் விருச்சிகராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் கடகத்தில் நீசம் பெற்று உள்ளார். இருப்பினும் சூரியன், சனி, புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இந்த மாதம் ஆதாய
ஸ்தானத்தில் அமர்ந்து அளப்பரிய நற்பலன்களை தருகின்றனர். அவ்வப்போது மனச்சோர்வுக்கு ஆளாகலாம். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது அவசியம். புதிய வீடு, வாகனம் வாங்க நல்யோகம் உண்டு. தாயின் அன்பு, ஆசி பூரணமாக கிடைக்கும். புத்திரரின் சேர்க்கை சக வாசங்களை அறிந்து வழிநடத்துவது நல்லது. குடும்பத்தேவை அனைத்தும் நிறைவேற்ற தாராள பணவசதி துணை நிற்கும். ஆரோக்கியத்தை உயர்த்துவதில் அக்கறை உண்டாகும். தம்பதியரிடையே கருத்துவேறுபாடு உண்டாவதை தவிர்க்க முடியாது.தொழிலதிபர்கள் வளர்ச்சித் திட்டங்களை திறமையுடன் நிறைவேற்றுவர். உற்பத்தி, விற்பனை உயர்ந்து கூடுதல் பணவரவை பெற்றுத்தரும். அரசு சார்ந்த உதவி எளிதாக கிடைக்கும். பணியாளர்கள் கூடுதல் உழைப்பால் நன்மதிப்பு, பாராட்டு பெறுவர். குடும்ப செலவுக்கான பணவசதி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். சக பணியாளர்களிடம் தேவையற்ற விவாதம் கூடாது. வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணியை திறம்பட மேற்கொள்வர். விற்பனை சிறப்பதால் ஆதாயம் கூடும். சேமிக்கவும் வாய்ப்புண்டு. பணிபுரியும் பெண்கள் சுய கவுரவத்தை உயர்த்தும் விதமாக பணிகளை உற்சாகத்துடன் மேற்கொள்வர். பணியிலக்கை நிறைவேற்றி நிர்வாகத்தினரின் பாராட்டு கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் மனநிலை அறிந்து செயல்படுவது அவசியம். மனதில் ஆன்மிக எண்ணம் மேலோங்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தியை உயர்த்துவர். சந்தையில் போட்டிகுறையும். அரசியல்வாதிகளுக்கு  மக்கள் செல்வாக்கு கிடைக்கும். விவசாயிகளுக்கு தாராள மகசூல், கால்நடை வளர்ப்பில் நல்ல லாபம் வந்து சேரும். மாணவர்கள் லட்சிய மனதுடன் படித்து உயர்ந்த தரதேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: நடராஜரை வழிபடுவதால் தம்பதியர் ஒற்றுமை ஏற்படுவதோடு, வீட்டிலும் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
உஷார் நாள்: 20.9.11 காலை 9.55 மணி முதல் 22.9.11 மாலை 5.09 மணி வரை மற்றும் 17.10.11 அதிகாலை 5.18 மணி முதல் நாள் முழுவதும்
வெற்றி நாள்: அக். 6, 7
நிறம்: வெள்ளை, ஆரஞ்ச்   எண்: 2, 9

தனுசு (ஆபரண சேர்க்கை)

பிறர் புகழும் வகையில் உயர்வாழ்வு நடத்திடும் தனுசுராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் குரு ராசியை பார்க்கிறார். முக்கூட்டு கிரகங்களான சூரியன், புதன், சுக்கிரன் பத்தாம் இடத்தில் உள்ளனர். மனதில் நல்ல எண்ணங்கள் உதிக்கும். உங்கள் அன்றாட நடைமுறைகளை திட்டமிட்டு ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள். முயற்சி அனைத்தும் வெற்றி தரும். இளைய சகோதரரை அரவணைத்துச் செல்லும் அதே நேரத்தில் கண்டிக்கவும் தவற மாட்டீர்கள். வீடு, வாகனத்தில் புதிய மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்க யோகம் உண்டு. தர்ம, கர்ம, லாப ஸ்தான அதிபதிகள் தொழில் ஸ்தானத்தில் உள்ளதால் தொழிலில் சிறப்பான வளர்ச்சி உண்டாகும். புத்திரர்களின் செயல்பாடு உங்களை யோசிக்க வைக்கும். உங்களின் ஆலோசனை, உதவி அவர்களை முன்னேற வைக்கும்.  ஆரோக்கியம் பலம்பெறும். குடும்பத்திற்கு தேவை அனைத்தும் எளிதாக நிறைவேறும்.  தம்பதியர் அன்பு, பாசத்துடன் நடந்துகொள்வர். தொழிலதிபர்கள் உற்பத்தியையும், தரத்தையும் மேம்படுத்தும் முயற்சியில் இறங்குவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெறுவர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் இலக்கை நிறைவேற்றி நிர்வாகத்தினரின் ஆதரவு காண்பர். குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற கணிசமான பணவரவு கிடைக்கும். வியாபாரிகள் மூலதனத்தை அதிகரித்து விற்பனையை அதிகரிக்கச் செய்வர். லாபவிகிதமும் கூடும். வரவேண்டிய நிலுவைபணமும் எதிர்பாராத வகையில் வந்துசேரும். பணிபுரியும் பெண்கள் திறம்பட செயல்பட்டு பணி இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். தாமதமான சலுகைப்பயன்கள் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து நடந்து சந்தோஷ வாழ்வுமுறை காண்பர். ஆடை, ஆபரணச் சேர்க்கையால் மனம் மகிழ்வர். சுயதொழில் புரியும் பெண்கள் எல்லா வகையிலும் அனுகூலம் பெறுவர். உற்பத்தி, விற்பனை சிறந்து லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விவசாயிகள் கூடுதல் மகசூலுடன் கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் காண்பர். மாணவர்கள் நன்கு படித்து சிறந்த தரதேர்ச்சி அடைவர்.

பரிகாரம்: ரங்கநாதரை வழிபடுவதால் குடும்பத்தில் ஒற்றுமையும், பொருளாதார வளர்ச்சியும் உண்டாகும்.
உஷார் நாள்: 22.9.11 மாலை 5.09 மணி முதல் 24.9.11 இரவு 10.46 மணி வரை
வெற்றி நாள்: அக். 8, 9
நிறம்: கருநீலம், ரோஸ்   எண்: 1, 8

மகரம் (சேமிப்பு கரையும்)

பரந்த மனப்பான்மை கொண்ட மகரராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சனிபகவானுடன் அனுகூல சுக்கிரன், மாறுபட்ட குணத்துடன் சூரியன், புதன் ஒன்பதாம் இடத்தில் உள்ளனர். மனதில் குழப்பம் அவ்வப்போது தோன்றி மறையும். புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் பிறக்கும். இடம், பொருள் அறிந்து சமயோஜிதமாகப் பேசி வெற்றி பெறுவீர்கள். வீடு, வாகனத்தில் உரிய பராமரிப்பு பணிகளை நிறைவேற்றுவது நல்லது. தாயின் உடல்நலத்திற்காக தகுந்த சிகிச்சை பலன் தரும். புத்திரர் பிடிவாத குணத்துடன் செயல்படுவர். உடல்நல ஆரோக்கியம் குறைவுபடலாம்.  கடன் பற்றிய சிந்தனை அடிக்கடி மனதில் எழும். தம்பதியர் ஒற்றுமையுடன் செயல்படுவர். தொழிலதிபர்கள் உற்பத்தியை பெருக்குவதில் ஓரளவே வளர்ச்சி நிலை காண்பர்.  பணியாளர்கள் நிலுவைப் பணிகளில் கவனம் öŒலுத்துவர். வியாபாரிகள் கடின உழைப்பின் மூலம் விற்பனையை தக்கவைக்க முடியும். வெளியூர் பயணங்களில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை பின்பற்றுவது அவசியம். நிர்ப்பந்த பணக்கடனை ஓரளவே அடைபடும். பணிபுரியும் பெண்கள் பணிச்சுமைக்கு உட்படுவர். குடும்ப பெண்கள் குடும்பத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயல்படுவர். செலவு அதிகரிக்கும். @Œமிப்பு கரையும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சந்தையில் கூடுதல் போட்டி என்ற நிலை காண்பர். முக்கிய செலவுக்கு சேமிப்பு பணம் கரையும். அரசியல்வாதிகள் ஆதரவாளர்களின் நம்பிக்கையை தக்க வைப்பதில் அக்கறை காட்டுவர். விவசாயிகளுக்கு சுமாரான அளவில் மகசூல் உண்டு.கால்நடைகளாலும் சீரான லாபம் பெறுவர். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவதால் மட்டுமே படிப்பில் தரதேர்ச்சி பெறமுடியும்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் தெளிவான மனநிலையும், செயல்திறமும் உண்டாகும்.
உஷார் நாள்: 24.9.11 இரவு 10.46 மணி முதல் 27.9.11 அதிகாலை 1.21 மணி வரை
வெற்றி நாள்: அக்.10, 11, 12
நிறம்: சிவப்பு, மஞ்சள்  எண்: 1, 3

கும்பம் (குடும்பத்தில் மகிழ்ச்சி)

 பண்புடன் நடக்கும் குணம் கொண்ட கும்பராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சூரியன் உள்ளார். இந்த மாதம் அனுகூல பலன் தரும் கிரகங்களாக செவ்வாய், புதன், சுக்கிரன் செயல்படுகின்றன. எந்த செயலிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வர். வீடு, வாகனத்தில் அறிமுகம் இல்லாத எவருக்கும் இடம் தருவது கூடாது. பூர்வ சொத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். புத்திரர் படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல்நலக்குறையை சரிசெய்து உற்சாகம் பெறுவீர்கள்.  தம்பதியர்
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பர். தொழிலதிபர்கள் உற்பத்தி இலக்கை எட்டுவதில் பலவிதமான தடைகளைத் தாண்டி  சாதனை படைப்பர். பணியாளர்கள் உடல்நலத்தை சரிவர பேணுவதால் மட்டுமே பணி வாய்ப்புக்களை தகுந்தபடி நிறைவேற்ற இயலும். வியாபாரிகள் அளவான விற்பனை, அதற்கேற்ப பணவரவு என்கிற நிலையை அடைவர். பணிபுரியும் பெண்கள் பணிகளை திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே பணி இலக்கை நிறைவேற்ற இயலும். குடும்ப பெண்கள் செலவைக் குறைத்து சிக்கனமாக தேவைகளை நிறைவேற்றுவது நல்லது. தாய்வழி சீர்முறை
பெறுவதில் கண்டிப்பான மனநிலை கூடாது. சுயதொழில் புரியும் பெண்களுக்கு உற்பத்தி, விற்பனையை உயர்த்துவதில் முயற்சி தேவைப்படும். சேமிப்பு பணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும். சிலர் கடன் வாங்கவும்நேரலாம். அரசியல்வாதிகள் தன்னம்பிக்கை குறைவுக்கு ஆளாவர். சமூகப்பணியில் அக்கறை காட்டினால் எதிர்காலம் சிறப்பாக உருவாகும். விவசாயிகள் சாதாரண மகசூல், அளவான பணவரவு பெறுவர். கால்நடை வளர்ப்பில் கூடுதல் லாபம் உண்டு. மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே திட்டமிட்ட தரதேர்ச்சி கிடைக்கும்.

பரிகாரம்: அபிராமி அன்னையை வழிபடுவதால் தொழிலில் வளர்ச்சியும், பொருளாதார ஏற்றமும் கிடைக்கும்.
உஷார் நாள்: 27.9.11 அதிகாலை 1.21 மணி முதல் 29.9.11 அதிகாலை 3.46 மணி வரை
வெற்றி நாள்: அக்.13, 14
நிறம்: பச்சை, சிவப்பு   எண்: 5, 8

மீனம் (தொழிலில் வளர்ச்சி)

பேச்சில் இனிமை கொண்ட மீனராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய முக்கூட்டு கிரகங்களுடன் சனிபகவானும் உள்ளார். இந்த மாதம் அனுகூல பலன் தரும் கிரகங்களாக குரு, கேது மட்டுமே செயல்படுகின்றன. உங்கள் சொல்லுக்கு மரியாதை கிடைக்கிற இடங்களில் மட்டும் பேசுவது நல்லது. மனதில் ஆன்மிக நம்பிக்கை பலம் பெறும். வீடு, வாகனத்தில் பராமரிப்புச் செலவு அதிகமாகும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றி அவருடைய ஆசியைப் பெற்று மகிழ்வீர்கள். புத்திரர் பிடிவாத குணத்தினால் படிப்பு, செயல்திறனில் பின்தங்குவர். உங்களின் ஆலோசனையும், வழிகாட்டுதலும் அவர்களை நல்வழியில் செயல்பட வைக்கும். பூர்வசொத்தில் அளவான வருமானம் வரும். ஆரோக்கியம் சீராக இருக்க சத்தான உணவுமுறை, சீரான ஓய்வு பின்பற்றுவது நல்லது. எதிரிகளிடம் விலகுவதால் வேண்டாத சிரமத்தை தவிர்க்கலாம். தம்பதியர் சிறு விஷயத்திற்காகக் கூட கருத்து வேறுபாடு கொள்வர். அறிமுகம் இல்லாத எவருக்கும் உதவுவது, பணப்பொறுப்பு ஏற்பது கூடாது. தொழிலதிபர்கள் எதிர்கால வளர்ச்சிக்கு அடிகோலும் நோக்கில் சுறுசுறுப்பாக செயல்படுவர். உற்பத்தி, விற்பனை உயர்ந்து லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் ஆதரவைப் பெறுவர். சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் அளவான மூலதனத்தில் கடின முயற்சியின் மூலம் விற்பனை இலக்கை எட்டிப்பிடிப்பர். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் துரிதமாகச் செயல்பட்டு நிலுவைப்பணிகளை நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள் கணவரின் மனமறிந்து செயல்பட்டால் மட்டுமே குடும்பத்தில் நிம்மதி நிலைத்திருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, அதற்கேற்ப பணவரவு பெறுவர். அரசியல்வாதிகள் எதிரிகளிடம் இருந்து விலகி செயல்படுவது நல்லது. விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். மாணவர்கள் நண்பர்களுடன் வீண்பொழுதுபோக்கை குறைப்பதோடு கவனத்துடன் படிப்பதும் அவசியம்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதால் உடல்நலம் மேம்படுவதோடு, குடும்பத்தில் சுபநிகழ்ச்சியும் நடந்தேறும்.
உஷார் நாள்: 29.9.11 அதிகாலை 3.46 மணிமுதல் 1.10.11 காலை 6.16 மணி வரை
வெற்றி நாள்: செப்டம்பர் 18, 19
நிறம்: ரோஸ். நீலம்    எண்: 1, 9.

 
மேலும் துளிகள் »
temple
பல ஊர்களில் அருள்பாலிக்கும் நரசிம்மரின் திருப்பெயர்களைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் பெயர்களை  ... மேலும்
 
temple
இனிப்பு மகிழ்ச்சியின் அடையாளம். மகிழ்ச்சியின் வெளிப்பாட்டை கரும்புத்தொட்டில், சர்க்கரைப் பந்தல், ... மேலும்
 
temple
‘உள்ளங்கை நெல்லிக்கனி’ என கேட்டிருப்பீர்கள். இதன் பொருள் என்ன? ஒருவர் சொன்ன விஷயம் தெளிவாகப் ... மேலும்
 
temple
பயந்த சுபாவம் உள்ளவர்கள் நரசிம்மரை வணங்கி இந்த மூலமந்திரத்தை மூன்று முறை சொல்லி பயனடையலாம்.

உக்ரம் ... மேலும்
 
temple
புத்தாண்டு முதல் நாளில் விஷுக்கனி காண்பது மரபு. புத்தாண்டு காலையில், பூஜையறையில் சுவாமி படங்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.